என் மலர்
நீங்கள் தேடியது "Onion"
- ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது
- கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.
மனிதர்களின் பழமையான உணவுப்பொருள்களில் முக்கியமானது, வெங்காயம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது என்பதை அறிந்த பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.
ரோமை சார்ந்த மல்யுத்த வீரர்கள் உடல் அழகு கூடும் என்பதற்காக வெங்காயத்தை அரைத்து உடலில் பூசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.
வெயில் காலம் வந்து விட்டது. அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வியர்வையுடன் வீடு திரும்பும் அனைவரும் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.

ஒரு வெங்காயத்தை பொடிதாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நீர்க்கடுப்பு வராது. குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலந்தும் நெய்யில் வறுத்தும் சாப்பிட கொடுக்கலாம். இதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.
வெங்காயத்தை சிறிதளவு தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது.
பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்ய கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது. ஆன்டி-செப்டிக் தன்மையானது காச நோயை வரவிடாமல் தடுக்கிறது.
நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
நாம் உடலிலிருந்து மலம் வெளியேறுவதில் சிரமம் இருந்தால் அந்த சமயம் ஆசனக்கடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடியது. வெங்காயத்தை வதக்கி அதை நாம் சாப்பிடும் போது நம் உடல் உஷ்ணம் குறைந்து, ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். மலம் சுலபமாக வெளியேறும்.

வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும்.
நம் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. நம் உடலையும், மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.
- தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.
- 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் கடைவீதி ,ஆற்றோரம் தெரு, ஆனந்தா காய் மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தினமும் 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
தற்போது பெரிய வெங்கா யத்தில் சிறிய அளவு 1 கிலோ ரூ.25-30 எனவும், பெரிய அளவு ரூ.35-40 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-20 வரை விற்பனை ஆன தற்போது ரூ.40-60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது.
- தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது.
சேலம்:
மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து வழக்கத்தை விட அதிகமாக வெங்காயம் லோடு சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி, உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள், தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக அளவில் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை பெரிய வெங்காயம் கடைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் முதல் ரகம் 3 கிலோ ரூ.100-க்கும், 2-ம் ரகம் 4 கிலோ ரூ.100-க்கும், 3 ரகம் 5 கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
- வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது.
- சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது.
வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஆந்திரா வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.12 வரை விற்கப்பட்டது. நாசிக் மற்றும் கர்நாடகா வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ15 வரை விற்பனை ஆனது. பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சென்னையில் முக்கிய தெருக்களில் தள்ளுவண்டி மூலம் வியாபாரிகள் பலர் கூவி, கூவி வெங்காய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து வெங்காய வியாபரிகள் கூறும்போது, 'ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக வெங்காயம் உற்பத்தி வழக்கத்தை விட 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் நாட்களிலும் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு இல்லை' என்றனர்.
- திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
- இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
பரமத்திவேலூர்:
வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை கடந்து செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை, பரமத்திவேலூர் காவிரியின் இரட்டை பாலத்தை கடந்தும் செல்கிறது.
ஏராளமான போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காவிரி பாலம் அருகே பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெரிய வெங்காயம் பாரம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் உதவியுடன் கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். லாரி பள்ளத்தில் விழாதபடி தடுத்து, வெங்காய பாரத்தை வேறு லாரிக்கு மாற்றினர். அதன் பிறகு லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.
- விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர்.
- கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது.
குண்டடம் :
குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி ராசு கூறியதாவது;- குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.
கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது.
சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு எந்த பயிர்களையும் உற்பத்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுவிடும். இதனால் அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். உரம், இடுபொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை. தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை.
எனவே அரசு முன்வந்து விவசாயிகளை பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.
- தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரம்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோ ரூ.15 அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.
- மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
- எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
மதுரை:
வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.
- கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் வெங்காயம் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.
- வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது.
நெல்லை:
வீட்டு சமையல் மட்டுமின்றி ஓட்டல்கள், சுபநிகழ்ச்சிகள் பரிமாறப்படும் சமையலில் அத்தியாவசிய இடத்தை பிடிப்பது வெங்காயம் ஆகும். வெங்காயம் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதன் பங்கு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
உற்பத்தி குறைவு
இதனால் அதன் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெங்காயம் குளிர்கால பயிராகும். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் அதன் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் வெங்காயத்தின் உற்பத்தி வழக்கத்தைவிட குறைந்தது.
ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது. இதனால் தேவையை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெங்காயம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் மூலமும் சிறிய வியாபாரிகள் தெருத்தெருவாக சென்று வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்.
விலை வீழ்ச்சி
வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த ஒரு வாரமாகவே வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. அதன்படி ரூ. 15 முதல் ரூ. 18 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நெல்லை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 12 முதல் ரூ. 17 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்களும் போட்டி போட்டு அதிகளவில் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.
- சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.
போரூர்:
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் புங்கனூர், வி-கோட்டா, பலமனேர், குப்பம், மதனப்பள்ளி மற்றும் கர்நாடகா மாநிலம் கோலார், ஒட்டுப்பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
தினசரி 55 முதல் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் வெங்காயத்தின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது. ரூ.15-க்கு விற்கப்பட்ட பெரியவெங்காயம் இன்று ரூ.20-க்கு விற்பனை ஆனது. வரும் நாட்களிலும் இதே விலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.
இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.65-க்கும், வரி கத்தரிக்காய் ரூ.45-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும் விற்பனை ஆனது.
தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. நேற்று 40 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று 50 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து இருக்கிறது என்றார்.
- சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை, இரவில் மழை பெய்கிறது.
- லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்க ளில் எடுத்து வரப்படும் வெங்காயம் வரும் வழியில் மழையில் நனைந்து விடுவ தால் விரைவில் அழுகி விடுகின்றன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள், தினசரி காய்கறி மார்க்கெ ட்டுகள், சேலம் லீபஜார் மார்க்கெட் ஆகியவற்றுக்கு பெரிய வெங்காயம் மேட்டுப்பாளை யம், பெங்களூரு, மகா ராஷ்டிரா, குஜராத் மாநி லங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
3 மாதங்கள் வரை அழுகாமல் இருக்க நன்கு உலர்த்தப்பட்டு, ஈரத்தன்மை எதுவும் இல்லாதபடி குடோன், குளிர்பதன கிடங்குகளில் பதப்படுத்தப்ப டுகிறது. ேம, ஜூன் மாதங்க ளில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிகளவில் வெங்காயத்தை இருப்பு வைப்பர்.
சுட்டெரிக்கும் வெயில்
தற்போது சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை, இரவில் மழை பெய்கிறது. இதனால் குடோன்களில் இருப்பு வைத்த வெங்காயம், மழைநீர், குளிர் காற்றால் விரைவில் அழுகும் நிலையை எட்டி விடுகிறது.
அத்துடன் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்க ளில் எடுத்து வரப்படும் வெங்காயம் வரும் வழியில் மழையில் நனைந்து விடுவ தால் விரைவில் அழுகி விடுகின்றன.
இப்படி அழுகும் வெங்கா யத்தை அப்புறப்ப டுத்த செலவு செய்ய வேண்டும் என்பதால், ஒரு சில வியா பாரிகள் சேலத்தில் லீபஜார் சாலை, சூரமங்கலம் பிரதான சாலை, செவ்வாய்ப்பேட்டை ஆகிய இடங்களில் கொட்டி விடுகின்றனர். பருவ நிலை மாற்றத்தால் வெங்காயம் விரைவில் அழுகி விடுவதால் தொடர்ந்து வியாபாரிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
- இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும்
- நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயைத் தவிர்க்க உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தையும் சேர்க்கலாம்.
இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும், இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு வெங்காயத்தில் கிட்டத்தட்ட 44 கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, போலெட், பொட்டாசியம், சல்பர் போன்றவை அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தில் கிட்டத்தட்ட 17 வகையான பிளாவினாய்ட்ஸ், (ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ்) இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 11 ஆகும். இது மிகக் குறைந்த அளவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், குறிப்பாக ஆன்தோசயனின் மற்றும் கொர்சிட்டின், செல்களின் அழற்சியை குறைத்து நீரிழிவு நோய், இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் கொர்சிட்டின், கணையம், கொழுப்பு, கல்லீரல் மற்றும் தசைகள் உள்ள செல்களுடன் ஒருங்கிணைந்து சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கிறது.
கோடையில் வெங்காயம் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதோ வெப்பத்தை ஏற்படுத்தாது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையானதாக வைத்திருக்கும்.
வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள அதிகமான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக எஸ்சர்சியா, ஸ்டபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் வராமல் ஓரளவு தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள 'ஆனயானின் ஏ' என்ற வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதாலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பிளவினாய்ட்ஸ் அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிகவும் குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
- நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன்
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health