என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police inquriy"
சரவணம்பட்டடி:
கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் முருகன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினசரி நடைபயிற்சி செல்வது வழக்கம். அதே போல இன்று சிலர் மலைப்பாதையில் நடை பயிற்சி சென்றனர். அப்போது முள்புதர்களுக்கு இடையே 3 வயது மதிக்க தக்க பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் குழந்தை யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது நேற்று மாலை இந்த குழந்தையுடன் ஒரு ஆண் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பெண் ஒருவர் தனது குழந்தையை காணவில்லை என அந்த பகுதிக்கு தேடி வந்தார். இதனை பார்த்த போலீசார் பெண்குழந்தை இறந்து கிடக்கும் பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். பின்னர் இறந்து கிடப்பது உங்கள் குழந்தையா? என அடையாளம் காட்டும்படி கூறினர். அப்போது அந்த பெண் இறந்து கிடப்பது தனது குழந்தைதான் என கூறி குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்த தமிழ் என்பவரது மனைவி ரூபி என்பதும், இறந்து கிடந்தது இவர்களின் குழந்தை தேவிஸ்ரீ (வயது 3 ) என்பது தெரிய வந்தது.
தொடந்து போலீசார் குழந்தையின் தாய் ரூபியிடம் குழந்தை இங்கு எப்படி வந்தது? குழந்தை எப்போது காணாமல் போனது. குழந்தையை இங்கு யார் அழைத்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர்:
திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் எர்ணாவூர் பகுதியில் பணியை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் உடன் பயணித்த 3 பேர் அவரை ஏமாற்றி அவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். எண்ணூர் விரைவு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததால் செல்போன் கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது. இதனையடுத்து பாரிமுனையில் செல்போன்களை விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், தனசேகரன் என்பதும் திருவொற்றியூரை சேர்ந்த சுரேந்திரன் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போரூர்:
எண்ணூர் தாழம்குப்பம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகணேஷ். ஆட்டோ டிரைவர். இவர் இன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சவாரி ஏற்றிக்கொண்டு ராமாபுரம் வந்தார்.
பின்னர் அவர் திரும்பி சென்று கொண்டு இருந்தார்.நெசப்பாக்கம் ஏரிக்கரை சர்வீஸ் சாலையில் வந்த போது தீடீரென ஸ்ரீகணேஷ் அமர்ந்து இருந்த இருக்கையின் கீழ் பகுதியில் இருந்து கரும் புகை கிளம்பியது.
உடனடியாக ஸ்ரீகணேஷ் ஆட்டோவை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் ஆட்டோ மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும் எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அசோக் நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது.
ஆட்டோ தீப்பிடித்ததும் இறங்கியதில் அதிர்ஷ்ட வசமாக ஸ்ரீகணேஷ் உயிர் தப்பினார். பேட்டரி வெடித்து அதில் ஏற்பட்ட மின் கசிவால் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் - மூவரசன் பேட்டை மெயின் ரோட்டில் கங்கை அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள உண்டியலை மர்ம ஆசாமிகள் நேற்று உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர். இந்த கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா வயரை துண்டித்து விட்டு இந்த கொள்ளை நடந்துள்ளது.
இதன் பின்புறம் வல்ல விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள பாதாள விநாயகர் கோவிலில் நேற்று இரவு உண்டியலை உடைத்து கொள்ளயடிக்க முயற்சி நடந்தது. அப்போது, அபாயமணி ஒலித்தது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
தாம்பரம்:
மேற்கு தாம்பரத்தில் ஜெருசலேம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்கிற கருப்பசாமி (45). இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். உறவினர் திருமணத்துக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றிருந்தார். இன்று காலை திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ மூலம் விசாரித்து வருகின்றனர்.
