search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national disaster"

    • இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
    • கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

    இதையடுத்து கேரளா மாநிலம் வயநாடு சூரல் மலையில் ஆற்றின் நடுவே இரவிலும் தொடந்து மீட்புபணிகள் நடந்து வருகிறது. சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணியானது நடைப் பெற்று வருகிறது.

    • முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
    • மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடர் தமிழர்களின் மனங்களை உலுக்கியிருக்கிறது. பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேரள மாநில மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தும் "தேசிய பேரிடர்" எனும் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

    • குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.
    • குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

    தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிக அருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாகவும், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசு, இந்திய ஒன்றிய அரசு விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.

    குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்! மோகன்தாஸ் - 9344624697 கார்த்திக் - 9080126335 பழனி - 8903289969 தியாகராஜன் - 6382953434

    • ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புயலால் பரவலான சேதங்களை மேற்கோள் காட்டினார்.
    • சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்பு வேண்டும்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட அழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புயலால் பரவலான சேதங்களை மேற்கோள் காட்டி, சந்திரபாபு நாயுடு அதன் பாதிப்பை பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

    இந்தச் சூழலில், "புயலின் தாக்கம் ஆந்திராவில் மட்டும் இல்லாமல், அண்டை மாநிலமான தமிழகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து, மிச்சாங் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்புமாறு பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தினார்.

    மேலும், "770 கிமீ சாலைகள் சேதம் மற்றும் குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பிற வசதிகளில் கணிசமான பாதிப்புகளுடன் ரூ. 10 ஆயிரம் கோடி வரை பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    பேரிடரை தேசிய பேரிடராக அங்கீகரிப்பது உடனடி நிவாரண முயற்சிகளுக்கு தேவையான உத்வேகத்தை வழங்கும், நீடித்த மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்பை நிறுவும்" என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #gajacyclone
    நாகப்பட்டினம்:

    நாகை தாலுகா அலுவலக நுழைவு வாயில் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால், நாகை நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து கலந்துகொண்டு பேசினார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த கால்நடைகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். புயல், கனமழையில் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும்.

    புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், பழைய காலனி வீடுகள் உள்ளவர்களுக்கு அரசு போர்க்கால அடிப்படையில் கான்கிரீட் வீடுகள் கட்டி தர வேண்டும். வேலை இழந்து வாழும் விவசாய தொழிலாளர்களுக்கு புயல் நிவாரண நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி வழங்கி ரூ.224 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜீவாராமன், மாதர் சங்க ஒன்றியச்செயலாளர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். #gajacyclone 
    கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #GajaCyclone #ThambiDurai
    கரூர்:

    கரூர் ஜெகதாபி ஊராட்சி பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் பழனிசாமி ஏற்கனவே புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்டார். அதன் பின்னர் பிரதமரை சந்தித்து நிவாரண தொகை கேட்டார். பிரதமரும் அன்றே மத்திய குழுவை அனுப்பி வைத்தார்.

    கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். அப்போது தான் தேவையான உதவிகள் கிடைக்கும். அதை மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நிவாரண உதவி தொகைக்கான உத்தரவினை பெற்றவர்களுக்கு நிச்சயம் பணம் வங்கி கணக்கிற்கு வரும். மு.க. ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தார்.

    இப்போது எதிர்கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சியை குறை சொல்கிறார். ஸ்டெர்லைட் வழக்கை எப்படி நடத்த வேண்டும் என அரசுக்கு தெரியும். வல்லுநர்கள் இருக்கிறார்கள். இதோடு எதுவும் முடிந்துவிடாது.

    மறு ஆய்வு மனு மீண்டும் தாக்கல் செய்ய முடியும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பது எடப்பாடி அரசின் முடிவான கொள்கை. எடப்பாடியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதற்கான முடிவினை எடுத்து செயல்படுகிறார்கள்.

