search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MoU"

    • இந்நிறுவனத்துடன்‌ எங்கள் துறையின் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்க்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்.
    • பேராசிரியை தமிழ்சுடர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.
    புதுச்சேரி:

    விநாயகாமிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை, சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி , புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி வேலைவாய்ப்பு அமைப்பின் மூலம் துறை மாணவர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்க லைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிக்காட்டுதலின் படி பெங்களூரு குவென்சு டெக்னோ வேலி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

    இதுகுறித்து துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

    குவென்சு டெக்னோ வேலி நிறுவனமானது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயலாற்றி வரும் முன்னனி மனிதவள ஆலோசனை மற்றும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்நிறுவனத்துடன் எங்கள் துறையின் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்க்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்.

    இதன் மூலம் இக்கல்லூரியில் பட்டயப்படிப்பை முடிக்க போகும் மாணவர்களுக்கு உலகளாவிய அளவில் பல்வேறு முன்னனி நிறுவனங்க ளில் வேலைவாய்ப்பு உறுதி யாக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஒப்பந்தத்தில் துறை யின் டீன் செந்தில்குமார் மற்றும் குவென்சு டெக்னோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாட்டினையும் துறையின் வேலைவாய்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை தமிழ்சுடர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.


    • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்படும்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதி பிரிவு) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் மாண–வர்களுக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்ப–டும்.

    இதன் மூலம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வேலை–வாய்ப்பு மற்றும் துறை சார்ந்த தொழில் தொடங்கு–வதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரிந்துணர்வு ஒப்பந் தம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலா–ளர் எம்.விஜயராகவன்,

    கல்லூரி முதல்வர் முனை–வர் அ.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குநர் ச.பிரபு, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோ–பல் சொல்யூசன் தனியார் நிறுவனத்தின் சார்பில் கிளை இயக்குநர் கே.கார்த்தி, கிளை மேலாளர் கே.சரவணன் ஆகியோர் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது.

    • பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • தாளாளர் ஆர்.சோலைசாமி, அட்வான்டேஜ் மேலாளர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சிவகாசி

    அமெரிக்காவின் பன்னாட்டு ஐ.டி. நிறுவ னமான ரெட்ஹாட் நிறுவனம் இந்தியாவில் ரெட்ஹாட் லினகஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் திறமை சாலியான மாணவர்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூ ரியின் அசோசி யேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி அமைப்பின் மூலமாக ரெட்ஹாட் நிறுவ னத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி சென்னை, அட்வான்டேஜ் மேலாளர் சுகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தென் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ரெட்ஹாட் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்குரிய மையமாக பி.எஸ்.ஆர். கல்லூரி திகழும் என்பது குறிப்பிடத்தக்து.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண் குமார், கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராம திலகம், பேராசிரியர் பால சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் மகேஷ்வரன், வசந்தகுமார் (அட்வான் டேஜ் புரோ) மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள்.
    • அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டடத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 4வது வருடம் அவர்களது சம்பளம் ரூ. 40,000 ஆக இருக்கும்.

    இந்நிலையில் அக்கினிபாத் வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கி வசதிகளை அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் பலன்கள் பாதுகாப்புத்துறை சம்பளத் தொகுப்பைப் போல இருக்கும் என்றும், கூடுதலாக, பணி நிறைவின்போது தொழில் முனைவராக மாற விரும்பும் அக்னிவீரர்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டம்.
    • தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக மேலாண்மை வணிகவியல் துறை, லண்டனில் உள்ள சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் பட்டய (ஏசிசிஏ) சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய பல்கலைக்கழக இயக்குனர் கே.தரணிக்கரசு, தேசிய கல்விக் கொள்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏ.சி.சி.ஏ. கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய சூழ்நிலையில் தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை மற்றும் பணிச் சூழல் மாறுதல்களின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்தராய, ஏ.சி.சி.ஏ-வின் தென்னிந்திய தலைவர் சரவணகுமார், சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜூ, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
    • மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    சென்னை:

    சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

    ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்:

    1. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி)

    2. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு)

    3. கோத்தாரி - SEMS குழுமம் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)

    4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி)

    5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)

    இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

    இதுதவிர காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    துறைவாரியாக, ஆய்வுகள் மேற்கொண்டு அத்துறை வளர்ச்சியை சீரான முறையில் நெறிப்படுத்தும் வகையில், துறை சார்ந்த கொள்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், தோல் அல்லாத காலணிப் பொருட்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்திடவும், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிடவும், ஏற்றுமதியைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையிலும் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர், தமிழ்நாட்டில் உள்ள சந்தை நிலவரங்களையும் அதன்மூலம் உருவாகும் முதலீடு வாய்ப்புகளையும் பற்றி உரையாடினார்கள்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
    • நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மற்றும் நாகர்கோவிலில் உள்ள பிரபல ரோபோடிக்ஸ் நிறுவனமான ''மேட் ஆட்டோமேசன்'' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    இதில் பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, மேட் ஆட்டோமேசன் நிர்வாக இயக்குநர் பிரவீன் மேத்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் கல்லூரியில் உள்ள ரோபோடிக்ஸ் ஆய்வு கூடத்தை புதிய தொழில்நுட்பம் மூலம் விரிவாக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் இந்த துறையில் வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி கொள்ள முடியும்.

    நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தொடக்க உரையாற்றினார். டீன் மாரிசாமி சிறப்புரையாற்றினார். மின்னனுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் பேசுகையில், ரோபோக்கள் பற்றியும், பல்வேறு துறைகளில் ரோபோக்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் எடுத்துரைத்தார். மருத்துவம், பெயிண்டிங், பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆய்வு, விவசாயி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை பற்றி எடுத்துரைத்தார்.மேலும் மனிதர்களின் மனதை கட்டுப்படுத்தும் ரோபோ பற்றியும், அதன் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னனுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், மீனா பிரகாஷ், ஐ.ஐ.சி. ஒருங்கிணைப்பாளர் தனம், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில், நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
    • முதல்-அமைச்சரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார்.

    திருப்பூர் :

    சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில் 4 ஆயிரம் ேபருக்கு வேலைவாய்ப்பு, நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தொழில் முதலீட்டு வழிகாட்டு குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா குல்கர்னி செய்திருந்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கே.ஆர்.நாகராஜன் கூறும்போது , தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தவிருக்கும் தொழில் முதலீடுகள் மூலமாக இ்ன்னும் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு அமைவதுடன், தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல பேருதவியாக இருக்கும் என்றார்.

    பல்கேரியா நாட்டின் சோபியா பல்கலைக்கழகத்தில் இந்தி இருக்கை அமைக்க அங்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையொப்பமானது. #Sofiauniversity #BulgariaPresident #RamNathKovind
    சோபியா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்கேரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் சோபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி ருமேன் ராடேவ்-ஐ ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்தார்.

    பல்கேரியா-இந்தியா இடையே அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா, அணுசக்தி மற்றும் பிறதுறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.



    மேலும், பல்கேரியா தலைநகரில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் இந்தி இருக்கை அமைப்பதற்கும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. #Sofiauniversity #BulgariaPresident #RamNathKovind
    சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மோடி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பின்போது 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #NarendraModi #Singapore #MOU
    சிங்கப்பூர்:

    இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த 29-ந்தேதி புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் சிங்கப்பூர் போய் சேர்ந்தார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பர நலன்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நட்புறவு கடற்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் அவர் கள் மறுஆய்வு செய்தனர்.

    இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே கடற்படை தளவாட ஒத்துழைப்பு உள்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதில், ‘வருகிற நாட்களில் சைபர் பாதுகாப்பு, பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பே பிரதானமாக இருக்கும்’ என பிரதமர் மோடி கூறியிருந்தார்.



    இதைப்போல இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாகி இருப்பதாக பாராட்டியுள்ள லூங், இரு நாட்டு கூட்டு கடற்பயிற்சியின் 25-வது ஆண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த சந்திப்பின் போது 6-வது நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிற்பம் ஒன்றை சிங்கப்பூர் பிரதமருக்கு மோடி பரிசளித்தார். இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்தமதம் பரவியதை நினைவுகூரும் வகையில் இந்த பரிசை அவர் வழங்கினார்.



    பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிங்கப்பூர் முன்னாள் தூதர் டாமி கோவுக்கு (வயது 80) இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார். அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுக்கான சிங்கப்பூர் தூதராக பணியாற்றி இருக்கும் இவர், அமெரிக்கா-சிங்கப்பூர் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா ஆசியான் கூட்டமைப்பின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு இந்த விருதை அறிவித்து இருந்தது.   #NarendraModi #Singapore #MOU

    ×