ராயபுரம்:
சென்னை தண்டையார்பேட்டை கப்பல் போலு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சோமசேகர் (வயது 14). 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த சோமசேகர் திடீரென்று தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த அவனை சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் தாலுகா காவல் சரகத்திற்குட்பட்ட புலவலம் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார். விவசாயி. இவருடைய மனைவி மதிசெல்வி (வயது 31). இவர்களுக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் மதிசெல்வி கணவரை பிரிந்து திருவாரூர் அருகே உள்ள விளமல் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த வந்த அவர் கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மதிசெல்வி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். கூலித் தொழிலாளி. இவர் மது பழக்கத்தக்கு அடிமையானதால் மனைவி நாகம்மாள் சண்டை போட்டு விட்டு மகள்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த கோவிந்தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள சம்பக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்த பழனி மகள் மஞ்சுளா (வயது 21). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது செங்குறிச்சி மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சவுந்தரம் (25) என்பவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மஞ்சுளாவின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுளாவையும், அவரை கடத்திய வாலிபரையும் தேடி வந்தனர். போலீசார் தேடி வருவதை அறிந்ததும் சவுந்தரம் தனது காதலியை கோவிலில் திருமணம் செய்து கொண்டு இன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.
போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற வாலிபர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் போலீசில் சிக்கினார்.
குடிபோதையில் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவரை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் வண்டிக்குரிய ஆவணங்களை கேட்டனர். குடிபோதையில் இருந்ததால் பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர். இதனால் போலீசாருடன் ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது எனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் என்று கூறிய ராதாகிருஷ்ணன், அபிராமபுரத்தில் கொண்டு விடுவதற்காக இன்னொரு நண்பரை ஏற்றிச் செல்கிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கூறினார்.
ஆனால் போலீசார், ராதாகிருஷ்ணன் அங்கிருந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் தன் மீது வழக்கு போட்டு விடுவார்களோ என போலீசுக்கு பயந்து ராதாகிருஷ்ணன், பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் ராதாகிருஷ்ணனை கண்டு பிடிக்க முடியவில்லை.
நேற்று 2-வது நாளாக தேடினர். அப்போதும் ராதாகிருஷ்ணன் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இன்று 3-வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அடையாறு ஆற்று முகத்துவாரத்தில் உள்ள மடையின் 3-வது கண்ணில் ராதாகிருஷ்ணன் உடல் இருப்பதை பார்த்தனர்.
ஆற்றில் குதித்தபோது சேற்றில் சிக்கி ராதாகிருஷ்ணன் பலியாகி உள்ளார். பின்னர் தண்ணீரில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உடல் மடையில் சிக்கி உள்ளது.
ராதாகிருஷ்ணன் சாவுக்கு போலீசாரே காரணம் என்று குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் திரு.வி.க. பாலம் அருகே இன்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். இதன் காரணமாக மறியல் கைவிடப்பட்டது. #Tamilnews
திருவான்மியூர்:
அடையாறு மேம்பாலம் அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். மதுபோதையில் யாராவது வாகனத்தை ஓட்டி வருகிறார்களா? என்று சோதனை செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் சோதனை செய்தனர். அவர் மதுபோதையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். ஆனால் ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை திருப்பி தரும்படி கேட்டார். தான் குறைவாகவே மது அருந்து உள்ளேன். இதனால் அபராதம் மட்டும் விதியுங்கள் என்று கூறினார். இதில் அவருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென்று ராதாகிருஷ்ணன் ஓடிச்சென்று அடையாறு ஆற்றில் குதித்துவிட்டார். இதைபார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அடையாறு ஆற்றில் குதித்த ராதாகிருஷ்ணனை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.இருட்டாக இருந்ததால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது.
அடையாறு ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. இதனால் ராதாகிருஷ்ணன் மறுகறையில் ஏறி சென்றுவிட்டாரா? அல்லது ஆற்றில் சிக்கி உள்ளாரா? என்று தெரியவில்லை. இன்று காலையும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை:
சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் 14 பேரிடம் வழிப்பறி நடந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவில் சென்னை மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் 700-க்கும் மேற்பட்ட லாட்ஜீகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டனர்.
போலீசாரின் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே நாள் இரவில் பிடிபட்டனர். வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளும் சிக்கினர்.
2-வது நாளாக நேற்று இரவும் வாகன சோதனை நடத்தப்பட்டது. குற்ற பின்னணியை கொண்டுள்ள பழைய குற்றவாளிகள், பிடிவாண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த சோதனை நடந்தது.
இதில் நேற்று இரவும் 500 பேர் சிக்கினர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும் சிக்கினர். வாகன சோதனையின் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 53 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்