என் மலர்
நீங்கள் தேடியது "Nitin Gadkari"
- நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது.
- பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் தொடர்பாக நேற்று உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.64,809.86 கோடி வசூலாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகம். அதேநேரம் 2019-20-ல் இது ரூ.27,503 கோடியாக இருந்தது.
சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுகிறது. எனவே சுங்கக்கட்டணம் அவசியமானது. சிறந்த சாலையை நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதே கொள்கை ஆகும்.
நாங்கள் ஏராளமான பெரிய சாலைகள், 4 வழிச்சாலைகள், 6 வழிச்சாலைகளை அமைத்து வருகிறோம். பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.
இதற்காக வெளிச்சந்தையில் இருந்து நிதி பெற்று வருகிறோம். எனவே சுங்கக்கட்டணம் இல்லாமல் இவற்றை செய்ய முடியாது.
ஆனாலும் நாங்கள் மிகவும் நியாயமான முறையிலேயே இருக்கிறோம். 4 வழிச்சாலைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கிறோம். இருவழிச்சாலைகளில் வசூலிக்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கட்டண சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 மற்றும் தொடர்புடைய சலுகை ஒப்பந்தத்தின் விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளன.
இந்த சட்டப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பிரிவு மற்றும் ஒரே திசையில் 60 கி.மீ.க்குள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனவே உண்மையில் சில விதிவிலக்குகள் உள்ளன.
இந்த பாராளுமன்ற அமர்வுக்குப்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக நாங்கள் ஒரு புதிய கொள்கையை அறிவிக்க உள்ளோம். அதன்மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும்.
ஏனெனில் அதில் நாங்கள் நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்குவோம். அதன்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக எந்த விவாதமும் இருக்காது.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
- மந்திரி நிதின் கட்கரியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
- இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்.
சிலிகுரி:
மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். டார்ஜிலிங் சந்திப்புக்கு அருகில் உள்ள டகாபூர் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது அங்கு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மேடையில் இருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தான் மிகவும் சோர்வாக உணர்வதாக நிதின் கட்கரி அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் டார்ஜிலிங் பா.ஜ.க. எம்.பி. ராஜூ பிஸ்டாவின் இல்லத்திற்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மத்திய மந்திரி நிதின் கட்கரி கடிதம் ஒன்று வெளியிட்டார்.
- அதில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுத்தி தி.மு.க. எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக தனது பதில் கடிதத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய மந்திரி வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில், சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 60 கி.மீ. தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம். பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
- 3.14 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலத்தை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த சாதனையை படைத்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- வளங்களின் விலையைக் குறைப்பதிலும் கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம்
- மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானப் பணிகளில் இரும்பு பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கிறோம்.
புதுடெல்லி:
டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாட்டில் உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் 2024ம் ஆண்டு இறுதிக்குள் நமது சாலை உள்கட்டமைப்பானது அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும்.
நமது தளவாட செலவு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, இது 16 சதவீதமாக உள்ளது, ஆனால் 2024 இறுதி வரை, ஒற்றை இலக்கமாக, 9 சதவீதம் வரை கொண்டு செல்வோம் என உறுதி அளிக்கிறேன்.
கட்டுமானத் தொழில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய பொருட்கள் மற்றும் வளங்களில் 40 சதவீதத்தை பாதுகாக்கிறது. வளங்களின் விலையைக் குறைப்பதிலும் கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். சிமென்ட் மற்றும் இரும்பு ஆகியவை கட்டுமானத்திற்கான முக்கியமான பொருட்கள் என்பதால் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானப் பணிகளில் இரும்பு பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கிறோம்.
தூய எரிசக்தியான பசுமை ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருள். இந்தியா தன்னை ஒரு ஆற்றல் ஏற்றுமதியாளராக வடிவமைத்துக்கொள்ளும் வகையில் சிறந்த நிலையில் உள்ளது. இது இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனால் மட்டுமே சாத்தியமாகும். எதிர்காலத்தில், விமானம், ரெயில்வே, சாலை போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் தொழில்களில் பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் ஆதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி.
- நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மும்பை :
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி. இவரது சொந்த ஊர் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆகும். நாக்பூரில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளது.
இந்த நிலையில் 2 தடவை நாக்பூர் சவுக், காம்ளா பகுதியில் உள்ள நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் 2 முறை போன் செய்தபோதும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் எனவும் மிரட்டினார்.
மிரட்டல் குறித்து அலுவலக ஊழியர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாக்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.
- இனி, மாசுபடுத்தும் அரசு பஸ்கள் மற்றும் கார்கள் சாலைகளில் செல்லாது.
- மாற்று எரிபொருளுடன் கூடிய புதிய வாகனங்கள் வரும்.
புதுடெல்லி :
மத்திய-மாநில அரசுகள், அரசு போக்குவரத்துக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் லட்சக்கணக்கான வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட அரசு வாகனங்களை அப்புறப்படுத்துவது பற்றி போக்குவரத்து விதிகளில் ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. இதன்படி அந்த வாகனங்களை அப்புறப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் அவர் இதுதொடர்பாக பேசும்போது கூறியதாவது:-
15 ஆண்டுகளுக்கும் மேலான 9 லட்சத்துக்கும் அதிகமான அரசு வாகனங்களை அகற்றுவதற்கு நாங்கள் தற்போது ஒப்புதல் அளித்துள்ளோம். எனவே இனி, மாசுபடுத்தும் அரசு பஸ்கள் மற்றும் கார்கள் சாலைகளில் செல்லாது. அதற்கு பதிலாக மாற்று எரிபொருளுடன் கூடிய புதிய வாகனங்கள் வரும். இது காற்று மாசுபாட்டை பெருமளவு குறைக்கும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் அவை நிறுத்தப்படும். அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும்.
