என் மலர்
நீங்கள் தேடியது "Motorcycles"
- திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
- கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரத்தில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் பேரில் திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சோதனை மேற்கொண்டதில் திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் நிலைய சரகத்தில் 68 மோட்டார் சைக்கிள்களும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய சரகத்தில் 30 மோட்டார்சைக்கிள்களும், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 60 மோட்டார்சைக்கிள்களும், தெற்கு காவல் நிலைய சரகத்தில் 294 மோட்டார்சைக்கிள்களும், மத்திய போலீஸ் நிலைய சரகத்தில் 12 மோட்டார் சைக்கிள்களும், நல்லூர் போலீஸ் நிலைய சரகத்தில் 37 மோட்டார்சைக்கிள்களும் வீரபாண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 57 மோட்டார்சைக்கிள்களும் என மொத்தம் 564 மோட்டார்சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- பாளை மூன்றடைப்பை சேர்ந்தவர் பட்டுராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- பனயங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போய் இருந்தது.
நெல்லை:
பாளை மூன்றடைப்பை சேர்ந்தவர் பட்டுராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் பார்த்த போது அதனை காணவில்லை. இதேப்போல் பனயங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போய் இருந்தது.
இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்ற நபர்களை தேடிவருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஏ.டி.எம். மெக்கானிக் பலியானார்.
- முத்துக்குமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
அவனியாபுரம்
மதுரை விளாங்குடியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் முத்துக்குமார் (வயது 36). இவர் ஏ.டி.எம். மெக்கானிக்காக பணிபுரிந்தார்.
நேற்று மாலை இவர் அருப்புக்கோட்டையில் வேலையை முடித்துவிட்டு மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவனியாபுரம் அருகே உள்ள பெருங்குடி அருகே வந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனம் எந்தவித சைகையும் செய்யாமல் திடீரென்று திரும்பியது.
இதனால் முத்துக்குமார் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முத்துக்குமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
- பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களின் திருட்டு தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வந்தது.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பல்லடம் :
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களின் திருட்டு தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நேற்று பல்லடம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் அவர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் மனிஷ்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கருவம்பாளையத்தில் தங்கி இரவு நேரங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து புல்லட் உள்பட 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மர்ம ஆசாமிகள் 2 பேர் பூபதியின் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்றனர்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் குண்டடம் போலீஸ் சரகம் குள்ளாய்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது26), தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர் கடந்த 8-ந்தேதி குள்ளாய்பாளையம் விநாயகர் கோவில் அருகில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
நள்ளிரவில் அங்கு சென்ற மர்ம ஆசாமிகள் 2 பேர் பூபதியின் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்றனர்.இதுபற்றி பூபதி குண்டடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குண்டடத்தை அடுத்துள்ள திருப்பூர் பிரிவு போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் திருப்பூரை அடுத்த ஊதியூர் போலீஸ் சரகம் தாளக்கரையை சேர்ந்த பிரகாஷ் (30), மகேந்திரன் (29) என்பதும் இவர்கள் இருவரும் குள்ளாய்பாளையத்தில் பூபதியின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மோட்டார் சைக்கிளில் ‘வீலிங்’ செய்து செல்போனில் படம் எடுத்த 10 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
- 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெக நாதன் ஆலோசனையின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.
சொக்கிகுளம், வல்லபாய் மெயின் ரோட்டில் வாலிபர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்தும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மேற்கண்ட 10 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி ஆசிரியர் தெருவை சேர்ந்த பிச்சைபாண்டி மகன் மதன் (21), அவரது சகோதரர் கார்த்திக் (20), பழனிகுமார் மகன் தினேஷ்குமார் (24), இளங்கோவன் மகன் செல்லப்பாண்டி (22), உசிலம்பட்டி ஆனந்தா நகர் சுரேஷ் (26), அனுப்பானடி, கணேஷ் நகர் செல்வராஜ் மகன் ஹேமபிரபு(24), மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை சாகுல் ஹமீது மகன் முகம்மது இம்ரான் (19), நாகூர் கனி மகன் முகமது ஆசிக் (19), மாத்மா காந்தி நகர் கண்ணன் மகன் லோகேஸ்வரன் (19) கிருஷ்ணாபுரம் காலனி நயினார்ராஜ் மகன் ரமணா (19) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- ஏற்காட்டில் சட்டத்துக்கு புறம்பாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாக வாடகை ஆட்டோ, கார் டிரைவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
- சேலம் ஜங்ஷனில் உள்ள மோட்டார்சைக்கிள் கடையிலிருந்து 6 வாக னங்களை தினசரி 500 ரூபாய் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .
