என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NEW EXECUTIVES"
- நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ் மற்றும் பொருளாளராக ஜேசா ஆகியோருக்கு முன்னாள் அரிமா ஆளுநர் கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- இதில் சுமார் 7 பயனாளிகளுக்கு 50 கிலோ அரிசி, கல்வி பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி புறவழிச்சாலை தனியார் கார்டனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ் மற்றும் பொருளாளராக ஜேசா ஆகியோருக்கு முன்னாள் அரிமா ஆளுநர் கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் முன்னாள் அரிமா ஆளுநர் முருகன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுமார் 7 பயனாளிகளுக்கு 50 கிலோ அரிசி, கல்வி பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. வட்டார தலைவர் டாக்டர் ஆரோக்கிய பழம் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சங்கத்தின் தலைவராக ராஜா என்ற விஜி, செயலாளராக எஸ்.கே. அசோக், பொரு ளாளராக சந்தனகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- கூட்டத்தில் உறுப்பினர்கள் சாலை விதிகளை கடைபிடித்து ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நுகர்பொருள் விநியோ கஸ்தர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு எட்டையாபுரம் சாலையில் உள்ள வினியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக ராஜா என்ற விஜி, செயலாளராக எஸ்.கே. அசோக், பொரு ளாளராக சந்தனகுமார், துணைத் தலைவராக ஜெய பாஸ்கர், துணைச் செயலா ளராக ராஜகுரு, ஒருங்கி ணைப்பாளராக அசோக் குமார், கவுரவ ஆலோ சர்களாக பால சுந்தரம், சீனி வாசன், சந்திரகண்ணன், அழகுலட்சுமணன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல் செயற்குழு உறுப்பினர்களாக தினகரன், ரவிச்சந்திரன், தினேஷ் பாலாஜி, செல்லக்கனி, ஜெயமணி, கணேஷ்குமார், செல்வகுமார், ராமர், பெரியசாமி, செல்வராஜன் ஆகியோரும். புகார்க்குழு உறுப்பினர்களாக ஆனந்த், முத்துக்குமார், சங்கர நாராயணன், கோபால கிருஷ்ணன், மகாராஜன் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து விநியோ கஸ்தர்கள் சங்க நிர்வாகி அசோக்குமார் டாக்டர் பட்டம் பெற்றதற்கு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
கூட்டத்தில் உறுப்பி னர்கள் சாலை விதி களை கடைபிடித்து ஹெல் மெட் அணிந்து மோட்டார் சைக்கி ளில செல்ல வேண்டும். குடோன்களில் காலா வதியான பொரு ட்களை தனி இடத்தில் வைத்து காலாவதியான பொருள்கள் என்று பெயர் பலகை வைக்க வேண்டும். மக்களுக்கு தரமான, சுகாதாரமான பொருட்களை வியா பாரம் செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. அதற்கு உண்டான தேதி களில் உறுப்பினர்கள் தவறாது போர்டலில் பதிவிட வேண்டும். பொரு ட்களை விநி யோகிக்கும் போது பாலித்தீன் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய தமிழக அரசி ற்கு தொடர்ந்து கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மா னங்களை நிறைவேற்றினர்.
- புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்கத்தின் 2023- 24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தன்ராஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.
ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் கார்த்திக் மற்றும் பெண்கள் மேம்பாட்டு பிரிவு தலைவர் மீனா சுப்பையா, உதவி ஆளுநர் கிருபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிய தலைவராக டாக்டர். சதீஷ்குமார், செயலாளராக டாக்டர் முருகேசபாண்டியன், பொருளாளராக பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் முருகேசன், முகமது நஜ்முதீன், ராஜ்குமார், பத்ரிநாராயணன், கிருஷ்ணமூர்த்தி, காசி ஜெயராமன், பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பல்வேறு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் செயலாளர் முருகேசபாண்டியன் நன்றி கூறினார்.
- தூத்துக்குடி மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர்.
- விழாவுக்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார் .
