என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pada yatra"
- ஆக்ராவில் நடக்கும் ராகுல் காந்தி பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
- மார்ச் மாதம் முதல் வாரம் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேசத்துக்கு செல்ல உள்ளது.
லக்னோ:
காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த பாத யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மொரதாபாத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
இருவரும் காரின் மேலே அமர்ந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பொதுமக்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை அசைத்தபடியும் சென்றனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பலர் ஆர்வமுடன் கை குலுக்கினர். பாதயாத்திரையை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் சம்பல், அம்ரேகா, கத்ரஸ், அலிகர், ஆக்ரா, பதேப்பூர் சிக்கிரி மாவட்டங்களில் நடக்கும் பாத யாத்திரையிலும் பிரியங்கா கலந்துகொள்வார் என தெரிய வந்துள்ளது.
ஆக்ராவில் நாளை நடக்கும் ராகுல் பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து, மார்ச் முதல் வாரம் ராகுல் காந்தியின் யாத்திரை மத்திய பிரதேசத்துக்குச் செல்ல உள்ளது. அந்த யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராகுல் காந்தியின் பாத யாத்திரை தற்போது பீகாரில் நடைபெறுகிறது.
- மகாத்மா காந்தி படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாட்னா:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-ம் கட்டத்தை கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.
பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, அதன்பின் மேற்கு வங்காளத்திற்குள் நுழைந்தது. இதையடுத்து, தற்போது மேற்கு வங்காளத்தில் இருந்து பீகாருக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், பீகாரில் இன்று 2-வது நாளாக யாத்திரை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
பீகாரின் அராரியா பகுதியில் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்துக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடக்கும் பேரணியில் இன்று ராகுல் உரையாற்றுகிறார்.
- முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
- உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.
இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.
புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.
- கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.
- 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து மெக்காவை அடைந்தார்.
திருவனந்தபுரம் :
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியை சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர் (வயது 29). இவர் நடந்தே மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.
இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஷிஹாப் சோட்டூர் பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார். கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவூதி அரேபிய எல்லைக்குள் நுழைந்த அவர், அதன் பிறகு முஸ்லிம்களின் புனிதத் தலமான மதீனாவுக்கு சென்றார். அங்கு 21 நாட்கள் தங்கி இருந்தார்.
அதன்பிறகு மெக்காவுக்கு புறப்பட்டார். மதீனாவிற்கும் மெக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ. தூரத்தை ஷிஹாப் 9 நாட்களில் கடந்துள்ளார். மெக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப்பின் சிறு வயது கனவு என்றும், இதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
அவர் 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து தற்போது முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை அடைந்தார். இவர் தன்னுடைய மெக்கா புனித பயணம் குறித்த வீடியோ பதிவுகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தார்.
இதன்மூலம் மெக்காவுக்கு நடந்தே சென்ற சாதனைப் பட்டியலில் ஷிஹாப் இடம்பிடித்துள்ளார்.
- ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை தொடங்குகிறார்.
- யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையை தொடங்குகிறார்.
150 நாட்களில் 3,500 கிலோமீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ம் தேதி நடக்கிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க. மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டை பிளவுபடுத்துவதற்கான யாத்திரை. ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை, மக்களை ஒன்றுசேர்க்கும் யாத்திரை என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கையில் மஞ்சள் பூசிய குச்சியில் வேப்பிலைகளை கட்டி கொண்டு வந்த பக்தர்கள் அதனை வைத்தீஸ்வரன் கோவில் கொடி மரத்து முன்பு போட்டு விட்டு சென்று சாமி தரிசனம் செய்தனர். சித்திரை மாதம் 2-ம் செவ்வாய் கிழமையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்கு மாட்டு வண்டிகளிலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியை சேர்ந்த ஒருவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது கனவில் தோன்றிய தையல் நாயகி அம்மன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும்படி கூறியுள்ளார். அதனை ஏற்று அவர் பாதயாத்திரையாக வந்து தையல் நாயகி அம்மனை தரிசனம் செய்ததும் அவரின் நோய் குணமாகி விட்டது.
இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தையல் நாயகி அம்மனை தங்களது குல தெய்வமாக வழிபட தொடங்கினர். அவர்கள் சித்திரை 2-வது செவ்வாய் கிழமை கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை உருவாக்கினர். அன்று முதல் இந்த வழிபாடு காலம் காலமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் முருகனின் முக்கியமான ஆலயங்கள் உள்ள இடங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் திருப்பரங்குன்றம், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், திருச்சீரலைவாய் மற்றும் பழமுதிர்சோலை போன்றவை. இவற்றில் நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம், தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது பழனி. மிக்க அழகுடைய தங்க தேர், தங்கமயில் வாகனம் ஆகியவை உள்ள தலமாகும்.
