என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painting competition"

    • சிறைவாசிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது
    • தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு

    கரூர்:

    பொது நூலகத்துறை கரூர் மாவட்டம் 55-வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு, சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி கரூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள கிளை சிறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் துரைராஜ், ஓவிய போட்டி கருத்துறை வழங்கி நடுவராக செயல்பட்டார். கிளை சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம் ஓவியப்போட்டி துவக்கி வைத்து பேசினார். இந்த ஓவிய போட்டியில் 51 சிறைவாசிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓவியம் வரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது
    • பள்ளி மாணவிகள் முன் பதிவு செய்து பங்கேற்கலாம்

    வேலூர்:

    குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந் தேதியை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்காக, நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஓவியப்போட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், நடத்தப்பட உள்ளது.

    ஒவியப்போட்டியின் தலைப்பு வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்கள்.

    பள்ளி மாணவர்களின், கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவியப்போட்டியானது 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக நடத்தப்படவுள்ளது

    ஓவியத்தில் ஆர்வமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள். இன்று மாலைக்குள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பெயரை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே ஒவியப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    பள்ளி ஒன்றுக்கு 3 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். ஒவியப்போட்டிக்கான ஓவிய தாள் மட்டுமே அருங்காட்சியகத்தில் வழங்கப்படும் ஏனைய பொருட்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.

    • புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • இதன் தொடக்கமாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

    பொதுத்தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் நீங்கவும், மாணவர்கள் நல்ல உடல் நிலை மற்றும் மனநிலையுடன் தேர்வு எழுதி சான்றோனாக உருவாக பிரதமர் மோடி பரிக் ஷா பி சர்ச்சா என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப் படுத்தியுள்ளார்.

    இதன் தொடக்கமாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. இதில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 500 மாணவர்கள் பங்கேற்றனர்.

    போட்டியை பள்ளி தாளாளரான செல்வகணபதி எம்.பி. தொடக்கி வைத்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாரதப் மோடி பொதுத் தேர்வுகள் எழுதப் போகும் மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வுகளை சந்திப்பதற்காக கடந்த 2018 முதல் என்ற பரிக் ஷா பி சர்ச்சா என்கிற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தைரியமும், ஊக்கமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் வகையில் ஆலோசனைகளும், மந்திரங்களும் வழங்கி வருகிறார்.
    • ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான உபகரணங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பாரதப் மோடி பொதுத் தேர்வுகள் எழுதப் போகும் மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வுகளை சந்திப்பதற்காக கடந்த 2018 முதல் என்ற பரிக் ஷா பி சர்ச்சா என்கிற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தைரியமும், ஊக்கமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் வகையில் ஆலோசனைகளும், மந்திரங்களும் வழங்கி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக இந்த வருடம் நேற்று புதுவை மாநிலத்தில் தேர்வுகள் எழுதப் போகும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பல்லாயிரம் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற தலைப்பில் மாநில, மாவட்ட தலைமையின் ஆலோசனையின் படி, செல்வகணபதி எம்.பி. ஏற்பாட்டில் நடைபெற்றது.

    நகர மாவட்டம் உப்பளம் தொகுதியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.

    இந்த ஓவிய போட்டி, பள்ளி தலைமை அனுமதியுடன் தொகுதி பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், தொகுதி தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் அற்புதழகன், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கண்காணிப்பில் நடைபெற்றது. ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான உபகரணங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.

    • நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கான ஓவியப்போட்டி நடை பெற்றது.மத்திய கல்வி அமை ச்சகத்தால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் பராக்ரம் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் வாழ்க்கையைப் பற்றி மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தேசபக்தியை வளர்க்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்நாளையொட்டி மாணவர்களிடையே தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள ஒரு தனித்துவமான முயற்சியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய அளவிலான ஓவியப்போட்டி பிரதமர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் 'தேர்வு வாரியர்ஸ்" ஆவது எப்படி என்பதை மையக்கருத்தாக கொண்டு 25 தலைப்புகளில் நாடுமுழுவதும் நடந்தது. இதன்படி பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களது மனதில் கலைத்திறன் மற்றும் நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வண்ணம் ஓவியப்போட்டி நடந்தது.இந்த போட்டியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் வேல்முருகன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி சிறந்த ஓவிய படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.பின்னர் பள்ளி முதல்வர் கல்யாண்ராமன் சிறந்த 5 படைப்புகளுக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பிரதமர் மோடியின் தேர்வு வாரியர்ஸ் என்ற புத்தகம் வழங்கினார்.

    • இந்த போட்டியின் காரணமாக மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்
    • மாணவர்கள் கைதட்டி பாடல்கள் பாடிய படி உற்சாகமாக வந்தனர்.

    கோவை,

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் நேற்று ஓவியப்போட்டி நடத்தப்ப ட்டது.

    கோவை ரெயில் நிலை யத்தில் இருந்து ரெயில் புறப்பட்டதும் ஓவியப் போட்டி தொடங்கியது. இதில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    4,5,6,7 பயிலும் மாணவ-மாணவிகள் கொடுக்கப்பட்ட ஓவியத்துக்காக அழகாக வண்ணம் தீட்டினர். 8-ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் தூய்மையான இந்தியா மற்றும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினர். ஓடும் ரெயில் என்றும் பாராமல் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் ஓவியத்தை வரைந்தனர்.

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் சென்ற தும் ஓவியப்போட்டி நிறை வடைந்தது. பின்னர் அதே ரெயிலில் புறப்பட்டு மாணவர்கள் கோவை திரும்பி வந்தனர். வழியில் அவர்கள் கைதட்டி பாடல்கள் பாடிய படி உற்சாகமாக வந்தனர்.

