என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pesticide"
- விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
- வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள லெபனாவை சேர்ந்த 47 வயதான மிச்செல் என்பவரின் கணவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது போலீசில் புகாரளித்ததுள்ளார்.
மிச்செல் தனது கணவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருத்தை கலந்து குடிக்க வைத்துள்ளார். மிச்செல் கணவர் அந்த சோடாவை குடிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான சுவையை அலட்சியப்படுத்திவிட்டு சோடாவைக் குடித்துக்கொண்டே இருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் தொண்டை புண், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை சோதனை செய்த போது மிச்செல் அவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலப்பது போல் காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிச்செல் கைது செய்யப்பட்டார்.
சிசிடிவி கேமிரா பதிவை சோதனை செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.
விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
மிச்செல் தனது கணவருக்கும் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். தான் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்ததை குறித்து தனது கணவர் பாராட்டவில்லை ஆகவே கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
அதையடுத்து வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு மன வேதனையில் இருந்து வந்தார்.
- அங்கிருந்து புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 42) இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டு களாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு விவசாய நிலத்துக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிறு வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, பின்பு அங்கிருந்து புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கிருந்து மேல் சிகிசசைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று இரவு இறந்துபோனார். இது குறித்து மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார்.
- ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அடுத்த காரணப்பட்டு சேர்ந்தவர் மதிச்செல்வம் (வயது 30 ). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதி செல்வம் பூச்சி மருந்து குடித்தார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மதி செல்வத்தை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மதி செல்வத்தை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
- பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
ரேட்டால் என்ற வணிக பெயரில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எனும் ரசாயனம் வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுவாக மக்கள் ரேட்டால் பேஸ்ட்டை எலிகளை கட்டுப்படுத்த வீடுகளில் பயன்படுத்து கின்றனர். இதை குழந்தைகள் பேஸ்ட் என கருதி உப யோகப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு எதிர்வினை மருந்து இல்லா ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதன் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரேட்டால் பேஸ்ட்டை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்த வேண்டாம். பூச்சி மருந்து விற்பனை நிலை யங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
பூச்சிமருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட்டை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டு உள்ளது.
- மகாலட்சுமி பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
- பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 53). கூலித் தொழிலாளி, இவரது மகள் மகாலட்சுமி (21) இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் வயிற்று வலி வருவதாகவும் அவ்வாறு வயிற்றை வலிக்கும் போது தனியார் மருந்தகத்தில் மருந்தை வாங்கி சாப்பிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு திரும்பி னார். அப்போது வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பருத்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் ஏன் வாந்தி எடுக்கிறாய்? என கேட்டபோது பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி யுள்ளார். அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இவரது தந்தை மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழில் நுட்பத்தின் மூலம் யூரியா வீணாவதை தடுக்க முடியும். வேப்பம் புண்ணாக்கு உள்ள எண்ணெய் சத்து யூரியா கசிந்து நீராக வெளியேறுவதை தடுக்கிறது.
- விவசாயிகள் இதனை வயலில் மாலை நேரங்களில் மட்டும் இட வேண்டும். வயலில் நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதுக்கூர்:
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
எந்த ஒரு பயிரையும் பச்சைப் பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக வைப்பதில் யூரியா உரமே முதலிடம் வகிக்கிறது.
அதனால் விவசாயிகள் தேவைக்கு வைப்பதை விட்டுவிட்டு அதிக பச்சை கொடுப்பதற்காகவும், அதிக வளர்ச்சிக்காகவும் பரிந்துரை செய்யப்பட்ட அளவிற்கு மீறி யூரியா உரங்களை இடுகின்றனர்.
இது உர செலவையும் அதிகரிக்கும். தேவையற்ற தீமை செய்யும் பூச்சிகளையும் பயிரை நோக்கி ஈர்க்கும். பூச்சிகளை கட்டுப்படுத்த மீண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
எனவே விவசாயிகள் ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான யூரியா உரத்தை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் உரச்செலவை குறைக்கலாம்.
நெல்லுக்கு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா மேலுரமாக இடப் பரிந்துரை செய்யப்படுகிறது.இந்த யூரியா வினை நேரடியாக வயலில் இடாமல் ஒரு எளிய தொழில் நுட்பத்தின் மூலம் அடுத்த 15 நாட்களுக்கு தேவையான போது சிறிது சிறிதாக உரமானது பயிருக்கு கிடைக்கும் வகையில் செய்ய இயலும். இதற்கு 5 பங்கு யூரியா எனில் 4 பங்கு ஜிப்சம், ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்கு எடுத்துக்கொண்டு முதலில் யூரியாவையும், வேப்பம் புண்ணாக்கையும் கலந்து யூரியாவின் நிறம் மாறிய பின் ஜிப்சத்தினை கலந்து முதல் நாள் வைத்திருந்து மறுநாள் இடலாம்.
நேரடியாக யூரியா உரத்தை தெளிக்கும் பொழுது நீரில் கரைதல் ஆவியாதல் போன்றவற்றின் மூலம் வீணாகிறது தெளிக்கும் யூரியாவில் 40 சதம் மட்டுமே பயிர் எடுத்துக் கொள்ளும் எனவே விவசாயிகள்.
