என் மலர்
நீங்கள் தேடியது "People"
- வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான நடமாடும் ரேசன்கடையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகர் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறை மூலம் நடமாடும் நியாய விலை தொடங்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
மேலும் 6 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ12.40லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ3.625லட்சம் மதிப்பிலான பால் கறவை மாட்டு கடன் உதவிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ6.18 லட்சம் மதிப்பிலான பயிர் கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.22.205 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 691 முழு நேர நியாயவிலை கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 31 முழுநேர கடைகளும், 3 பகுதி நேர கடைகளும் மற்றும் மகளிர் நிறுவனங்கள் மூலம் 4 முழு நேர கடைகளும் என மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 446 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும் 64 நடமாடும் நியாயவிலை கடைகளும் செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நீண்ட தூரம் சென்று குடிமைப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும், தங்கள் பகுதிக்கு அருகிலேயே நியாய விலைக்கடை அமைத்து தரக்கோரியும் அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறையின் மூலம் 65-வது நடமாடும் நியாய விலைக்கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.
- சாலையை கடக்க முடியாத வகையில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்க ப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில்புதுரோடு பேருந்துநிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி .என். நகர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்க ப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையைகடக்க முடியாமல்அவதி அடைவதாகவும் பெண்கள் முதியவர்களுக்கு கடும் இடையூறுஏற்படும் வகையில்தடுப்புகள் அமைந்துள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளைஅகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர்போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மையதடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை, நீதிமன்றம், பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் அமைந்துள்ள தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை,நீதிமன்றம்,பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக இங்கு வருபவர்கள் மட்டுமல்லாமல், வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாதவர்கள் கூட தாலுகா அலுவலக வளாகத்துக்குள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் இங்கு வரும் பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதவிர தாசில்தார்,நீதிபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.அத்துடன் கிளைச்சிறைக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிறை வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே தாலுகா அலுவலகத்துக்கு எதிரில் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டியெடுத்தது.
- 3 கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்திருந்தது.
திருப்பூர் :
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டியெடுத்தது. வெப்பதாக்கம் அதிகம் இருந்த போது சில நாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. குறிப்பாக 3 கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்திருந்தது. நேற்று பகலில் வெயில் கடுமையாக இருந்த நிலையில் மாலை 5:30 மணி முதல், 6:15 மணி வரை மழை பெய்தது. திடீரென கனமழை பெய்ததால் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. ஊத்துக்குளி ரோடு, டி.எம்.எப்., பாலம், ஒற்றைக்கண் பாலம் பகுதியில் மழைநீர் ஆறு போல் ஓடியதால் போக்குவரத்து பாதித்தது.
இதேபோல் யூனியன் மில் ரோடு, யுனிவர்சல் ரோடு சந்திப்பில், குழி வெட்டியுள்ள இடங்களில் கழிவுநீர் பாய்ந்தோடியது. ஈஸ்வரன் கோவில் வீதி பாலமும் தண்ணீரில் மூழ்கியது. இதே போல் நகரின் பல பகுதிகளில் மழைநீர் ஓடைபோல் ஓடியது. திடீரென கோடை மழை பெய்தது சற்று இடையூறாக இருந்தாலும், மழை நின்றதும், இயல்பு நிலை திரும்பியது.குளுகுளு மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் அதனை உடனடியாக கியூ ஆர் ஸ்கேனில் பதிவு செய்யலாம்.
- இந்த திட்டம் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே பயன்பெறலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளை பெறவும், புகார்களை தெரிவிக்கவும் டிஜிட்டல் மயமாக்கும் ஏற்பாடுகள் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் நடந்து வருகிறது.
அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் கியூ ஆர் ஸ்கேன் கோடு ஓட்டும் பணி இன்று தொடங்கியது.
தஞ்சாவூர் உமா நகர் பகுதியில் வீடு வீடாக கியூ ஆர் ஸ்கேன் கோடு ஒட்டும் பணியை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
அவர் வீடு வீடாக சென்று இந்த ஸ்டிக்கரை ஒட்டினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு உத்தரவுபடி இன்று வீடு வீடாக சென்று கியூ ஆர் கோடு ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.
மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கியூ ஆர் கோடு ஓட்டப்படும்.
அடுத்ததாக இந்த கியூ ஆர் கோடில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், வார்டு எண், வீட்டு எண், கட்டிடம் பயன்பாடு, இருப்பிட விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
அதன் பிறகு வீட்டில் இருந்தபடியே தங்களது மொபைலில் கியூ ஆர் ஸ்கேன் செய்து அதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தலாம்.
இது தவிர குடிநீர் பிரச்சனை, குப்பைகள் அள்ளாமல் இருப்பது உள்ளிட்ட எந்த வகையான பிரச்சனை இருந்தாலும் அதனை உடனடியாக கியூ ஆர் ஸ்கேனில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்த பிறகு அடுத்த சில மணி நேரங்களில் பிரச்சனை தீர்க்கப்படும்.