    வைகோ மூத்த அரசியல் தலைவர், போராளி. எனக்கு அண்ணன் மாதிரி. தி.மு.க.வின் நிலைபாடு தொடர்பாக அவர்தான் விளக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டதாக வைகோ பாராட்டியுள்ளார். அது உண்மை தானே.

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 8 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இருக்கிறேன். இதற்கு முந்தை எம்.பி.க்கள் யாராவது இத்தனை கிராமங்களுக்கு சென்றார்களா? இது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. வாக்களித்த மக்களை சந்திப்பது என் கடமை.

    எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வெற்றி தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை. கஜா புயல் பாதிப்பை பார்த்து மத்திய குழுவினரே கண் கலங்கினார்கள். ஆகவே நிச்சயம் பிரதமர் தேவையான நிவாரண தொகையினை ஒதுக்குவார் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #ThambiDurai

    கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். #GajaCyclone #NationalDisaster #HCMaduraiBench
    மதுரை:

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் அழகுமணி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.



    கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

    அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியம் விசாரிப்பதாக தெரிவித்தனர். எனவே, வழக்கறிஞர் அழகுமணி மனு தாக்கல் செய்ய உள்ளார். #GajaCyclone #NationalDisaster #HCMaduraiBench

    நைஜீரியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களை தேசிய பேரிடர் பாதித்தவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. #NigeriaFlood
    லோகோஜா:

    நைஜீரியாவில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஓடும் முக்கிய ஆறுகளான நைஜர்- பெனு ஆகியவற்றின் கரையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. தொடர்ந்து மழை பெய்வதால் அதிக அளவு வெளியேறிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த 1 லட்சம் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளம் மற்றும் வீடுகள், கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியும் 100 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    மழை வெள்ளத்தால் நைஜீரியாவில் 10 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சோகி, டெல்டா, அனம்பரா, மற்றும் நைஜர் ஆகிய 4 மாகாணங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. எனவே, இந்த மாகாணங்கள் தேசிய பேரிடர் பாதித்தவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சோகி, நைஜர் ஆகிய மாகாணங்கள் நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ளன. டெல்டாவும், அனம்பராவும் தெற்கே உள்ளன. சோகி மாகாணத்தின் தலைநகரான லோசோஜோவில் நைஜர், பெனு ஆகிய 2 ஆறுகளும் ஓடுகின்றன. இதனால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு 36 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதேநிலை கடந்த 2012-ம் ஆண்டில் ஏற்பட்டது.

    வெள்ள நிவாரண பணிக்காக ரூ.60 கோடியை அதிபர் முகமது புகாரி ஒதுக்கி உள்ளார். மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். #NigeriaFlood
    கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ள இந்த இயற்கை சீற்றத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaRain #Keralaflood #RahulGandhi
    புதுடெல்லி:

    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அணைகள் திறப்பால் ஒட்டுமொத்த மாநிலமும் வெள்ளத்தில் மிதக்கிறது. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.



    மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. எனினும் பல இடங்களில் மக்கள் இன்னும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ள இந்த இயற்கை சீற்றத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘அன்புக்குரிய பிரதமரே, தயவுசெய்து கேரள வெள்ளப்பெருக்கை எவ்வித தாமதமும் இன்றி தேசிய பேரிடராக அறிவியுங்கள். நமது லட்சக்கணக்கான மக்களின் உயிரும், வாழ்வாதாரமும், எதிர்காலமும் ஆபத்தில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.   #KeralaRain #Keralaflood

    கேரளாவின் பேரழிவை ஏற்படுத்தி உள்ள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். #KeralaFloods #RahulGandhi #NationalDisaster
    புதுடெல்லி:

    கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பருவமழை பெய்துள்ளது. கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. கடந்த 8-ந் தேதி முதல் கேரளாவில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.



    முப்படையைச் சேர்ந்த வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி,  கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500  கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

    ‘கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று ராகுல் டுவிட் செய்துள்ளார்.  #KeralaFloods #RahulGandhi #NationalDisaster
    ×