என் மலர்
நீங்கள் தேடியது "Pension"
- பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.
- சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டுசெல்ல வேண்டும்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் 2023 ஆம் ஆண்டிற்குரிய உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அவரவர்கள் பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.
சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டுசெல்ல வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் பெண் ஓய்வூதியர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்றுடன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மறுமணம் செய்து கொள்ளவில்லை என சான்றிதழ் பெற்று சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க சந்தேகங்கள் மற்றும் உதவிகள் தேவைப்பட்டால் தஞ்சாவூர் கீழராஜவீதி அரண்மனை எதிரில் உள்ள மாவட்ட ஏ. ஐ .டி .யூ .சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கும்பகோணம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரையை 9566715758 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கும்பகோணம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
- காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் உடனடியாக வழங்க வேண்டும்.
- பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பி னர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் கலைவாணன், இளவரசன் தலைமை தாங்கினர்.
அரசு ஊழியர் சங்க செயலாளர் அசோக்குமார், மாநில துணைத்தலைவர்.தமிழ்நாடு உயர்நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் மாநில தீர்ப்பு குழு உறுப்பினர் தமிழ்நாடு வெங்கட்டு ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் சுந்தரம் வரவேற்றார்.
அப்போது தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பழைய- புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
- பணிக்கொடை தொகை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பண பலன்கள் வழங்கப்பட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் கரந்தை பணிமனை முன்பு இன்று காலை போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை தலைமை வகித்தார். கவுரவ தலைவர்சந்திரமோகன்,
தலைவர் மல்லி. ஜி.தியாகராஜன் முன்னி லை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தொடக்கி வைத்தார்.
ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க கவுரவத் தலைவர் சுந்தர பாண்டியன் , பொருளாளர் ராஜமன்னன் உள்ளிட்ட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய- புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும்,உயர்த்தி வழங்கப்பட வேண்டும், கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வுபெற்றவர்கள், பணியின் போது இறந்தவர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை தொகை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஓய்வு பெற்றோர் சங்க துணை பொதுச் செயலாளர் வெங்கடா பிரசாத், மனோகரன், தங்கராசு, முருகையன் , துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், இருதயராஜ், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, ஞானசேகரன், பிகுணசேகரன், சம்பத்குமார், வீராச்சாமி, அழகிரி, கோவிந்தராஜன், லதா பார்த்திபன், நவநீதம் உதயகுமார், சாந்திதுரை ராஜ், முத்துச்செல்வி சேகர், சித்ரா சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் பால சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
- தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
- சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
- சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ர மணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனு டையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் 18,047 மாற்றுத்திறனுடைய பயனாளிகளுக்கு 2023 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் ரூ.1,000 ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2023 ஜனவரி மாதம் முதல் ரூ.1,500 கிடைக்கப் பெறாத சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளில் 40 சதவீதம் மாற்றுத்திறன் உடையோர் எவரும் இருந்தால், தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்களது வட்டத்தின் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் செயல்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.
பேரணிக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி தலைமை தாங்கினார்.
பேரணியை மாநிலச் செயலாளர் டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார்
பேரணியில் சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதி திட்டத்தைஅமுல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தர பணிகளை அழித்திடும் அரசாணை 152, 139 ஐ ரத்து செய்திட வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல்படுத்த வேண்டும், இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115ஐ ரத்து செய்திட செய்து சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கான பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
- அரசு துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தஞ்சாவூா்:
சமூக நீதி மறுக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளைத் தனியார்ம யமாக்கும் முயற்சியைக் கைவிட செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
முடக்கப்பட்ட சரண் விடுப்பு, மறுக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீட்டெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியை தொடங்கினர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரணியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலர் ரெங்கசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியானது பனகல் கட்டிடம் முன்பு முடிவடைந்தது . பின்னர் அங்கு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சார்பதிவாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் 50 சதவீதம் சார்பதிவாளர் அலுவலக பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தேவைக்கேற்ப பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 150 சார்பதிவாளர்களை பணியிட நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரியும், பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் 10 அம்ச உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப் பட்டது.
இதில் மயிலாடுதுறை மாவட்டம் முழுதும் இருந்து சார் பதிவாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் பசுபதி தலைமை தாங்கினார்.
இளையபெருமாள் வெங்கடேஷ் பால சரவணன் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலக சங்கத்தினர் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.
- போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஊக்க ஓய்வூதியம் ரூ.4000 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட ஓய்வூதி யர்கள் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச் செயலாளர் தில்லைவனம் முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
இதில் நுகர்பொருள் சங்க சி.ஐ.டி.யூ மண்டல செயலாளர் பாண்டித்துரை, அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன், மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, நுகர் பொருள் வாணிப கழக போராட்ட குழுவை சார்ந்த வேணுகோபாலன், முருகேசப்பிள்ளை, மாரியப்பன், தியாகராஜன், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
- ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். செல்வம், அசோக் குமார், முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் அன்பரசன் வரவேற்றார். நடைபெற்ற போராட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
இதில் உரையாற்றிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான மாயவன் பேசுகையில்:-
ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நாளன்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டி மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
- ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியம் ரூ. 4000 வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்படும் அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
ஐ.என்.டி.யூ.சி பொதுசெயலாளர் இளவரி தலைமை வகித்தார்.
ஏ.ஜ.டி.யூ.சி சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், சி. ஐ. டி .யூ சங்க மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், பாட்டாளி சங்க தலைவர் முருகன், அம்பேத்கர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியும் ரூ. 4000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள், சேமிப்பு நிலையங்கள், நவீன அரிசி ஆலைகள் முன்பு வருகின்ற 9-ந்தேதி ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் தரக் கட்டுப்பாடு மேலாளர் ஓய்வு வேணுகோபாலன், அன்பழகன், சிவானந்தம், மணியரசன், புவனேஸ் வரன், பாண்டியன், பழனிவேல், ராஜ்குமார், மணிமாறன், அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏஐடியூசி மாநில பொருளாளர் கோவிந்த ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தினர் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.