சேலம்:
ஏற்காட்டில் சட்டத்துக்கு புறம்பாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாக வாடகை ஆட்டோ, கார் டிரைவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
இதனால் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார், ஆய்வாளர் மாலதி உள்ளிட்டோர் ஏற்காடு பூங்கா அருகே நேற்று வாகன சோதனை நடத்தி னர். அப்போது வந்த ஒரு கும்பலை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கூறு
கையில் தாங்கள் மதுரை, சென்னையில் இருந்து வந்த தாகவும், சேலம் ஜங்ஷனில் உள்ள மோட்டார்சைக்கிள் கடையிலிருந்து 6 வாக னங்களை தினசரி 500 ரூபாய் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .
அதுபோல் ரோஜா தோட்டத்தில் நடத்திய சோத னையில் ஒண்டிக்கடையில் உள்ள கடையில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்த 3 மோட்டார்சைக்கிள்களை யும் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து ஏற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகே நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1,10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் போதை பழக்கம் காரணமாக தொடர்ந்து சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் இதில் போலீசார் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தனிப்படை
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வட்டாரங்களில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்களை கண்டுபிடித்து கைது செய்ய திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஆவுடை யப்பன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக் குமார் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் ஆறுமுகநேரியை சேர்ந்த ஹரிஷ் கிருஷ்ணன் ( வயது 20), கீழ சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் (19), திருச்செந்தூரை சேர்ந்த முத்துராமன் (21) என்பதும் அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
கைது
உடனடியாக அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1,10 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தியதாக மோட்டார் சைக்கிளையும் 3 செல்போன்களையும் பறி முதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் மூன்று பேரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வங்கி மேலாளர் பலியானார்.
- இவருக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளது.
அவனியாபுரம்
மதுரை அவனியாபுரம் கிளாட்வே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கிரண்குமார். இவர் அவனியாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். சம்ப வத்தன்று வழக்கம்போல் வீட்டிலிருந்து வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அவனியாபுரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வைக்கம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தார். அவரது மோட்டார் சைக்கிள் கிரண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கிரண்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடி யாக அவர் அவனியாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான கிரண்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாதம் ஆன கைக்குழந்தையும் உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
- கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த லோகநாதனுக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுத்தல் எடுக்கப்பட்டுள்ளது.
- சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.
குனியமுத்தூர்,
கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வியாபாரம் நடைபெறும். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த பொருட்களை வாங்க சிங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள்.இதனால் எப்போது இந்த சந்தை மற்றும் சந்தை பகுதியில் அதிகளவு கூட்டம் காணப்படும். வாகனங்களும் அதிகளவில் நிற்கும்.
காலை 8 மணி முதல் 9.30 வரை பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்கள் அதிகமாக செல்வதை காண முடியும். இந்த சந்தை திருச்சி சாலையில் செயல்படுவதால், அந்த வழியாக எப்போதும் பஸ்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கும்.
இந்த நிலையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உழவர் சந்தை முன்பாக நிறுத்தி விட்டு உள்ளே சென்று விடுகின்றனர். இதனால் திருச்சி சாலை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. ஒரு சில வியாபாரிகளும் சந்தை முன்பாக வெளியே கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர். இதனால் அங்கு கூட்டம் கூடுவதாலும் போக்குவர த்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகி ன்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு 2 வாசல் உள்ளது. திருச்சி சாலை மெயின் ரோட்டில் ஒரு வாசலும், வலது புறம் ஹவுசிங் யூனிட் செல்லும் வழியில் ஒரு வாசல் உள்ளது. ஹவுசிங் யூனிட் செல்லும் பாதை மிகவும் அகலமான பாதையாகும். அந்த விசாலமான பாதை எப்போதுமே சுதந்தரமாக இருக்கும்.
அந்தப் பாதையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் திருச்சி ரோடு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும். இதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவசரத்தில் வந்து வாகனத்தை நிறுத்தி அவசரமாக காய்கறிகளை வாங்கி செல்வது அவர்களது வழக்கம்.
தினமும் காலை வேளையில் அந்த பகுதியில் ஒரு போக்குவரத்து போலீசா ரை நிறுத்தி வாகனங்களை ஹவுசிங் யூனிட் செல்லும் சாலையில் நிறுத்தினால் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக காட்சியளிக்கும். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? காலை சமயங்களில் இந்த திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கண்டி ப்பாக போக்குவ ரத்து போலீசார் முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- நேற்று இரவு மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.
- திருட்டு குறித்து பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 22). அதே பகுதியில் வசித்து வருபவர் விக்ரம்(37). இவர்கள் 2 பேரும் தங்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம்.
நேற்று இரவும் வழக்கம்போல் மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பதை அறிந்த அவர்கள் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.