என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mosque"

    • முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
    • இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

    நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 13 பேர் படுக்கையமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

    ஆனால் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து 3 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நைஜர், மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய 3 நாடுகளும் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக அல்கொய்தா உள்ளிட்ட ஜிகாதி கிளர்ச்சிக் குழுக்களால் நடத்தப்படும் கிளர்ச்சியை ஒடுக்க போராடி வருகிறது.  

    • உடுமலை ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி யூ.எஸ்.அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார்.
    • பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் ஏ.சம்சுதின் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தளி ரோடு தெற்கு குட்டை வீதியில் உள்ள 120 ஆண்டு பழமையான புனரமைக்கப்பட்ட ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் திறப்பு விழா நாளை 29-தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இவ்விழாவிற்கு உடுமலை ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி யூ.எஸ்.அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார். இமாம் எம்.முஹம்மது யூசுப்ஹசனி கிரா அத் செய்கிறார். செயலாளர் சையத் நூருல் ஹமீத் வரவேற்று பேசுகிறார். உடுமலை வட்டார அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், ஜமா அத்தார்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

    தலைமை இமாம்கள் செய்யிது ஈஸா (பூர்வீக பள்ளிவாசல்) முஹம்மது அப்துல்லாஹ் (ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல்) முஹம்மது யூசுப் (பிர்தெளஸ்ஸியா பள்ளிவாசல்) உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யூ.எஸ்.எஸ்.ஸ்ரீதர், சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம் கே.எல்.லூதர், பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் ஏ.சம்சுதின் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான், திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் ரூஹூல் ஹக் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    விழாவில் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம், உடுமலை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் பத்மநாபன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், துணைத் தலைவர் கலைராஜன், தி.மு.க. உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.முபாரக் அலி, காந்திநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஹக்கீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சையத் பக்ருதீன், அப்துல் அமீது, முஹம்மது அப்துல்லாஹ், சதாம் உசேன், காதர்உசேன், சையத் யூனூஸ் மற்றும் ஆடிட்டர் ஹக்கீம் ஆகியோர் செய்துள்ளனர்.

    • மக்கள் மிலாடி நபி கொண்டாட்டத்திற்காக ஊர்வலமாக செல்ல கூடியிருந்தனர்
    • குண்டு வெடிப்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பலியானார்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ளது பலுசிஸ்தான் பிராந்தியம். இதற்கு வடமேற்கே உள்ளது மஸ்டங் மாவட்டம்.

    இன்று, உலகெங்கும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிலாது நபி பண்டிகை என்பதால் இங்குள்ள மதினா மசூதிக்கு அருகே இப்பண்டிகையை கொண்டாடவும், பிறகு ஒரு ஊர்வலமாக செல்லவும் மக்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதில் 52 பேர் கொல்லப்பட்டனர்; 130 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளது.

    இந்த குண்டு வெடிப்பில் அங்கு காவல்துறை பணியின் காரணமாக வந்திருந்த மஸ்டங் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் பலியானார். கஷ்கோரியின் காருக்கு அருகே அந்த தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றதாக நகர காவல்துறை அதிகாரி மொஹம்மத் ஜாவெத் லெஹ்ரி தெரிவித்துள்ளார்.

    காயமடைந்தவரகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயமடைந்துள்ளவர்கள் க்வெட்டா (Quetta) பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    பலுசிஸ்தான் மாநிலத்தின் இடைக்கால செய்தித்துறை அமைச்சர ஜன் அசக்சாய், "மத சகிப்புதன்மையையும் அமைதியையும் அன்னிய நாட்டு சக்திகளின் உதவியுடன் அழிக்க எதிரிகள் நினைக்கின்றனர். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் முக்கிய அரசியல் தலைவர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது.
    • பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பலுசிஸ்கான் மாகாணம் மற்றும் கைபர் பக்துன்சலா மாகாணத்தில் உள்ள மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த 2 சம்பவங்களிலும் பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி சர்பராஸ் புக்டி கூறும் போது பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குலுக்கு இந்தியாவின் உளவு நிறுவனமே காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

    • இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது
    • பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை இன்று நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி நடநத ராமநவமி கொண்டாட்டத்தின் போது

    ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவது போன்ற செய்கை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



    பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்த தெலுங்கானா அரசை மாதவி லதா கடுமையாக கண்டித்து உள்ளார்.

    இது குறித்து மாதவி லதா கூறியதாவது :-



    "சமீபத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின் போது தான் ரம்ஜான் கொண்டாட்டம் இருந்தது.

    தற்போது ராஜா சிங்கிற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. அவர் நீண்ட காலமாக ராம நவமி ஷோபா யாத்திரை நடத்தி வருகிறார். தற்போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது " என  அவர் கூறினார்.

    • யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    • இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி

    பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.




    இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-

    'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்பு.
    • சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    ஆக்ராவின் தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாஜ்மகால் அருகே உள்ள மசூதிக்குள் முகம் நசுக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

    சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    • பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது.
    • சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பெருநாள் நேற்று [ஜூன் 17] திங்கட்கிழமை கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பக்ரீத் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் டெல்லியில் ஸ்திரத்தன்மையை இழந்து மசூதியின் பெரும்பகுதி இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பழைய டெல்லியில் சூடிவாலா பகுதியில் நெருக்கமான கட்டடங்கள் நிறைந்த தெருவொன்றில் இருந்த சங்கமர்மர் என்ற பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் சுதாரித்துகொண்டு அங்கிருத்தவர்கள் உடனே வெளியேறியனர். அதனைத்தொடர்ந்து மசூதியின் பெரும் பகுதி சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    சரியான நேரத்தில் மசூதியிலுந்தும் அருகில் இருந்த 3 கட்டிடங்களில் இருந்தும் அனைவரும் வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த தெருவில் உள்ள சாலை சற்று கீழிறங்கியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • போஜ்சாலா வளாகத்தில் போஜிஸாலா கோவிலும் அதன் அருகில் கமல் மவுலா மசூதியும் அருகருகில் உள்ளது.
    • கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது.

    மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தில் உள்ள வாக்தேவி சரஸ்வதி கோவில் மற்றும் கமல் மவுலா மசூதியும் ஒரே இடத்தில உள்ளது. மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டடமே இருந்ததாக சிலர் சர்ச்சையை கிளப்பிய நிலையில் போஜ்சாலா வளாகத்தை ஆய்வு செய்ய கடந்த மார்ச் மாதம் அம்மாநில உயர்நநீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்துக்கு [ASI] உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 'போஜ்சாலாவின் உள்ள கமல் மவுலா மசூதிக் கட்டடமானது ஏற்கனவே அங்கிருந்த கோவில் கட்டடத்தின் எச்சங்களிலின் மீது கட்டப்பட்டுள்ளது.

    மசூதியின் தரைப்பகுதி ஏற்கனவே இருந்த கல்வெட்டுகளின் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கோவிலின் தூண்கள் மசூதி கட்டடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  அந்த தூண்களில் இந்து கடவுளர்களின் சிதைந்த சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதுபோன்ற மொத்தம் 94 சிற்பங்கள் அங்கு தென்படுகிறது என்று தனது அறிக்கையில் ASI தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை வரும் ஜூலை 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் கன்வார் யாத்திரைக்கு வரும் சிவபக்தர்களை வரவேற்கிறோம்.
    • இதற்கு முன்பு இதுமாதிரி மசூதிகள் மறைக்கப்பட்டதில்லை

    புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள்.

    அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும்.

    இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள மசூதி மற்றும் மஸார் வெள்ளைத்துணி கொண்டு மறைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த வெள்ளைத்துணி அகற்றப்பட்டது.

    மசூதி வெள்ளைத்துணி வைத்து மறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் நயீம் குரேஷி, "முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் கன்வார் யாத்திரைக்கு வரும் சிவபக்தர்களை வரவேற்கிறோம். அவர்களுக்கு வரும் வழியில் உணவு, தண்ணீர் வழங்கி வருகிறோம். ஹரித்வாரில் உள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு இதுதான் உதாரணம். இதற்கு முன்பு இதுமாதிரி மசூதிகள் மறைக்கப்பட்டதில்லை" என்று தெரிவித்தார்.

    • பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்
    • கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமியர்களை மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று மகாராட்டிர பாஜக எம்.எல்.ஏ நிதேஷ் ரானாபொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் கடந்த மாதம் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில் ராம்கிரி மஹராஜூக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி[Kankavli] தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். 'மதகுரு மஹாந்த் ராம்கிரி மஹராஜூக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களின் மசூதிகளுக்குள் புகுந்து உங்களை ஒவ்வொருவராக வேட்டையாடுவோம் [chun chun ke marenge]. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று நிதேஷ் ரானே தெரிவித்தார். அவரின் பேச்சை கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது தட்டி ஆரவாரம் செய்தனர்.

    நிதேஷின் கருத்துக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நிதேஷ் பிரயோகித்த வார்த்தைகளுக்கு பாஜகவும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பொதுவாழ்க்கையில், குறிப்பாக அரசியல் வாதிகள் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது என்று பாஜக செய்தி தொடர்பாளர் துஷின் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நிதேஷ் மீது இரண்டு எப்.ஐ ஆர் கள் பதியப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×