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக டாக்டர். எஸ். மாரிமுத்து, செயலாளராக டாக்டர். எஸ். சிவசைலம், பொருளாளராக டாக்டர். ஆர்த்தி கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
விழாவுக்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார் . முன்னாள் தலைவர் எஸ். அருள்ராஜ், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை தலைவர் அபுல்கசன், துணைத்தலைவர் திரவியம் மோகன், செயலாளர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், பொருளாளர் அழக வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் தூத்துக்குடி இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது அணி சார்பில் தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கான பட்டி யலை வெளியிட்டுள்ளார்
- மாவட்ட அவைத்தலைவராக சண்முகசுந்தரம், மாவட்ட இணைச் செயலாளராக பார்வதி, துணைச்செயலாளராக ராஜா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது அணி சார்பில் தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கான பட்டி யலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-
தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படு கிறார்கள். அதன்படி மாவட்ட அவைத்தலைவராக சண்முகசுந்தரம், மாவட்ட இணைச் செயலாளராக பார்வதி, துணைச்செயலாளராக ராஜா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
ஒன்றிய செயலாளர்கள்
ராஜ்மோகன் ( சாத்தான் குளம்), முருகையா பாண்டியன் (கருங்குளம்), நல்லக்கண்ணு (ஸ்ரீவை குண்டம் மேற்கு), சரவணன் (ஸ்ரீவைகுண்டம் கிழக்கு), முத்துராம கிருஷ்ணன் (ஆழ்வார் திருநகரி மேற்கு)
பேரூர் செயலாளர்கள்
செந்தில் பெருமாள் (ஸ்ரீவைகுண்டம்) , பரம சிவன் (பெருங்குளம்), சின்னத்துரை (ஏரல்), ரமேஸ்குமார் (சாயர் புரம்), பிரியதர்ஷன் (ஆழ்வார்திருநகரி பேரூர்) , செல்லத்துரை (சாத்தான்குளம்). ஸ்ரீவை குண்டம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர்- ஞானேஸ்வரன், ஸ்ரீவை குண்டம் தொகுதி அமைப்பாளர்- முருகன், இணை அமைப்பாளர் கொம்பையா.
காயல்பட்டினம் நகர செயலாளர்- காதர் சாகிபு, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்- சிலுவை ரஜித், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், உடன்குடி ஒன்றிய செயலாளர் அமிர்தா மகேந்திரன், தென்திருப்பேரை பேரூர் செயலாளர்- பெருமாள், நாசரேத் பேரூர் செயலாளர் சாது இம்மானுவேல், ஆத்தூர் பேரூர் செயலாளர்- ராஜா, கானம் பேரூர் செயலாளர்- சூசை அண்டோ, ஆறுமுகநேரி பேரூர் செயலாளர்- சின்னத்துரை, உடன்குடி பேரூர் செயலாளர் வீரக்குமார் ஆகியோர் நியமனம் செய்யபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- சேவை திட்டங்களை உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு துரை. ஜானகிராமன், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆண்டிற்கான புதிய தலைவராக தமிழ்மணியும், செயலாளராக அசாருதீனும், பொருளாளராக இளங்கோ–வனும் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களை லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன் பதவியில் அமர வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.
சேவை திட்டங்களை உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் தொடங்கி வைத்தார். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆனந்தகுமார், நாகலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சால்வை அணிவித்து பாராட்டி பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு புடவை, அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
லயன்ஸ் சங்க நிர்வாகி பரந்தாமன் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து திருக்கனூர் கடைவீதி மற்றும் உட்புற தெருக்களில் திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள் டிஜிட்டல் பெயர் பலகைகளை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் வீரராகவன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்
- தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர்
திருச்சி:
ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபையில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் தலைமை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சி.செந்தில்குமார் இறைவணக்கம் பாடினார். விழாவிற்கு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். டி.ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.
நிர்வாகிகள் பெரியசாமி, சுப்பையாபிள்ளை, தேவராஜன், ராஜசேகரன், லோகநாதன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மங்கள் அண்டு மங்கள் உரிமையாளர் பி.மூக்கப்பிள்ளை புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ், உபதலைவராக டி.சாத்தனூர் பி.புரவி, செயலாளராக ஆலம்பட்டி என்ஜினீயர் சதீஸ்வரன், பொருளாளராக புத்தனாம்பட்டி செந்தில்குமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களிடம் பொறுப்புகளை மூக்கப்பிள்ளை ஒப்படைத்து தலைவருக்கு செங்கோல் கொடுத்து கௌரவித்தார்.
தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர். புதிதாக தலைவராக பதவியேற்றக் கொண்ட சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ் ஏற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் இலங்கை புஷ்பநாதன், மூர்த்தி, நாமக்கல் செல்வராஜ், பெங்களூர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சண்முகசுந்தரம், முசிறி ரமேஷ்பாபு, வி.சிதம்பரம், செந்தில் (எ) சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வாழ்த்துரை வழங்கினார்கள்.
