என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "number"
- நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
- இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.
நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.
இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.
HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.
- கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர்.
- அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். ஏராளமானோர் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2016- ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 3.2 லட்சமாக இருந்தது.
தற்போது 2024-ம் ஆண்டில் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 12.3 லட்சமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். அங்கு 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
டெக்சாசில் 1.5 லட்சம் பேர், நியூ ஜெர்சியில் 1.1 லட்சம் பேர், இல்லினாய்சில் 83 ஆயிரம் பேர், வர்ஜீனியாவில் 78 ஆயிரம் பேர், ஜார்ஜியாவில் 52 ஆயிரம் பேர் உள்ளனர்.
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தின் முன்னாள் செயலாளர் அசோக் கொல்லா கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். அவர்களுடன் 10 ஆயிரம் எச்1பி விசா வைத்திருப்பவர்களும் வருகிறார்கள்.
அமெரிக்காவில் தெலுங்கு பேசுபவர்களில் பழைய தலைமுறையினர் பெரும்பாலும் தொழில்முனைவோராக உள்ளனர். அதே–சமயம் 80 சதவீத இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உள்ளனர் என்றார். இந்த தகவல் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர்.
- இந்தியர்கள் வருகை தற்போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத்துக்கு சென்றுவிட்டது. இதனால் மாலத்தீவு அரசு கவலை அடைந்துள்ளது.
மாலே:
நமது அண்டை நாடான மாலத்தீவு சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இயற்கை அழகு கொட் டிக்கிடக்கும் மாலத்தீவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தான் அந்த நாடு உள்ளது.ஆனால் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக சீன ஆதரவாள ரான முகமது முஸ்சு பதவி ஏற்ற பிறகு இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
மேலும் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் 3 மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த பிரச்சினைக்கு பிறகு மாலத்தீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு மொத்தம் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 198 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
அதற்கு அடுத்த இடத்தில் ரஷியா மற்றும் சீனர்கள் இருந்தனர். இந்த நிலையில் இந்தியர்கள் வருகை தற் போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத் துக்கு சென்று விட்டது. இதனால் மாலத்தீவு அரசு கவலை அடைந்துள்ளது.
இதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க மாலத்தீவை சேர்ந்த சுற்றுலா அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாலத்தீவு சுற்றுலா குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் பயணங்களை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இடம் பெறும் வகையில் இந்த ரோடு ஷோ நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மாலத்தீவு தலைநகர் மாலேவில் இந்திய அதிகாரி முனு மஹாவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இந்தியர்கள் வருகையை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா, பர மத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடு விக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளி களின் ஆதார் எண் அடிப்ப டையில் மட்டுமே விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகளுக்கும் வேலூர் அஞ்சல் அலுவல கத்திலும், பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவல கத்தி லும் வரும் திங்கட்கி ழமை அன்று ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதார் எண்ணுடன் இணை த்தல், சேமிப்பு கணக்கு தொடங்கு தல் மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளார்கள்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆதார் எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 14 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 957 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 15 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
- தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 953 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.
ஈரோடு:
கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் காலை 11.45 மணியில் இருந்து, ‘101’ என்ற தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் திடீரென முடங்கியது. பல முறை ‘101’ எண்ணை தொடர்புகொண்டும் ஊழியர்கள் யாரும் இணைப்பில் பேசவில்லை. இதனால் தீ விபத்து, கால்நடைகள் சாலையில் திரிவது, பாம்பு நடமாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் உதவி கிடைக்காமல் மக்கள் தவித்து போனார்கள்.
கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல் தொடர்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு (மின் இயக்கி கருவிகள் பழுது) காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். நேற்று காலை இந்த கோளாறு சரிசெய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 12 மணிக்கு முதல் கட்டமாக வட சென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் ‘101’ எண் செயல்பட தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் சென்னை நகரம் முழுவதும் வழக்கம்போல ‘101’ எண்ணை தொடர்புகொள்ள முடிந்தது. மேலும் 044-28559031, 28554309, 28294126 உள்ளிட்ட எண்களும் செயல்பட தொடங்கியது.
இதற்கிடையில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை சென்னையில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு 200-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்