என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patrolling"

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சேஷ சமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது21) என்பவர் முருகன் கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் குபேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    • தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில், வேலூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் அந்த வழியாக வந்த லாரியை மடக்கினர்.

    இதனைப் பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஒடிவிட்டார்.

    பின்னர் போலீசார் சோதனை செய்தபோது, அதில் திருட்டுத்தனமாக செம்மண் கடத்தி செல்வது தெரிய வந்தது.

    லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(47) தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து ராமசாமியைபோலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் தலைமையில் நேற்று முன்தினம் இசாகொளத்தூர் பஸ் ஸ்டாப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தேசூரைச் சேர்ந்த துரைமுருகன்(23), நந்தகுமார்(26) என்பதும், இவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.இதனையடுத்து போலீசார் துரைமுருகன், நந்தகுமார் ஆகிய 2 பேரை மீகைது செய்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • வட மாநில வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    ஒடிசாவில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினர் இணைந்து ஆம்பூர் தற்காலிக பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நபர் ஒருவர் பையுடன் சுற்றித்திரிந்தார்.

    அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாத்மாஜி (வயது 37) என்பதும், அம்மாநிலத்தில் இருந்து ஈரோடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 1,100 கிராம் பறிமுதல்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண் டியநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்ததில், சோளிங்கர் பகுதியை சேர்ந்த 19 வயது வாலி பர் என்பதும், மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து, 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது.
    • மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா அத்திப்பாக்கம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு தகவல் வந்தது. அக்கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உளுந்தூர்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அதி்திப்பாக்கம் கிராமத்தில் திருநாவலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை மடிக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த அஞ்சாமணி (வயது 48), சரிதா (25), தேவநாதன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மதுபாட்டில் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பெரம்பலூரில் வன விலங்கு வேட்டையை முற்றிலும் தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டனர்
    • இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் பெரம்பலூர் வனவர் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, மணிகண்டன் மற்றும் களப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் கல்பாடி, சிறுவாச்சூர், சத்திரமனை, வேலூர், மங்கூன், அம்மாபாளையம், குரும்பலூர், லாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பன்றி , மான், முயல் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டை தடுப்பு, இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.

    • ரோந்துப் பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற் றும் போலீசார் நேற்று அதிகாலை வந்தவாசி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமய் யர் தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்த முயன்றனர். அவர் மோட்டார் சைக்கிளை ரோட்டிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதையடுத்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் தப்பி ஓடியவர் பொட்டிநாயுடு தெருவில் இருந்து மோட்டார்சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீ சார் வந்தவாசி 5 கண் பாலம் அருகில் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த திலீப் (வயது 23) என்பது தெரி யவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்பை கைது செய்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மரூர் பகுதியில் பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 44) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • டாஸ்மாக்கில் கொள்ளை அடித்தவர்கள் கஞ்சா விற்ற வழக்கில் சிக்கினர்.
    • திருச்சுழி அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதி–களவில் கஞ்சா விற்பனை செய்யபட்டு வருவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருச்சுழி காவல் நிலைய இன்ஸ்பெக் டர் மணிகண்டன் தலைமை–யிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சத்திர புளி–யங்குளம் பகுதியில் ரோந்து வந்தபோது அங்கு சந்தேகிக் கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசா–ரணை மேற்கொண்ட–னர். இதில் அவர்கள் முன் னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் இருவரையும் திருச்சுழி காவல் நிலையம் அழைத்துச்சென்று விசா–ரித்தனர்.

    இதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நாகமுகுந்தங்குடி பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் ரஞ்சித் (23) மற்றும் சிவகங்கை மாவட் டம் மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் சிலம்பரசன் (17) என்பதும், இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை சட்டவிரோதமாக அப்பகு–தியிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மேலும் அவர்களை சோதனை மேற்கொண்டதில் சுமார் இரண்டரை கிலோ கஞ்சா இருந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இருவரும் திருச்சுழி பள்ளி–மடம் அரசு டாஸ்மாக் கடை–யில் ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த நாமக்குளம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (22).

    இவர் கடந்த 7-ந் தேதி தனது பைக் தனது சித்தப்பா வீட்டிற்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.

    இது தொடர்பாக பத்மநாபன் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சிப்காட் போலீசார் சீக்கராஜபுரம் செக்போஸ்ட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த சிம்பு ( எ)குல்லா (20), சரத் (எ)தூள் (21), கவியரசன் (19)ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது பத்மநாபனின் பைக்கை திருடி வந்திருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

    ×