என் மலர்
நீங்கள் தேடியது "Petrol Pump"
- பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தருமாறு வாக்குவாதம்.
- வாக்குவாதம் அதிகரிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவித்த பெட்ரோல் பங்க் மானேஜரை இருவர் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சிகந்த்ராபாத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பெட்ரோல் நிரப்ப சொல்லியுள்ளனர். ஊழியர் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் கையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர்.
இதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மானேஜர் கூறினால் நிரப்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மானேஜரிடம் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல நிரப்ப கூறியுள்ளனர். அவர் மறுப்பு தெரிவிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும், பெட்ரோல் பங்க் மானேஜருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் அதிகரிக்க கோபம் அடைந்த இருவரும், பெட்ரோல் பங்க் மானேஜரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மானேஜர் படுகாயம் அடைந்து கீழே சரிந்தார். உடனே இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மானேஜரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மானேஜர் உயிரிழந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார்.
- பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந்தேதி தனது காரில் காசர்கோட்டில் இருந்து எழம்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கோழிக்கோடு பய்யோலி தேனாங்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.
காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார். ஆனால் அவரை கழிப்பறையை பயன்படுத்த பங்க் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.
வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானதால் வாலிபர் ஆத்திரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்
- கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஐ.டி.ஐ. முடித்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சூப்பர்வைசராக பூமிநாதன் என்பவரும், இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (வயது45) என்பவர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு 10மணியளவில் விற்பனை முடிந்து வசூல் பணத்தை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென்று 2 பெட்ரோல் குண்டுகளை கடைக்குள் வீசினார். இதில் பயங்கர சத்தத்துடன் அவை வெடித்தது. இதில் உள்ளே இருந்த மதுபாட்டில்கள் உடைந்து தீப்பற்றி எரியத் தொடங்கின.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் கடையில் இருந்த அர்ஜூனனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பூமிநாதனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் டாஸ்மாக் கடையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி சேதமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்காயம் அடைந்த அர்ஜூனனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர் மகன் ராஜேஷ் (23) பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசியதில் ராஜேசுக்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு போலீசார் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஐ.டி.ஐ. முடித்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தந்தை ராஜசேகர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு சரியாக செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மது பழக்கத்தை கைவிடு மாறு ராஜேஷ் தனது தந்தையிடம் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை.
பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை அடிக்கடி மது குடித்து வருகிறார். டாஸ்மாக் கடை இல்லாவிட்டால் அவர் மது பழக்கத்தை கைவிட வாய்ப்புள்ளது என கருதிய ராஜேஷ் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த தகவல்கள் போலீஸ் விசார ணையில் தெரியவந்தது.
- ராஜபாளையம் அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
- என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் முடங்கியார்ரோடு, பி.எஸ்.கே.மாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் நீராசிலிங்கம் (வயது40). தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு பெட்டிக்கடையை பூட்டி விட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவில் வெடி சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தார். அப்போது பெட்டிக்கடை முன்புறம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் தீயை அணைத்தார்.
பின்னர் அங்கு பார்த்த போது பாட்டிலில் திரி பொருத்தப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து பெட்டிக்கடை மீது வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நீராசிலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
- மழை காரணமாக பெட்ரோல் பங்கில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
மழை காரணமாக பெட்ரோல் பங்கில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது. மேற்கூரை இடிந்துவிழுந்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த மூன்று பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இடிந்து விழுந்த மேற்கூரையை அகற்றும் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஏழு பேருக்கு தொடர் சிகிச்சை.
- காயமுற்ற மூன்று பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதி.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 30 வயது இளைஞர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் கந்தசாமி என்பதும், இவர் பெட்ரோல் பம்ப்-இல் பணியாற்றி வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நான்கு பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், மூன்று பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், பங்க் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு
- மரவள்ளி கிழங்கு முழுவதும் எரிந்து.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி டி. பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியனுக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகிறது. இந்த முன் விரோதம் காரணமாக ஜெயராமனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்குவை, சம்பவத்தன்று சுப்பிரமணியன் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் 4 ஏக்கர் மரவள்ளி கிழங்கு முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து.
- பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கந்தன்சாவடி பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுத்து நிறுத்தினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- பெட்ரோல் பங்கில் யானை ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பெட்ரோல் பங்கில் யானை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது.
இந்த பெட்ரோல் பங்கில் யானை ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்கில் யானையைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
இதுதொடர்பான காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பெட்ரோல் பங்கில் யானை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
யானை ஊருக்குள் வந்த சம்பவம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைமையில் நாடு தழுவிய போராட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் அல்லாத, ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கல்வீச்சு, பஸ் உடைப்பு போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், அத்துமீறி சாலை மறியலில் ஈடுபடும் போராட்டக்காரர்களை போலீசாரும் கைது செய்து வருகின்றனர்.

மேலும், பீகார் மாநிலத்தில் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. பாட்னா, மும்பை போன்ற பகுதிகளில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும், போராட்டங்கள் வன்முறையாகாத வண்ணம் போலீசார் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டு வருகின்றனர். #BharathBandh #PetrolDieselPriceHike