தொழில் நுட்பத்தின் மூலம் யூரியா வீணாவதை தடுக்க முடியும். வேப்பம் புண்ணாக்கு உள்ள எண்ணெய் சத்து யூரியா கசிந்து நீராக வெளியேறுவதை தடுக்கிறது. ஜிப்சம் மேலுரை போல் செயல்பட்டு அடுத்த 15 நாட்களுக்கு சிறிது சிறிதாக பயிருக்கு எடுத்துக் கொடுக்கும்.
விவசாயிகள் இதனை வயலில் மாலை நேரங்களில் மட்டும் இட வேண்டும். வயலில் நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் லேசாக நீர் கட்டினால் போதுமானது.
அதேபோல் காற்று மற்றும் மண்ணின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பொழுது யூரியா உரம் இடுவதை தவிர்ப்பதே நல்லது.
ஏனெனில் அதிக வெப்ப நிலையில் யூரியா மிக எளிதாக ஆவி ஆகி சென்றுவிடும். பயிருக்கு கிடைக்காது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் யூரியா உரங்களை கொடுக்கும் போது யூரியா வீணாவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு பயிரின் வேருக்கு அருகிலேயே உரமானது கிடைக்கும்.
எல்லாவற்றையும் விட அடிஉரமாக முக்கிய தொழுவரங்களை தேவையான அளவுக்கு இடுவதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்து வங்கியாக இவை செயல்பட்டு.
பயிர் உர சத்துக்கள் எடுத்துக் கொள்ளும். எடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் யூரியாவை தனித்து விடாமல் வேப்பம் புண்ணாக்கு.
ஜிப்சத்துடன் கலந்து விட்டு உரம் வீணாவதை தவிர்க்கவும் தேவையற்ற உரம் இடுவதை கைவிடவும். இவ்வாறு அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
- பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்.
- வயிறு வலிப்பதாக பாட்டியிடம் தெரிவித்தான்.
சேவூர் :
சேவூா் அருகே கருமாபாளையத்தில் வசித்து வரும் கன்னியப்பன், ஜமுனா தம்பதியரின் மகன் சஞ்சய் (11). தனியாா் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
அருகில் உள்ள பாட்டி வீட்டில் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா்.உடனே வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பாட்டியிடம் சென்று குளிா்பானம் என நினைத்து பாட்டிலில் இருந்ததை குடித்துவிட்டேன் என பூச்சி மருந்து பாட்டிலைக் காட்டியுள்ளாா். உடனடியாக அவா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
- திருநாவலூர் அருகே விவசாயி கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32) இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க விஜயகுமார் கடன் வாங்கினார். மேலும் கடந்த தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்றார். சுயேட்சையாக நின்ற போதும் இவருக்கு கடன் ஏற்பட்டது. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் சுயேட்சை தேர்தலில் நின்றதற்கு செலவழிக்க பணத்திற்காக இவர் பல நபர்களிடம் கடன் வாங்கி உள்ளார். . இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடனை கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திரும்ப கேட்டுள்ளனர்.
கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் விஜயகுமாரை திட்டி உள்ளனர். இதனால் நேற்று விஜயகுமாரின் மனைவி இவருடன் சண்டை போட்டு விட்டு திருநாவலூர் காமராஜர் நகரில் உள்ள அ வரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். விஜயகுமார் சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை கூப்பிட மாமியார் வீட்டிற்கு சென்றார் அதற்கு அவரது மனைவி வர மறுத்து விட்டார். கடன் பிரச்சினை யால் தவித்து வந்த விஜயகுமார் மனை வியுடனும் தகராறு ஏற்பட்டதனால் மன உளைச்சலில் இருந்தார். மேலும் மனைவியும் வர மறுத்து விட்டதால் உடனே மாமியார் வீட்டின் பின்பக்கம் சென்று வீட்டு தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த மனைவி மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்கு திருநாவலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் பிரச்சினையால் விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு உயிரை விட்ட சோகம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- தாரமங்கலம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள எடயப்பட்டி கிராமம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). கூலி தொழிலாளி.
இவர் கடந்த 5 வருடமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 1ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயக்கமடைந்த சந்திரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 வயது முதல் 15 வயது வரை உள்ள 188 சிறுவர்கள், 188 சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டது. மேலும் குழந்தைகள் சாப்பிடும் 40 வகையான உணவு பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
சிறுவர்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் சிறுநீரில் சராசரியாக 4.1 மைக்ரோமொல் வளர்ச்சிதை மாற்றத்துக்கான அளவு இருந்தது.
இந்த அளவு அமெரிக்க குழந்தைகளுக்கு 0.101 அளவாக உள்ளது. சிறுவர்களை விட சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகளில்தான் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து இருந்தது.
ஏனென்றால் அந்த வயதில் சிறுமிகள் சிறுவர்களை விட அதிக பழங்கள் சாப்பிடுவது தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதிக விளைச்சலுக்காக ரசாயன பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பழங்கள், காய் கறிகளில் ரசாயன தன்மை படிந்து விடுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்