என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Music concert"
- 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமமாண்ட நிகழ்ச்சியாக இந்த நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
திருப்பூர் :
இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி சிங்கப்பூர் கே.எஸ்.டாக்கீஸ் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் 23-ந்தேதி திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
இதுதொடர்பான போஸ்டர் வெளியீட்டு விழா திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு போஸ்டரை வெளியிட, சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சி குறித்து கே.எஸ்.டாக்கீஸ் தலைவர் கார்த்திக் கூறியதாவது:- இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி திருப்பூரில் முதல்முறையாக நடக்கிறது.
திருப்பூரில் சுமார் 19 லட்சம் பேர் வசிக்கும் நிலையில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் என்றால் அது கோவைக்கு சென்று மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அதை மாற்றும் விதமாக சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமமாண்ட நிகழ்ச்சியாக இந்த நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட்டுகளை வருகிற 23-ந்தேதி முதல் பேடிஎம், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.499, ரூ.999 உள்பட பல்வேறு கட்டணங்களில் டிக்கெட்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் பேசும்போது, "இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்தநாள் விழா திருபபூரில் நடக்கிறது என்பது மகிழ்ச்சயாக உள்ளது. இதுவரை திருப்பூரில் நடைபெறாத வகையில் மக்களை இசை மழையில் நனைய செய்யும் இந்த மிகப் பிரமாண்ட நிகழ்ச்சியை யாரும் விட்டுவிடக் கூடாது" என்றார். நிகழ்ச்சியில் சப்போர்ட்டிங் பார்ட்னர் அஜித்ராஜா, ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி துறையூர் ஸ்ரீ ரங்கா நுண் கலை மையம் சார்பில் கைசிகம் சங்கீத ஆராதனை ஏகாதசி இசை விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளு பாகல் மடத்தில் நடைபெறுகிறது.
- சமீப காலமாக முளுப்பகல் மடத்துக்கு சங்கீத ஆராதனை கேட்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
திருச்சி :
திருச்சி துறையூர் ஸ்ரீ ரங்கா நுண் கலை மையம் சார்பில் கைசிகம் சங்கீத ஆராதனை ஏகாதசி இசை விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளு பாகல் மடத்தில் நடைபெறுகிறது.
இந்த இசை விழாவினை வாய்ப்பாட்டு வித்துவான் ஜி. முத்துக்குமார், வயலின் வித்துவான் எம். பாலமுருகன், மிருதங்க வித்வான் வி.வி.கணபதி, சுப்பிரமணியம் ஆகியோர் நடத்துகிறார்கள். மேலும் ஸ்ரீரங்கம் குரு குககான சபாஇணை நிறுவனர் சியாமளா ரங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர நல சங்க செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. சீனிவாசன் கூறும் போது, எந்திர உலகில் இது போன்ற இசை விழாக்களில் பங்கெடுப்பது மனரீதியாக நல்ல பலனை அளிக்கிறது. சமீப காலமாக முளுப்பகல் மடத்துக்கு சங்கீத ஆராதனை கேட்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த சங்கீத ஆராதனை நிகழ்விலும் திரளான பக்தர்கள் பங்கேற்குமாறு கேட்டு க்கொள்கிறோம் என்றார்.
- ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளுபாகல் மடம் ஸ்ரீ ஸ்ரீ விக்ஞான நிதி சபா மந்திர் கல்யாண மண்டபத்தில் இன்று (22-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் 8 மணி வரை நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை மாபெரும் ஆடி வெள்ளி இசை விழா நடைபெறுகிறது.
- இசை விழாவில் பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் சிஷ்யர் கள் நாதஸ்வர வித்வான்கள் பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா ஷேக் மெகபூப் சுபானி, பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா காலிஷாபீ மெகபூப், எஸ். பெரோஸ் பாபு மற்றும் தவில் வித்வான்கள் ஸ்ரீரங்கம் பி.எம்.சங்கர், ஸ்ரீரங்கம் வி.ஜி.முருகன் குழுவினர் பங்கேற்கின்றார்கள்
திருச்சி :
திருச்சி நாத ஸூதா ரஸம் மற்றும் ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளுபாகல் மடம் ஸ்ரீ ஸ்ரீ விக்ஞான நிதி சபா மந்திர் கல்யாண மண்டபத்தில் இன்று (22-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் 8 மணி வரை நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை மாபெரும் ஆடி வெள்ளி இசை விழா நடைபெறுகிறது.
