என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pilgrimage"
- பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி காலையில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். வழக்கமாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் தான் பக்தர்களின் வரிசையானது கோவிலையும் தாண்டி மாட வீதியில் வரை காணப்படும். நேற்று விடுமுறை தினம் என்பதால் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
நேற்று வழக்கத்தை விட பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் பக்தர்கள் பலர் பகலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று முடிவு செய்து வரிசையில் நின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதி வரை பக்தர்கள் வரிசை நீண்டு காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தலையில் துண்டு வைத்து மறைத்தும், குடை பிடித்தபடியும் வரிசையில் நின்றனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதுடன் மோர் வழங்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தினால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
மேலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் தனித்தனியாக நேற்று கிரிவலம் சென்றனர். மாலையில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
பவுர்ணமி கிரிவலமானது இன்று மதியம் 12.55 மணி வரை உள்ளது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரை தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
- ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது.
- வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது.
திருவனந்தபுரம்:
ஹஜ் பயணம் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவூதிஅரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஒரு தனி முறையாகும். உடல் நலமும், பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஒவ்வொரு வரும் தனது ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் புனித செய்ய வேண்டும்.
ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் அனைவருமே ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்புவார்கள். ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு நமது நாட்டில் அரசே மானியமும் வணங்குகிறது. அதனை பயன்படுத்தி ஆண்டுதோறும் பலர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு 11,556பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமானவர்கள் ஹஜ் புனித பயணத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 18,337 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,250 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 3,584 பேர் பெண்கள்.
ஹஜ் பயணம் செய்வதற்கு கேரளாவிலிருந்து முதல் விமானம் வருகிற மே மாதம் 26-ந்தேதி புறப்படுகிறது. ஆனால் முதல் ஹஜ் விமானம் புறப்படும் இடம் மற்றும் நேரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. விமானங்களின் அட்டவணை வெளியிட்ட பின்னரே அனைத்து விவரங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஹஜ் பயண முகாம் கேரளாவில் 20 முதல் 22 நாட்கள் வரை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு 15 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. அதாவது வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது. இந்த நாட்களில் கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து ஹஜ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
கரிப்பூர், கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கான போர்டிங் மையங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகமாக விமானங்கள் இயக்கப்படும் என தெரிகிறது.
பெரிய விமானங்களுக்கு அனுமதி இல்லாததால் ஏர் எக்ஸ்பிரஸ் விமானங்கள் 145 பயணிகளுடன் செல்லும் என தெரிகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து மெக்காவிற்கு விமானத்தில் பறக்க உள்ளனர்.
ஆரம்ப கட்டத்தில் ஹஜ் பயணத்திற்கு அனுமதி பெற்ற 16,776 பயணிகளின் 9,750 பேர் கரிப்பூர் விமான நிலையத்தை புறப்படும் இடமாக தேர்வு செய்துள்ளனர். மேலும் 1,500 பேர் இங்கிருந்து பறக்க வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.
இதனால் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து ஹஜ்ஜிற்கு 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்.
- கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது பெரும்பாலான இந்துக்களிடம் வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள்பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் செல்கின்றனர். அவர்கள் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பல சிறுவர்கள் ஆண்டி கோலமிட்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளை மறுநாள் தை 1-ந்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- பக்தர்கள் சாலைகளின் நடுவே அபாயக ரமான இடங்களில் நடந்து செல்வதை தவிர்த்திட வேண்டும்.
- போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . செப்டம்பர் 9-ம் தேதி வரை விழா நிறைவடைகிறது. இந்த விழாவில் இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சப்பரத்துடன் பக்தர்கள் வேளாங்கண்ணி நோக்கி நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கழக டிரைவர்கள் கவனத்துடனும், நிதானமாகவும், வளைவுகளில் திரும்பும்போது ஹாரன் சத்தம் செய்தும் , பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கியும் செல்ல வேண்டும்.
நடத்துனர்களும் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களிடம் கனிவாகவும், அன்பாகவும் நடந்த கொள்ள வேண்டும். அதே போல போக்குவரத்து கழக நிர்வாகமும் வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு பஸ்களை முறையாக பராமரித்து இயக்கிட வேண்டும்.
பாதயாத்திரையாக வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் சாலை விதி, போக்குவரத்து விதிமுறைகளை மதித்து, இடது புறமாக ஒருவர் பின் ஒருவராக வரிசையாக செல்ல வேண்டும். பக்தர்கள் ரெயில்வே தண்டவாளங்கள், சாலைகளின் நடுவே அபாயக ரமான இடங்களில் நடந்து செல்வதை தவிர்த்திட வேண்டும் என்று போக்கு வரத்து தொழிலாளர் சம்மே ளனம் ஏ.ஐ.டி.யூ.சி மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன் அறிவுறுத்தி உள்ளார்.
- சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர்.
- உடலை பிரரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது66). இவர் புனித பயணமாக மெக்காவிற்கு தனது குழுவினருடன் சென்று இருந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை பக்ரைனில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து விமான பணிப்பெண்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜா முகமதுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதனால் அவருடன் வந்திருந்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்து போன ராஜாமுகமதுவின் உடலை விமான நிலைய போலீசார் மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4.10 மணிக்கு சென்னையில் இருந்து பக்ரைனுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். இதில் பயணம் செய்ய 192 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.
பயணி இறந்ததை தொடர்ந்து அந்த விமானத்தை ஊழியர்கள் கிருமிநாசினிகள் தெளித்து முழுமையாக சுத்தப்படுத்தினர். இதனால் விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக காலை 6.40 மணிக்கு பக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.
- சுதந்திரம் பெற்று 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் முன்பு 5 நாள் பாத யாத்திரையை தொடங்கினர்.
- விடுதலைக்காக போராடிய தியாகத் தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.
தரங்கம்பாடி:
இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, தில்லையாடி கிராமத்தில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் முன்பு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ. வுமான ராஜகுமார் தலைமையில் 5 நாள் பாத யாத்திரையை தொடங்கினர்.
நினைவு மணிமண்டபத்தில் தில்லையாடி வள்ளியம்மைக்கு மாலை அணிவித்து
எம்.எல்.ஏ. ராஜ்குமார் பாதயாத்திரையை தொடங்கினார்.
விடுதலைக்காக போராடிய தியாகத் தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த பாதயாத்திரை குத்தாலத்தில் முடிவடைகிறது.நாளை 11ம் தேதி குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு மணல்மேடு சென்றடைகிறது. 12ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு
13ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடத்தை அடைகிறது.
14ம் தேதி கொள்ளிடத்தில் இருந்து மாதானம் வழியாக பாதையாத்திரை சீர்காழி வந்தடைகிறது.
சீர்காழியில் ராஜகுமார் எம்.எல்.ஏ தலைவர்கள் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் மண்டபத்தை திறந்து வைத்து பவளவிழா நினைவு கொடியினை ஏற்றி வைத்து பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.
இந்த பாதயாத்திரையில் மாவட்ட பொதுச்செயலாளர் கனிவண்ணண், பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன் உள்ளீட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கு ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சிமன்ற தலைவர்கள் தில்லையாடி ரெங்கராஜ், திருக்கடையூர் ஜெயமாலதி சிவராஜ், ஆக்கூர் சந்திரமோகன், இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், ஆங்காங்கே வரவேற்பு கொடுத்து மரியாதை செய்தனர்.
கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. புனித பயணம் ஜூலை மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்‘ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு வருகிற 6-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்