மாசுபடுத்தும் வாகனங்களுக்கு பதிலாக எத்தனால், மெத்தனால், பயோ-சி.என்.ஜி., பயோ-எல்.என்.ஜி. மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை எளிதாக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முறையான போக்குவரத்து அணுகுமுறையை நாடு பின்பற்றினால் 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு நிலை, நிகர பூஜ்ஜியத்தை அடைந்துவிடும். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய மின்சார பஸ்களை இயக்குவது காலத்தின் தேவை. இது மக்களை பொதுப்போக்குவரத்தை நோக்கி ஈர்க்க வைக்கும். மின்சார வாகனங்களில் தனியார் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பழைய அரசு வாகனங்களை அப்புறப்படுத்துவதோடு, அந்த வாகனங்களை சிதைப்பதற்கான நடவடிக்கை பற்றியும் போக்குவரத்து விதிகளில் கூறப்பட்டு உள்ளது. வாகன சிதைப்புக்கொள்கை பற்றி பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் 150 கி.மீ. தூரத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு சிதைப்பு மையமாவது அமைக்கப்படும் என நிதின் கட்காரி கூறியிருந்தார். இந்தநிலையில் பழைய அரசு வாகனங்களை ரத்து செய்வதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, நாட்டின் பாதுகாப்புக்காகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல தனியார் வாகனங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தகுதி சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சாலையை நல்ல நிலையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
- தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்.
சென்னை:
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
* ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
* ஒப்பந்ததாரர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே நிலவும் பிரச்சினையால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
* தற்போது சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால், உடனடியாக ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட வேண்டும்.
* சாலையை நல்ல நிலையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
* தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பூண்டியாங்குப்பம், சட்டநாதபுரம், நாகப்பட்டினம் இடையிலான 113 கிலோ மீட்டர் தூர பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
- முகையூர்-மரக்காணம் இடையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்று இ.சி.ஆர். எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை.
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படுமா? என்று பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. தலைவர் வைகோ எம்.பி. மற்றும் தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை இந்த கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும், என்றார்.
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக ரூ.24 ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளும் நடந்து வருகிறது.
விரிவாக்கத்தின்போது பாலங்கள், இணைப்பு சாலைகள், வாகன சுரங்க பாதைகள் போன்றவை அமைக்கப்படும். இப்பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
விரிவாக்கம் செய்யப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை 697 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இதனை 8 பிரிவுகளாக பிரித்து விரிவாக்கம் செய்து வருகிறார்கள். இதில் புதுச்சேரி முதல் கடலூர் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கிலோ மீட்டர் தூர பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவு பெறும் என தெரிகிறது.
இதுபோல மகாபலிபுரம்-முகையூர் இடையிலான 31 கிலோ மீட்டர் சாலை பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்த சாலை பணி முடியும் என்று தெரிகிறது.
மேலும் பூண்டியாங்குப்பம், சட்டநாதபுரம், நாகப்பட்டினம் இடையிலான 113 கிலோ மீட்டர் தூர பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
இதுபோல முகையூர்-மரக்காணம் இடையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையிலான சாலை விரிவாக்க பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மரக்காணம்-புதுச்சேரி இடையிலான 46 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்சாலை விரிவாக்க பணியில் தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி இடையிலான சாலை விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
சாலை விரிவாக்க பணிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வந்ததால் இது தொடர்பாக மாநில அரசுடன் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து கொண்டது.
கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சாலை விரிவாக்க பணிகள் வேகமாக நடப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் எனவும் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
- சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை.
புதுடெல்லி:
சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதிலளித்து கூறியதாவது:
கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் ரூ.4,183 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து ரூ.3,642 கோடியும், தமிழ்நாட்டில் இருந்து ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
பாஸ்டேக் முறை அறிமுகமானபின் சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை. சுங்கச்சாவடியை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.
- மத்திய மந்திரி நிதின் கட்கரி அலுவலகத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது.
- நிதின் கட்கரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது 2-வது முறையாகும்.
மும்பை:
பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவரது மக்கள் தொடர்பு அலுவலகம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஆரஞ்சு சிட்டி மருத்துவமனை எதிரில் உள்ளது.
இந்நிலையில், நிதின் கட்கரி அலுவலகத்துக்கு நேற்று காலை ஜெயேஷ் புஜாரி என்ற ஜெயேஷ் காந்தா என்பவர் போன் செய்தார். அவர் ரூ.10 கோடி தரவேண்டும் என கேட்டார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் நிதின் கட்கரியை தாக்குவேன் என மிரட்டினார். அவர் காலை 2 முறையும், மதியம் 12 மணியளவில் ஒரு முறையும் போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மிரட்டல் போன் அழைப்பு வந்ததை அடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்கரியின் வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதின் கட்கரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது 2-வது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி புஜாரி எனக் கூறி ஒருவர் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு போன் செய்து ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார். அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் வாகன போர்டலில் இணையும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று தெலுங்கானா மற்றும் லக்ஷதீப் பகுதிகளுக்கான விவரங்கள் மத்திய அரசு முனையத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

மத்திய அரசின் வாகன பதிவு முனையத்தில் உள்ள விவரங்களின் படி 2021 ஆம் ஆண்டு 3 லட்சத்து 29 ஆயிரத்து 808 யூனிட்கள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரத்து 679 யூனிட்கள் பதிவானது. இந்த வரிசையில், இந்த ஆண்டு துவங்கிய முதல் மூன்று மாதங்களிலேயே சுமார் 2.78 லட்சம் யூனிட்கள் பதிவாகி இருக்கின்றன.
நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி மக்களைவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.