இந்த இசை விழாவில் பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் சிஷ்யர் கள் நாதஸ்வர வித்வான்கள் பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா ஷேக் மெகபூப் சுபானி, பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா காலிஷாபீ மெகபூப், எஸ். பெரோஸ் பாபு மற்றும் தவில் வித்வான்கள் ஸ்ரீரங்கம் பி.எம்.சங்கர், ஸ்ரீரங்கம் வி.ஜி.முருகன் குழுவினர் பங்கேற்கின்றார்கள்.
இந்த நிகழ்ச்சியை திருவாரூர் குஞ்சிதபாதம், நெய்வேலி நாகசுப்பிரமணியன், சேதுராமன், சுரேஷ் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளனர். விழாவில் பக்த கோடிகள், இசை பிரியர்கள் திரளானோர் பங்கேற்கிறார்கள்.
- புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இசை கச்சேரியை நடத்துகிறார்.
- இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
நியூயார்க் :
பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 28). ஜஸ்டிஸ் உலக சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாப் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஜூனில் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட விசயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ஜஸ்டிஸ் உலக சுற்றுலாவானது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். அவருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும்.
இதனால், முகம் முடக்குவாதம் ஏற்படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்க கூடிய ஆபத்து உள்ளது. அந்த வீடியோவில் அவர், மிக முக்கியம். இந்த வீடியோவை காணுங்கள். ரசிகர்களாகிய உங்களை நான் விரும்புகிறேன். உங்களுடைய பிரார்த்தனையில் எனக்கும் இடம் கொடுங்கள் என தலைப்பிட்டார்.
அவர் அதில் கூறும்போது, இந்த கண் துடிப்பு இல்லாமல் உள்ளது. இதனை நீங்கள் காணலாம். எனது முகத்தின் ஒரு பக்கத்தில் என்னால் புன்னகைக்க முடியவில்லை. மூக்கு துவாரம் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை. முகத்தின் ஒரு பக்கம் முழு அளவில் முடங்கி போயுள்ளது. முக முடக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அதனால், அடுத்த எனது நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்து விட்டதற்காக பெருத்த ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு, என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை என வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன். இது சற்று தீவிரம் வாய்ந்தது. நீங்கள் அதனை காணலாம் என்று கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, முகத்திற்கு வேண்டிய பயிற்சிகள் அளித்து வருகிறேன். ஓய்வு எடுத்து கொள்கிறேன்.
நான் என்ன சாதிக்க வேண்டும் என பிறந்தேனோ அதற்காக தயாராகி 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என தெரிவித்து உள்ளார். எனினும், அவர் முழுமையாக குணமடைந்து எப்போது திரும்பி வருவார் என்பதற்கான காலஅளவு எதனையும் தெரிவிக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று பரவலின்போது கடந்த 2 முறை அவரது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 3வது முறையாக இந்த சுற்றுப்பயணமும் தள்ளி வைக்கப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
24 கோடி பேர் தொடரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை, 37 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்து வேதனை அடைந்தனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர். இந்த சூழலில், ஜஸ்டின் பீபர் ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க வருகிறார்.
அவர் உலக சுற்றுலாவில் ஈடுபட உள்ளார். இதில் விரைவில் இந்தியாவுக்கும் வந்து பாப் இசை கச்சேரிகளை நடத்த இருக்கிறார். இதன்படி, இந்தியாவுக்கு வருகிற அக்டோபர் 18ந்தேதி வருகிறார். புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் அவர் இசை கச்சேரியை நடத்துகிறார். இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
ரூ.4 ஆயிரத்தில் இருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது. ஜஸ்டினுக்கு முக முடக்குவாதம் ஏற்பட்ட அதே வாரத்தில், அவரது மனைவி ஹெய்லி பீபர் கூறும்போது, ஒவ்வொரு நாளும் தனது கணவர் நன்றாக குணமடைந்து வருகிறார். இது அரிதான மற்றும் அதிக அச்சமூட்டும் விசயம் ஆகவும் இருந்தது என அவர் கூறினார்.
இதன்பின்பு கடந்த ஜூனில் இருவரும் சர்ச்சுக்கு ஒன்றாக செல்வது, நடப்பு ஜூலையில் சுற்றுலா செல்வது என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ஜஸ்டின் பீபர் முக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டபோது, வடக்கு அமெரிக்காவில் நடைபெற இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அவர் மீண்டும் புத்தெழுச்சி பெற்று பாப் இசை பாடல்களை பாட இருப்பது அவரது ரசிகர்களுக்கு புது உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்