என் மலர்
முகப்பு » police investigation செல்வபுரம் குளத்தில் இளம்பெண் பிணம்
நீங்கள் தேடியது "police investigation செல்வபுரம் குளத்தில் இளம்பெண் பிணம்"
கோவை செல்வபுரம் குளத்தில் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை செல்வபுரம் செல்வாம்பதி குளத்தில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொன்று வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
நிர்வாண நிலையில் மிதந்த பெண்ணின் தலை, கைகள், வயிறு துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் தனித்தனியாக வீசப்பட்டு இருந்தது. கால்கள் இதுவரை கிடைக்கவில்லை.
கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சமீபத்தில் மாயமான இளம் பெண்களின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி வீசியிருப்பதால் இவ்வழக்கில் குறைந்தது 2-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அதற்குள் அரிசியை போட்டு குளத்தில் வீசி உள்ளனர். இதனால் 3 நாட்களுக்கு பிறகே உடல் வெளியே வந்துள்ளது.
நன்கு திட்டமிட்டு இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், இந்த கொலையில் கூலிப்படை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடித்தால், இவ்வழக்கில் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும் என்பதால் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த கொலையில் துப்பு துலக்குவதற்காக மாநகர துணை கமிஷனர் லட்சுமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம் விடுதியில் சென்னை வக்கீல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது50). வக்கீலான இவர் தனது இரண்டாவது மனைவியுடன் சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த 7-ந்தேதி அவர் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள தனியார் விடுதியில் தனியாக வந்து தங்கியிருந்தார். அவரது அறை நேற்று மாலை வரை திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அறைக்கதவை திறந்து பார்த்த போது அங்குள்ள கட்டிலில் ரவீந்திரன் இறந்து கிடந்தார். அருகில் விஷப்பாட்டிலும் கிடந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
ரவீந்திரன் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்தார் என்பது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது45). இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை குடும்பத்தார் அவரது சட்டை பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்தனர். அதில் குடும்ப பிரச்சனை காரணமாக தான் தற்கொலை செய்யப்போவதாக எழுதி இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஈஸ்வரன் இன்று காலை தலை கீழாக குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ஈஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். #Tamilnews

சங்கரன்கோவிலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமிபாண்டி மகன் சுரேஷ்பாபு (வயது28). இவர் தொழில் காரணமாக சங்கரன்கோவில் கீழ செக்கடி தெருவில் வீடு பார்த்து தனியாக வசித்து வந்தார். சுரேஷ்பாபுவின் தந்தை இறந்து விட்ட நிலையில் அவரது தாய் மற்றும் சகோதரி இருவரும் பனையூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சுரேஷ்பாபுவிற்கு அவரது குடும்பத்தினர் போன் செய்தும் எடுக்கவில்லை. மேலும் எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் சங்கரன் கோவிலுக்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்து டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுரேஷ்பாபு வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ்பாபு தற்கொலை செய்ததற்கு காரணம் தெரியவில்லை. காதல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து வடமாநில வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
வடமாநிலத்தில் இருந்து, குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்திற்குள் புகுந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள், தமிழில் பேச தெரியாததால், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து, அந்த பகுதி மக்கள் சரமாரி தாக்கினர். இதில் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி சரிந்த அந்த நபரை அங்கிருந்த சிலர் ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் விரைந்து சென்று விசாரித்தார்.
இதில், நேற்று மாலை ஒன்னல்வாடி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த அந்த நபர், குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாலிபர்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அந்த நபருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எந்த மொழியும் தெரியாததால், தன்னிடம் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால், அவர் குழந்தைகளை கடத்த வந்தவர் என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்ட மக்கள், அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவர், தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை வரை அவரை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை. இதனால் போலீசார் அவரது பிணத்தை புகைப்படமாக எடுத்து ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளிகளிடம் காட்டி அவர் யார் என்று விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வாலிபருடன் மேலும் 2 வடமாநில வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களையும் பொதுமக்கள் தாக்க ஆரம்பித்த உடன் அவர்கள் 2 பேரும் தப்பியோடி விட்டனர். அவர்கள் பிடிபட்டால் தான் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவரும்.
இந்த நிலையில் வட மாநில வாலிபரை அடித்து கொலை செய்தது யார் என்பது குறித்து ஒன்னல்வாடியில் இன்று போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜப்பா மகன் மூர்த்தி (25) என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து, வடமாநில மாநிலத்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வட மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

×
X