நீங்கள் கியூ ஆர் ஸ்கேன் செய்யும் போது உங்களது இருப்பிடம் காண்பிக்கும்.
மேலும் உங்களது அனைத்து விவரங்களும் எங்களுக்கு தெரிய வரும். இந்தத் திட்டம் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே பயன்பெறலாம்.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து வீடுகளிலும் கியூ ஆர் கோடு ஒட்டும் பணி முடிவடைந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
- அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையம் பிரிவு பகுதியில், பல்லடம்- தாராபுரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணியால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதா கவும், விபத்து க்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நேற்று இரவு அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் பொதுமக்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- ஆலூத்துபாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
- தாராபுரம் மெயின் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்து பாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில், நீர்மட்டம் குறைந்தும், சில ஆழ்குழாய் கிணறுகள் நீர் வற்றிவிட்ட தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தினர் தண்ணீரை அனைத்து பகுதி களுக்கும் வழங்குவதற்காக, குறைந்த அளவு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதுமான தண்ணீர் வழங்கவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று பல்லடம் - தாராபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார், மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி விரைவில் போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது.
இதனால் பல்லடம் - தாராபுரம் மெயின் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
- போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது.
- வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி நடமாடி வருகிறார்கள். வயதானவர்கள், பெண்கள் மதிய நேரத்தில் வெயிலில் நடமாடுவதை தவிர்த்து வருகிறார்கள். வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் அவற்றின் வியாபாரம் களைகட்டியுள்ளது. நேற்று மாநகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருப்பூரில் 102 டிகிரி வெயில் நேற்று பதிவானது.
இரவு நேரத்தில் வீட்டில் மின்விசிறி ஓடினாலும் வெப்பக்காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகிறார்–கள். மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்புகள் அடங்கிய விளம்பர பதா கையில் அமைக்க ப்பட்டிருந்தது.தனை பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார். இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட தொகுப்புகளின் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து துறைகளின் முக்கியமான அறிவிப்புகளில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த தொகுப்பும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அறிவிப்புகள், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பு, கோயில் நிலங்கள் மீட்பு, மகளிருக்கான இலவச பஸ் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அறிவிப்பு, விவசாயி களுக்கான அறிவிப்பு, சாலை போக்குவரத்துக்கான அறிவிப்பு, பள்ளி கல்வி துறை அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியி டப்பட்ட அறிவிப்புகளின் புகைப்பட தொகுப்புகள் விளம்பர பதாகையில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிட்டனர்.
பார்வையிட்ட அமைச்சர் பொது மக்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை சிறப்பாக அமைத்திருப்பதாக பாராட்டினார். இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பார்வை யிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சிவக்குமார், அனைத்து ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர்.
- சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும்.
காங்கயம் :
காங்கயம் அருகே நாட்டார்பாளையம் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கட்டியிருந்த கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. எனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தைதான் கன்று குட்டியை கொன்று இருக்கலாம் என்று பொதுமக்களும், விவசாயிகளும் சந்தேகம் அடைந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்றுக்குட்டியின் உரிமையாளர் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கன்றுக்குட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:- கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர். மேலும் கன்றுக்குட்டியின் உடல் பகுதியில் சிறுத்தையின் கால் நகங்களோ அல்லது பற்களின் தடயங்கள் ஏதும் இல்லை. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடங்களும் இல்லை. மேலும் கன்றுக்குட்டியின் கால் பகுதியில் சிறிய அளவிலான பற்களின் தாரைகள் உள்ளது.இது நாய்களின் பற்கள் போல் உள்ளது. இது வெறி நாய்கள் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் அல்லது நோய்வாய் பட்டு உயிரிழந்து அதை கன்றுக்குட்டியின் உரிமையாளர் 3 அல்லது 4 நாட்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும். கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதாக இருந்தால் அங்கு இருந்து வேறு பகுதிக்கு கன்று குட்டியை சிறுத்தை கடித்து இழுத்து சென்று இருக்கும். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. எனவே வெறிநாய்கள் கடித்துதான் கன்றுக்குட்டி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான்.
- திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கினார்.
முன்னதாக மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் அனை வரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.
இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்:-
தேர்வு எழுதிய மாணவனாக நாங்கள் இருக்கிறோம். 2 ஆண்டு சாதனையை உங்களிடம் சொல்லி மதிப்பெண் போடுங்கள் என காத்திருக்கிறோம்.
தி.மு.க. 2 ஆண்டு ஆட்சியில் 204 திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான். திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்
இதில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேதாரத்தினம், நகர்மன்ற துணை தலைவர் மங்களநாயகி, மாவட்ட கவுன்சிலர் சோழன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், உமா செந்தா மரைச்செல்வன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, சுற்றுச்சூழல் அமைப்பாளர் சத்தியமூர்த்தி, வக்கீல்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் அனைத்து சார்பு அணியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி டி.கே.எஸ். இளங்கோ வன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முடிவில் திருகுமரன் நன்றி கூறினார்.