search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poetry"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவிதை பாடிய குழந்தைகளை அருகே அழைத்து, கட்டி அணைத்த பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார்.
    • பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்திக்க வந்துள்ளனர்.

    டெல்லியில் பிரதமர் மோடியை அவர் அலுவலகத்தில் சந்தித்த இரு குழந்தைகள், பிரதமருக்காக இயற்றிய கவிதையை பாடி அவரின் மனதை கவர்ந்தனர். கவிதை பாடிய குழந்தைகளை அருகே அழைத்து, கட்டி அணைத்த பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார். 

    இந்த குழந்தைகள் அரியானா மாநில ஆளுநராக இருக்கும் பண்டாரு தத்தாத்ரேயாவின் பேத்திகள் ஆவர். பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்திக்க வந்துள்ளனர்.

    அப்போது இந்த குழந்தைகள் பிரதமருக்கான இயற்றிய கவிதையை பாடினர். கவிதையை பாடிய குழந்தைகளை பிரதமர் மோடி கொஞ்சிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
    • கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.'

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.

    • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

    புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

    மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

    இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

    • கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் கலந்து கொள்ளலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவிதை- பேச்சு போட்டி

    தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து வகை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    எனவே கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி போட்டிக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் கையொப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் வழங்க வேண்டும்.

    போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கு வருகை தந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும்.

    ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நாளன்று வழங்கப்படும்.

    மாநில போட்டிக்கு....

    ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலப் போட்டி தொடர்பான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.

    மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் சம்சுதீன் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த அரிய வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் மொழிக்கான பங்களிப்பை நினைவுகூறும் வகையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
    • ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கிய கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் 'தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களது பிறந்தநாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக உமறுப்புலவர், தாயுமானவர், சுப்பிரமணியம் மற்றும் வெள்ளை வாரணனார் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி முற்பகல் 9.30 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள போப் ஜான்பால் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    இக்கருத்தரங்கில் தஞ்சாவூர் மாவட்ட த்திலுள்ள தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ் இலக்கிய விழாவினைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது.
    • வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது. போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத போது வேதாரண்யம் மீன், உப்புக்கு இந்த ரயிலே பிரதானம்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த ரயில் தடம் ரூ. 288 கோடி செலவில் 10 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதையாக மாற்றும் வேலை தொடங்கியது.

    இப்போது வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.

    நேற்று 22.10.22 திருத்து றைப்பூ ண்டியிலிருந்து மதியம் 1 மணிக்குசோதனை ஓட்டம் தொடங்கி அகஸ்திய ம்பள்ளி வரை மாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    அதனை வரவேற்கும் நிகழ்ச்சியாக அண்டா்காட்டை சோ்ந்த பல்வேறு விருதுகளை பெற்ற நல்லாசிரியர் மு.வசந்தா பள்ளி மாணவ, மாணவி்களையும், பொதுமக்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் ரயில் சேவையை வரவேற்கும் வகையிலங கவிதை பாடி வரவேற்றார்.

    ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, தடக் தடக் ரயிலே ஓடி வா, தங்க ரதமே ஓடி வா, கூக்கூ ரயிலே ஓடி வா, கூட்ஸ் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ஆதிரெங்கனை வழிபட்டு வா, மேலமருதூரில் மிதந்து வா, கரியாப்பட்டினத்தை கடந்து வா, குரவப்புலத்தில் நின்று வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, நெய்விளக்கின் ஒளி கொண்டு வா, தோப்புத்துறையை தொட்டு வா, திருமறைக்காட்டு மான் போல் வா, அகத்தியா் பாதம் தொட்டிட வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா என கவிதை பாடியுள்ளார்.

    • இதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • தஞ்சையில் அடுத்த மாதம் 15-ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் அடுத்த மாதம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

    இதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரங்குகள் அமைக்கப்படும் இடம்? உள்ளிட்ட பலவற்றை குறித்து கேட்டறிந்தார்.

    இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் அடுத்த மாதம் 15-ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான புத்தக விற்பனையாளர்கள், வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கருத்தரங்கு, சொற்பொழிவு, கவியரங்கம் நடைபெறும். 108 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அனைவருக்கும் அதற்கான பயன்கள் கிடைக்கும். இந்த மாதம் 28 முதல் அடுத்த மாதம் 28-ந் தேதி வரை உழவன் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    விருதுநகர் மாவட்ட 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிவஞானம் பரிசுத்தொகை வழங்கினார்.

    விருதுநகர்:

    தமிழகப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பேச்சுத்திறன் மற்றும் படைப்புத்திறனை வெளிக் கொணரும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடைபெற்ற போட்டி களில், கவிதைப் போட்டியில் திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவீட்டி சுவேதா முதலிடத்தினையும், மே.சின்னையாபுரம் தேவ சகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜலட்சுமி 2-ம் இடத்தையும், விருதுநகர் வித்யா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவி திவ்யா 3-ம் இடத்தினையும் பெற்றனர்.

    கட்டுரைப்போட்டியில் சாரதா சக்தி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி முதலிடத்தினையும், திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோதிகா 2-ம் இடத்தினையும், சாத்தூர் சா.இ.நா.எட்வர்டு மேல் நிலைப்பள்ளி மாணவன் திருச்செந்தில் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    பேச்சுப்போட்டியில் ராஜ பாளையம் ரமணா வித்யாலயா மாணவி நேக மீனா முதலிடத்தினையும், விருதுநகர் வித்யா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 2-ம் இடத்தையும், வில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவி விஷ்ணுப்பிரியா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு ரூ.66 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    நிகழ்வுகளில் விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச் சித்துறை உதவி இயக்குநர் சுசிலா உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை நடக்கிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. 

    இதேபோல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ந்தேதி கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

    போட்டிகளில் முதல் இடம் பிடிப்பவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த அரிய வாய்ப்பினை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    ×