என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "occasion"
- வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
- புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது
சேலம்:
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.4.67 கோடி செலவில் நடைபெற்ற திருப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பூக்களை தூவி சிறப்பு தரிசனம் செய்தனர்.
இதையொட்டி மாரியம்ம னுக்கு இன்று காலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடிமர பிரதிஷ்டை விழாவில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், உறுப்பினர்கள் ஜெய், ரமேஷ் பாபு, வினிதா, சுரேஷ்குமார், இந்து அறநிலை டி.சத்யா என்ற குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது.
- 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
- 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.
கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்துவிவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை , ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் , வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்),ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் ,2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், இதர பொருட்கள்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்ப்பட்ட 265கிராம ஊராட்சிகளிலும் மேற்படி கூட்டப்பொருட்கள் குறித்து 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, கிராம பொது மக்கள் மேற்படி கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மோடி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72- வது பிறந்த நாள் விழாவை யொட்டி சிறப்பு பூஜை, அன்னதானம், மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.
குட்லாடம்பட்டி முத்தாலம்மன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் ஓ.பி.சி.அணி தொழில் நுட்ப பிரிவு ஒருங்கி ணைப்பாளர் கே.ஆர்.முரளி ராமசாமி தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
குலசேகரன்கோட்டை பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் பார்வையற்றோர் இல்லத் தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் வேல்செழியன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், முன் னாள் ஊரக நகர் வளர்ச்சி பிரிவு பால்பாண்டி, தாஸ், மோகனசுந்தரம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஆடிவெள்ளியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
- இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் தினமும் கோட்ட பாளையம், மாதம் பாளையம், தோட்ட சாலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று வரலட்சுமி நோன்பு மற்றும் நாளை ஆடிவெள்ளியை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது. இன்றும் மூன்று நாட்களுக்கு பூக்கள் விலை உயர்ந்து காணப்படும் என்றும் அதன் பிறகு பூக்கள் விலை குறைந்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சஷ்டியையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.
- அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பணியாளர்கள் மட்டும் இன்றி தனியார் காவலாளிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கோவிலின் இரு பஸ்களும் காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சஷ்டியையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். குறிப்பாக முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய் கிழமை. இதே நாளில் மற்ற அம்சங்களும் சேர்ந்து கொண்டதால், சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
செவ்வாய்கிழமை, சஷ்டி இரண்டும் நேற்று இணைந்து வந்ததால் சென்னிமலை மலை முருகன் கோவிலில், அதிகாலை முதலே, பக்தர்கள் குவியத் தொடங்கினர். காலை முதல் இரவு வரை, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். பக்தர்கள் தர்ம தரிசனத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ. 25 கட்டண தரிசனத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சென்னிமலை முருகப்பெருமானை தரிசித்தனர்.
அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பணியாளர்கள் மட்டும் இன்றி தனியார் காவலாளிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கோவிலின் இரு பஸ்களும் காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்