முடிவில் துணைத்தலைவர் புரவி நன்றி கூறினார்.
- பதவியேற்பு விழாவிற்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
- அரசுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளிக்கு கேடயம்,பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் 18-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கீழப்பாவூரில் நடைபெற்றது.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கலைச்செல்வன், முருககிங்ஸ்டன், திருமலைக்கொழுந்து, ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடனடி முன்னாள் தலைவர் அருணாசலம் என்ற அந்தமான் அருண் வரவேற்றார். அறிவழகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
புதிய நிர்வாகிகளை முன்னாள் கூட்டு மாவட்டத்தலைவர் பிரகாஷ் பதவியில் அமர்த்தினார். தலைவராக இளங்கோ, செயலாளராக முருகன், பொருளாளராக பரமசிவன், முதல் துணைத்தலைவராக சுரேஷ், 2ம் துணைத்தலைவராக ஆனந்த், 3ம் துணைத்தலைவராக சிநேகாபாரதி, சங்க நிர்வாகியாக செல்வராஜ், சங்க உறுப்பினர் குழு தலைவராக வெண்ணிநாடார், சேவைத்தலைவராக அருணாச்சலம், சங்க அறக்கட்டளை பொறுப்பா ளராக ஞானசெல்வன், சங்க தகவல் தொடர்புத்தலைவராக லெட்சுமிசேகர் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
மேலும் முதலாம் ஆண்டு இயக்குனர்களாக திருப்பாண்டியராஜ், ராஜீ, மதியழகன், ராமசாமி என்ற தமிழ்செல்வன், 2-ம் ஆண்டு இயக்குனர்களாக சொக்கலிங்கம், ராஜேந்திரன்,கவுதமன், மாயவநாதன், அருணாசல முத்துசாமி, ராஜேந்திரன், ராமச்சந்திரபாண்டி, ஸ்ரீமுருகன் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.
ஞானசேகரன், ஜாண்சன், ஜெயன், சுப்பு ராஜ், ராஜாமணி, முருகேசன்,பாவநாசம் என்ற முத்துகுமார், சரோஜா, ஆனந்த் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவியேற்றனர். நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் செல்வகுமார், ராஜலிங்கராஜா, ராஜா, சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விழாவில் லதாஇளங்கோ, ரேவதி முருகன், முத்தமிழ்பரமசிவம், தமிழரசி, சிநேகா பாரதி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
2021-2022 ஆண்டு செயலர் அறிக்கையை சங்கச்செயலாளர் சுரேஷ் அளித்தார் . புதிய நிர்வாகிகளை கலைச்செல்வனும், உறுப்பி னர்களை ஜேக்கப்சுமனும் அறிமுகப்படுத்தினர். வட்டார தலைவர் செல்வம் வாழ்த்தி பேசினார். விழாவில், அரசுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளிக்கு கேடயம்,பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் கூட்டுறவு வங்கித்தலைவர் பால்துரை , வட்டார நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் கருத்தபாண்டிநாடார் , இலக்கிய மன்ற தலைவர் செல்வன் , தொழிலதிபர் கோல்டன் செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சங்கப்பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
- புதிதாக தேர்வான 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி சங்கத் தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக தில்லைநாயகம், பொருளாளராக துரைராஜ், சங்க ஆலோசகர்களாக ராஜேந்திரன், ஜெயபிரகாசம், பாலசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
- டாக்டர் சீனிவாசன் கௌரவ விருந்தினராக பங்கேற்கிறார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று மாலை துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு தலைமை விருந்தினராக ஆனந்த ஜோதி ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கௌரவ விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3000-ன் பப்ளிக் இமேஜ் சேர்மன் டாக்டர்.சீனிவாசன் கலந்து கொள்கிறார்.
சிறப்பு விருந்தினராக ராஜா கோவிந்தசாமி கலந்து பங்கேற்கிறார். விழாவில் புதிதாக தேர்வான 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி சங்கத் தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக தில்லைநாயகம், பொருளாளராக துரைராஜ், சங்க ஆலோசகர்களாக ராஜேந்திரன், ஜெயபிரகாசம், பாலசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகிகள் மகேஸ்வரன், அசோக் பெரியசாமி, மணிகண்டன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்