என் மலர்
நீங்கள் தேடியது "Person"
- பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது.
- அறிவியல் பட்டதாரி ஆசிரியை பிரபாவதி வரவேற்றார்.
புதுச்சேரி:
பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா தலமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கிளாடின் கிரேஸ் மெக்பர்லேன், விலங்கியல் விரிவுரையாளர் லோகேஸ்வரி முன்னிலை வகித்தனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியை பிரபாவதி வரவேற்றார்.
பேராசிரியர் வெற்றிவேல் நீர்ப் பாதுகாப்பும் எதிர்கால அவசியமும் என்னும் தலைப்பில் நோக்கவுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசியதாவது:-
நீர் மேலாண்மை மிகவும் அவசியமாக இருந்து வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மத்திய அரசு அனைத்து கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் 100 சதவீத பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு நபர் 55லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவது அதிகபட்சமாக நிர்ணயித்துள்ளது. ஆனால் நமது பகுதிகளில் ஒரு நபர் 100லிட்டரில் இருந்து 200 லிட்டர் வரை செலவு செய்கின்றனர்.
இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். வீடுகள் மற்றும் தெருக்களில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாயை மூடி வைக்கவேண்டும்.
சிக்கனமாக பயன்படுத்தி எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுபாடு இன்றி கிடைக்க அனைவரின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. விவசாயம் சார்ந்த தொழிலிலும் நவீன முறையை பயன்படுத்தி தண்ணீர் சேகரிக்க வேண்டும். நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் ரவி, வானவில் ஆனந்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனியன், அரவிந்தர் சொசைட்டி பொறுப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர்.
மாணவி அன்புமதி நீருக்கான உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் கணித பட்டதாரி ஆசிரியர் அருளரசன் நன்றி கூறினார்.
- வாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
மதுரை
மீனாட்சிநகர் கேட்லாக்ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு 7-வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை 2 பேர் வழிமறித்து வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பாண்டி மகன் வீரபூமு, அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் பாண்டி என்ற பாண்டியராஜன் (47) ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாண்டி என்ற பாண்டியராஜனை கைது செய்தனர்.
கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக பதுங்கிய வாலிபரை பிடித்தார். அவரிடம் விசாரித்தபோது மதுரை காமராஜர்புரம் குமரன் குறுக்கு தெரு குமரய்யா மகன் முனீசுவரன் (20) என்று தெரிய வந்தது.
அவரிடம் இருந்து வாள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பகுதி வழியாக வருபவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- அயர்ந்து தூங்கியவரின் இருசக்கர வாகனம், செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் அழகுராஜ். கட்டிட தொழிலாளி. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பி கொண்டி ருந்தார்.
அப்போது அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் ஆர்.ஆர்.விலக்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனை இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு ரோட்டோரமாக உள்ள மரத்தின் அடியில் படுத்து தூங்கி விட்டார். இதை பார்த்த மர்ம நபர்கள் அழகுராஜின் இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் திருடி சென்று விட்டனர்.
தூக்கத்தில் இருந்து விழித்த அழகுராஜ், தனது இருசக்கர வாகனத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ திருடி சென்றதை அறிந்த அவர் அது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரிசி மூட்டைகளுடன் வந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானது.
- வாகனம் விபத்தில் சிக்கிய உடன் அதிலிருந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அரிசி மூட்டைகளுடன் வந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானது. வாகனம் விபத்தில் சிக்கிய உடன் அதிலிருந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் வாகனத்தின் உள்ளே ரேசன் அரிசி மூட்டைகள் இருந்ததால் சந்தேகத்தின் பேரில், திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனம் மற்றும் அதிலிருந்து அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் கோவையைச் சேர்ந்த சந்தோஷ்(35 )என்பதும், 3 டன் ரேசன் அரிசியை வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது .இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.
- காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 49).ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மோகனூரில் நிலம் வாங்கியது சம்பந்தப்பட்ட ஒருவருக்கு கொடுப்பதற்காக நேற்று மதியம் பரமத்தி வேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.
பணம் ரூ.20 லட்சத்தை காரிலேயே வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று உடையை மாற்றிக் கொண்டு மோகனூர் செல்வதற்காக மீண்டும் காரை எடுக்க வந்தார். அப்போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பாலசுப்பிரமணி பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாலசுப்பிரமணி வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு காரில் ஏறி வீட்டுக்கு வந்து காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் செல்லும் வரை அவரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
ஸ்கூட்டரில் ஒரு நபரும், மோட்டார் பைக்கில் 2 நபரும் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணி உடைமாற்ற வீட்டிற்குள் சென்ற உடன் கண் இமைக்கும் நேரத்தில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து உடைத்து காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
பட்டபகலில்ரூ.20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். மர்ம நபர்கள் கார் கண்ணா டியை உடைக்கும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூரை அடுத்த பள்ளக்காட்டுப்புதூரில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு சம்பவத்தன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக நல்லூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் நல்லூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் பச்சை, சிமெண்ட், வெள்ளை நிறம் கலந்த டீ-சர்ட் அணிந்திருந்தார். அவருடைய வலது மார்பின் கீழ் பகுதியில் கருப்பு மச்சமும், வலது கால் பாதத்தின் மேல்பகுதியில் காயத்தழும்பும் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
- விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
- ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பினார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி(வயது 52)என்பதும் ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் கோகுல் குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார். இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சியினரை சந்தித்து பேசினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பேட்ரிக் சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் மகாராஜன் (வயது 20), கட்டிட தொழிலாளி. இவரும், முத்துலட்சுமி என்பவரும் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரவு நேரங்களில் மகாராஜன் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் மகாராஜன் கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாராஜன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மகாராஜன் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கிராஸ்வின், புதுத்தெருவை சேர்ந்த கிளிப்டன் உள்ளிட்ட 4 பேர் வந்தனர். அப்போது, மகாராஜனுக்கும், கிராஸ்வின் உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மகாராஜனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராஸ்வின், கிளிப்டன் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.