தேவர்களை துன்புறுத்தி வந்த சூரனை அழித்து. கிரவுஞ்சி மலையையும், தனது வேலினால் உடைத்து தேவர்களை முருகன் காப்பாற்றினார். அந்த வெற்றியை கொண்டாட இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து தந்தார். அதற்கு பின்னரே முருகன் வாழ்வில் வள்ளி வந்தார்.
அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் முருகனிடம் நிறைவு தீட்சை பெற்று மரணமில்லா பெருவாழ்வு எய்தினர். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிணாமத்திற்கு மாற்றிக் கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்து காட்டியதால் பெம்மான் முருகன் பிறவான், இறவான் என்று அருணகிரிநாதரால் பாட பெற்றார்.
பாத யாத்திரை என்ற நடைபயணம் அதில் ஒரு மார்க்கம். கடவுளின் அருளை பெறுவதற்காக பாதயாத்திரை செல்கின்றனர். தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உள்ளன. முருகப்பெருமானை வணங்குவதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற கந்தனை மக்கள் வணங்கி செல்கின்றனர். மேலும் பாத யாத்திரையின்போது ஏற்படும் மனஉறுதி உடலுக்கும் வலிமை சேர்கிறது.
மனிதனின் உலக பற்று மீதான அபரிமிதமான ஆசைகளை விலக்கி அமைதியான, மகிழ்ச்சியான தெய்வீக தன்மையுடன் கூடிய வாழ்வை பெற பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர். ஒரு மனிதன் நற்பண்புகளை பெற்று தெய்வ பக்தி பெற பாதயாத்திரை வழிவகை செய்கின்றது. குறிப்பாக கிராமங்களில் ஒற்றுமையுடன் கூடிய சமூக வாழ்க்கையை கடைபிடிக்க இது பெரிதும் உதவுகிறது. நிலையற்றதே இந்த வாழ்க்கை என்ற தத்துவத்தை புரிந்து கொள்ள உதவுகின்றது.
இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரியில் மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், வடக்குரதவீதியில் உள்ள முத்தாரம்மன் கோவில், வடக்கு தெருவில் உள்ள பிரானோபகாரி தர்ம மடம் சுப்பிரமணியசாமி கோவில், கற்பக விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அஞ்சுகிராமம், செட்டிகுளம், கூடங்குளம், நவலடி, திசையன்குளம், உடையன்குடி வழியாக திருச்செந்தூர் கோவிலை சென்றடைகிறார்கள்.
தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே சென்று முருகனை வழிபடுகிறார்கள். பெயர் தான் தைப்பூசமே தவிர... மார்கழி தொடக்கத்தில் இருந்தே பக்தர்கள் சாரை, சாரையாக பழனிக்கு வரத் தொடங்கி விடுகிறார் கள்.
உலகம் புகழும் இந்த பாத யாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைபிடித்தனர்.
பாதயாத்திரை வரும்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் பேசி முடிப்பார்கள். நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது. பாத யாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.
தைப்பூசம் சீசனில் தங்கள் பூர்வீக ஊரில் இருந்து பழனிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வருவதை தமிழர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். இந்த சிறப்பால் அறுபடை வீடுகளில் பழனி திருத்தலம் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக திருச்செந்தூர் முருகன் தலத்துக்கும் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி, விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை, நாகர்கோவில், திசையன்விளை, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகிறார்கள்.
புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமையில் சிங்கிரி கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 23-வது ஆண்டு புனித பாதயாத்திரை வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது.
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பாதயாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனம் செய்து தொடங்கி வைக்கிறார். இதில் திவ்யநாமபஜனை, பிருந்தாவன பஜனைகள் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெறும்
இந்த பாதயாத்திரை புதுவை-கடலூர் சாலை வழியாக அபிஷேகப்பாக்கம் சிங்கிரி கோவிலில் நிறைவு பெறும். புனித பாதயாத்திரையையொட்டி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழாவையொட்டி 5-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு வைசியாள் வீதியில் உள்ள வாசவி திருமண நிலையத்தில் திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவிழா தொடங்கியதும், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். அப்போது அவர்களுக்கு தங்கும் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
பழனியில் இருந்து சில கிலோ மிட்டர் தூரம் வரை பக்தர்கள் தங்கும் இடம், அன்னதான கூடம், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை அமைக் கப்பட்டிருக்கும். இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்குவதற்கு முன்பே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவந்தனர்.
அவர்கள் இளநீர், பால், தீர்த்தம், மயில் காவடிகளை எடுத்து ஆடிப்பாடியபடியே பழனிக்கு பாதயாத்திரையாக வந்தனர். பழனி-திண்டுக்கல் சாலையில் பாதயாத்திரை பக்தர்களுக்காக நடைபாதை வசதி உள்ளது. ஆனால் பழனி-உடுமலை ரோட்டில் அந்த வசதி இல்லை. இதனால் பக்தர்கள் சாலை யோரத்தில் நடந்து வருகின்றனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழனி-உடுமலை சாலையில் பக்தர்கள் நடக்க தற்காலிக பாதை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கான உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க கோவில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்