search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pipeline"

    • 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பணிகள் முடிந்ததும் விரைவில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் தொடங்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளுக்கு ஏற்றி சராசரியாக 4 நாட்கள் இடைவெளியில் வினியோகம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 20,30,44, 51 ஆகிய 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டப்பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்த நிலையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளின் குழாய் பதிக்கும் பணி பூமிபூஜை தொடக்க விழா 51-வது வார்டில் ஷெரீப் காலனியில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 20,30, 44-வது வார்டுகளில் தொடர்ந்து பணிகள் நடைபெற உள்ளது.

    குழாய் பதிப்பு மற்றும் இணைப்பு, குடிநீரை அளவீடு செய்யும் ஸ்கேடா கருவிகள் பொருத்துதல், மேல்நிலைத்தொட்டிகளில் தானியங்கி கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பணிகள் முடிந்ததும் விரைவில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் தொடங்கப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

    • இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்.
    • 2024 பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

    கோவை,

    இந்தியன் ஆயில் கார்ப்ப–ரேஷன் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய நிர்வாக இயக்குனர் வி.அசோகன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 7 பெட்ரோலிய எண்ணை முனையங்கள், 13 சமையல் எரிவாயு நிரப்பும் மையங்கள் அமைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம் ஆசனூரில் ரூ.466 கோடி மதிப்பில் பெட்ரோலியம் சேமிப்பு முனையம், சென்னை துறைமுகத்தில் ரூ.921 கோடி மதிப்பில் பெட்ரோலியம் முனைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் மூலம் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் ரூ.200 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகே மணலியில் ரூ.1,600 கோடியில் உலகிலேயே 2-வது மிகப்பெரிய லூப்ரிகண்ட் பிளாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை முடித்து 2024 பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இருப்பிடச்சான்று இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி கொள்ளும் விதமாக பெட்ரோல் பங்க்குகள் மூலம் ஏற்கனவே 5 கிலோ சமையல் எரிவாயு உருளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது முதல் கட்டமாக சென்னையில் காமதேனு நியாய விலை கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு உருளை விற்பனை தமிழக அரசு உதவியுடன் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரை வில் அனைத்து மாவட்டங்க ளுக்கும் விரிவு படுத்தப்படும்.

    அதேபோல பாலிமர் சுற்றப்பட்ட பைபர் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட எடை குறைவான சமையல் எரிவாயு உருளை 5 மற்றும் 10 கிலோ அளவுகளில் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வகை எரிவாயு உருளைகளால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திரவ பசுமை வாயுவை (எல்என்ஜி) எடுத்து செல்வதற்காக 1,400 கி.மீ தொலைக்கு பைப்லைன் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை-பெங்களூரு, சென்னை-புதுச்சேரி, சென்னை-தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பைப்லை ன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வீடுகளுக்கான பைப்லைன் திட்டம் 11 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்துக்காக அடுத்த 8 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் ேகாடி செலவிடப்பட உள்ளது. இதுபோல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.15 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    • காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலு விழந்த நிலையில் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது‌.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் அருகே சொக்கநாதபுரத்தின் வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் தற்சமயம் காட்டாற்று வெள்ளம் போல் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் இக்கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. தற்போதும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலு விழந்த நிலையில் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது‌.

    எனவே இதைப் போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் புதிய குழாய்களை பதிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கடைகோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்க வேண்டும்

    திசையன்விளை:

    நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகர பகுதி களில் உள்ள மருத்துவமனை களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கடைகோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிசன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், ராதாபுரம் யூனியன் ஆணையாளர் பிளாரன்ஸ் விமலா சமுக சேவகர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர்.
    • கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் அய்யப்பன் பேசுகையில், தனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் பத்மகுமரேசன் பேசுகை யில், தாராசுரம்பகுதி கும்பகோணம்மாநகரா ட்சியால் புறக்கணிக்க ப்படுகிறது என்றே நினைக்க தோன்றுகிறது. தாராசுரம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதிலட்சுமி பேசுகையில், கூட்டத்தில் முக்கியமான பொருளை விவாதத்திற்கு கொண்டு வந்துள்ள போது அது குறித்து விவாதிக்காமல் கூட்டத்தை முடித்து தீர்மானங்களை நிறைவேற்றுவது கண்டிக்க த்தக்கது என்றார்.

    இதேபோல, கவுன்சி லர்கள் பலர் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் நகர் நல அலுவலர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×