என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officers"

    • நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
    • ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.

    இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார். தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாசாவில் வானிலை மாறுபாடு என்றும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று ஒரு மாத காலமே ஆகிறது.
    • தார் சாலையை கடப்பாறையால் குத்தியும், கிளறியும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சோதியக்குடி செல்லும் சாலையில் வள்ளுவர்தெரு உள்ளது.

    இந்த கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 400 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றது.

    இந்த சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று ஒரு மாத காலமே ஆகிறது.

    இந்த சாலை தரமாக உள்ளதா, முறைப்படி மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று திடீரென சம்பவ இடத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் நேரில் சென்று புதியதாக போடப்பட்ட தார் சாலையை கடப்பாறையால் குத்தியும், கிளறியும் தார் மற்றும் கருங்கல் ஜல்லிகளை வெளியே எடுத்து, தரமாக போடப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்தனர்.

    • புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து மறியல்.
    • கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சி, கண்ணன்மேடு கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து பாமணி இ.சி.ஆர். சாலையில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோதி பாஸ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, கொக்கலாடி ஊராட்சி மன்ற தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கோபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.பி சுந்தர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மறியில் ஈடுப்பட்டோர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    காமராஜ் எம்.எல்.ஏ. சந்திப்பு

    இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார். இதில் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் டி.சி. சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும்.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது. கலெக்டர் வினீத முன்னிலை வகித்தார்.

    இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது :-

    தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது திருப்பூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதவை, தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், ஆகிய திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். தமிழக அரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் வைப்புத்தொகை பத்திரத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரிடர் கால மீட்பு உபகரணங்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு.
    • கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைவர் பி.கே.ரவி கடலோரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

    இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்த அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காக தேவையான உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்த அவர் தேவையான கூடுதல் உபகரணங்களும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ஆற்றாங்கரை கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றாங்கரை கிராமத்தில் 2021-2022 அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அரசின் சார்பில் கிராமத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கணவர் இல்லாத வயது முதிர்ந்த பெண்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரகுராமர், கால்நடை உதவி மருத்துவர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரசல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, மகளிர் திட்ட மேலாளர் அருள்செல்வி, வார்டு செயலாளர் லெனின், கிளை செயலாளர்கள் பிச்சை, சிங்கராஜ், கருப்பசாமி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்கள் பெறப்பட்டது.
    • விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் பேராவூரணி வட்டத்தை சேர்ந்த சைபுநிசாபேகத்துக்கு தன் விருப்ப நிதியிலிருந்து விலையில்லா தையல் இயந்திரத்தினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்) , ஸ்ரீகாந்த் (வளர்ச்சி ), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாமரைக்குளத்தில், தற்போது நடைபெற்று வரும் மராமத்து பராமரிப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
    • குளத்தின் அளவீடுகள், தாமரை குளத்திற்கான நீர்வழிப்பாதைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆய்வு மேற்கொண்டனர்.

    அவிநாசி:

    அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தாமரைக்குளத்தில், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.இதில் குளத்தின் கரைகள் உறுதித் தன்மை, குளத்தின் அளவீடுகள், தாமரை குளத்திற்கான நீர்வழிப்பாதைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தாமரைக்குளத்தில், தற்போது நடைபெற்று வரும் மராமத்து பராமரிப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். தாமரைக்குளத்தின் மதகு பகுதியில் இருந்துஉபரிநீர் வெளியேறும் ராஜவாய்க்காலை தூர்வாரி அதன் நீர் வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.விரைவில் இதற்கான சர்வே நடத்தப்படும் என்று உதவி பொறியாளர் கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.
    • விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமைதாங்கி பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட த்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி த்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம், புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைக ளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சியை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் ,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷியா மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இத்தகைய நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏறுவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் மகளிா் சிலா் காத்திருந்தனா். இதனிடையே பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியபோது மகளிா் சிலா் பேருந்தை நிறுத்தியுள்ளனா். ஆனால், ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    ஆகவே அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அரசுப் போக்குவரத்துகழக திருப்பூா் 2 கிளை மேலாளா் வடிவேலிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மகளிா் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் 

    ஊரக வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இரவு நேர ஆய்வுகள், காணொளி ஆய்வுகளை நிறுத்த வேண்டும். 25 ஊராட்சிகளை கொண்டதாக ஊராட்சி ஒன்றியங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் விடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பெரும்பாலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின. வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது, அடுத்த கட்டமாக டிசம்பர் 14ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
    • தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வடக்கூர் வடக்கு தெற்கு தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்த வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.

    ஆனால் தற்போது அந்த சாலை வழியாக செல்ல ஆக்கிரமித்தவர் தடுக்கிறார்.

    எனவே மீட்டு தரப்பட்ட சாலையை எங்களது பயன்பாட்டுக்கு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பூதலூர் ஒன்றியம் புதுக்கரி யாபட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-

    சானூரப்பட்டி ஊரா ட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

    எனவே அரசுக்கு இழப்பீடு செய்த பணியாளர்கள், ஒப்பந்தகாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சம்பந்தபட்ட தனியார்களிடம் இருந்து மேற்படி தொகையை திரும்ப பெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    ×