    இதுபற்றி மாணவிகள் கூறுகையில் ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மேட்டுப்பாளையம் வரை மகிழ்ச்சியாக சென்று வந்தோம்.

    எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருந்தது என்றனர்.

    போட்டியை நடத்திய புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் அமைப்பாளர் சிவகுமார் கூறுகையில் ஓவியம் வரைவதால் மாணவர்களின் சிந்தனை திறன், கற்பனைத்திறன் மேலோங்கும். அறிவாற்றல் கூர்மையாகும். அந்த வகையில் ஓடும் ரெயிலில் நடந்த ஓவியப் போட்டி மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.

    இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. 

    • திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் மருந்தக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பள்ளி ஆசிரியைகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ந் தேதி முதல் 7ந் தேதி வரை ஜன் ஒளஷதி திவாஸ் (மக்கள் மருந்தக வார கொண்டாட்டம்) இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு 7 நாட்களில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உறுதிமொழி பாதயாத்திரை (பேரணி), குழந்தைகளுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான மருத்துவ முகாம் முதலானவை நடைபெறும். திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் மருந்தக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    4-ம் நாளான இன்று கோவில் வழி ஸ்ரீகாயத்ரி நர்சரி - பிரைமரி பள்ளியில் "ஜன் ஒளஷதி குழந்தைகளுக்கான நண்பன்" எனும் தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை நாகஜோதி தலைமை வகித்தார். திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர் அருண் பாரத் , மத்திய பார்வையாளர் அரவிந்த்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் சாதனா முதலிடத்தையும், தாரணி இரண்டாமிடமும், மணிகண்டன் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு போஷான் (சத்து மாவு) பரிசாக வழங்கப்பட்டது. திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் கலர் பென்சில், பழச்சாறு, பிஸ்கட், வர்ண பலூன்கள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியைகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை வல்லத்தில் நடைபெற உள்ளது.
    • மொத்தம் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகஅரசு வனத்துறை சார்பில் உலகில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும், தமிழகத்தில் தஞ்சை கடற்பகுதியில் இவ்வுயிரினம் கண்டறியப்பட்டு முதல் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டதையும், உலக கடற்பசு தினத்தை வருகிற 28-ந் தேதி கொண்டாடும் வகையிலும் மாவட்ட அளவி லான ஓவியப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கான போட்டியானது நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளிகளில் பயிலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் முதல் பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 2-ம் பிரிவாகவும், கல்லூரி அளவில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 3-ம் பிரிவாகவும் வகைப்படுத்தப்ப ட்டுள்ளனர்.

    ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 3 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 3 பிரிவிற்கும் சேர்த்து மொத்தம் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    போட்டியில் பங்குபெறும் மாணவர்க ளுக்கு ஓவியம் வரைவதற்குரிய அட்டைகள் துறை மூலம் வழங்கப்படும்.

    இதர வரைவு உபகரணங்கள் பென்சில், வண்ணக்க லவைகள் போன்றவற்றை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு விழா, இடம் முதலிய விவரங்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

    தனித்திறமைகள் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி மேற்கொண்டு வருகிறார்.

    அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு தொடர்பான ஓவியங்களை தீட்டி பரிசுகளை வெல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்து கொண்டு ஒளிர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நெல்லை:

    பாளையில் தமிழ்நாடு அரசு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், நெல்லை அரசு அருங்காட்சியகம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் ஆகியவை சார்பில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது.

    புலிகளைக் காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 4 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும் மற்றும் 9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பிரிவு என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் நாளை ( சனிக்கிழமை) களக்காடு தலையணைக்கு சூழல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி செய்திருந்தார்.

    • வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தூரிகை 2023 ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.
    • ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தப்போட்டியில் கலந்துகொண்டு பயனடையலாம்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 32 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கியில் 3 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்காக 'அரும்புகள்' என்ற பெயரில் சேமிப்பு கணக்கு திட்டத்தை மேம்படுத்திட ஏதுவாக, செப்டம்பர் 9-ந் தேதி வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தூரிகை 2023 ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

    ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர், வங்கியின் விளம்பரப்பலகை, பள்ளியின் விளம்பரப்பலகை படத்துடன் வாட்ஸ்அப் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தப்போட்டியில் கலந்துகொண்டு பயனடைய, அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மொத்தம் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவிய போட்டி 'தூரிகை 2023'-க்கான ஆன்லைன் ரிஜிஸ்டர் ரேஷனில் 865 மாணவ மாணவிகள் பதிவு செய்திருந்தனர். மேலும் பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதன் அடிப்படையில் 6 பிரிவு களில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 7 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரம், நான்காம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என 24 பிரிவினர்களுக்கு மொத்தம் ரூபாய் 1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் திலீப் குமார் , மண்டல இணைப்பதிவாளர் நந்த குமார் , வங்கியின் பொது மேலாளர் (பொறுப்பு) , உதவி பொது மேலாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள், கலந்து கொண்டார்கள். 

    • பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி விழா அறக்கட்டளை உடன் இணைந்து ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக ஓவியப்போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திரா நர்சரி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட வணிக சங்க பேரமைப்பு தலைவர் சரவணன், ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், வணிகர் சங்க நகர செயலாளர் பாஸ்கரன், பள்ளி தாளாளர் சேட்டு, தொழிலதிபர் தர்மிச்சந்த் மற்றும் ஆசிரியர் இங்கர்சல் அறக்கட்டளை தலைவர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×