search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரி டீன் செந்தில்குமார் மற்றும் குவென்சு டெக்னோ நிறுவனத்தின்‌ தலைமை நிர்வாக அதிகாரி‌ ஆனந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர்.




    அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • இந்நிறுவனத்துடன்‌ எங்கள் துறையின் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்க்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்.
    • பேராசிரியை தமிழ்சுடர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.
    புதுச்சேரி:

    விநாயகாமிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை, சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி , புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி வேலைவாய்ப்பு அமைப்பின் மூலம் துறை மாணவர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்க லைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிக்காட்டுதலின் படி பெங்களூரு குவென்சு டெக்னோ வேலி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

    இதுகுறித்து துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

    குவென்சு டெக்னோ வேலி நிறுவனமானது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயலாற்றி வரும் முன்னனி மனிதவள ஆலோசனை மற்றும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்நிறுவனத்துடன் எங்கள் துறையின் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்க்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்.

    இதன் மூலம் இக்கல்லூரியில் பட்டயப்படிப்பை முடிக்க போகும் மாணவர்களுக்கு உலகளாவிய அளவில் பல்வேறு முன்னனி நிறுவனங்க ளில் வேலைவாய்ப்பு உறுதி யாக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஒப்பந்தத்தில் துறை யின் டீன் செந்தில்குமார் மற்றும் குவென்சு டெக்னோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாட்டினையும் துறையின் வேலைவாய்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை தமிழ்சுடர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.


    Next Story
    ×