என் மலர்
நீங்கள் தேடியது "politics"
- அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன்.
- 'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19, 1933-ல் பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ்மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்.
கிருஷ்ணகுமாரி என்பவரை துணைவியாகக் கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் தமிழிசை சவுந்தரராஜன், இன்று டாக்டர், அரசியல்வாதி, தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னர் என பன்முகத் தன்மை கொண்டு பணியாற்றி வருகிறார்.
அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னதாக பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட தொகுதி என்பதால், அதனை தன்வசப்படுத்திய மகிழ்ச்சியுடன் நாடாளுமன்றத்தில் கால்பதித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பினார்.
'காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கிய இவர், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து 1984 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி அவர் வசமே நின்றது.

தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது
இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிக் கனிகளை சுவைத்தார்.
பின்னர் முழுமையாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட குமரி அனந்தன், 1996 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் அவருக்கானதாக அமையவில்லை. இரண்டு தேர்தல்களிலும் தோல்வியே அவரை வந்து தழுவியது. இருப்பினும் தொடர்ந்து அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.
குமரி அனந்தன் 5 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவராவார். மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.
பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளும் இவர் மேற்கொண்டுள்ளார்.
அரசியலில் பின்னடைவுகளை சந்தித்த போதிலும், மனம் தளராமல் தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது வாழ்க்கை பயணம், அரசியலில் கால்பதிக்கும் புதியவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது.
- டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
- என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன்.
குஜராத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியையும் அதன் கேப்டன் டோனியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு அடுத்த சீசனிலும் விளையாடுவது குறித்து டோனி கூறியதாவது, மிகவும் உணர்வுப்பூவமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.
இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் டோனியின் முடிவு குறித்து டுவிட் செய்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன். ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக செயலாற்றுகிறாரோ, அதே அளவுக்கு அவரிடம் அறிவார்ந்த சிந்தனையும் உள்ளது என உணர்ந்தேன். புதுமையான விஷங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். நிச்சயம் டோனி வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார்.
டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- அரசியல் கட்சிகள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்போம்.
- மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.
மதுரை
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தே.மு.தி.க. சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இன்று தே.மு.தி.க. 19-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது உரிமைத் தொகை ஆயிரம் வழங்கியுள்ளது.
இது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், இந்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கிறது. அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மதுரையில் பல சாலைகள் குண்டும் குழியுமாகவும், குப்பை கூழமாகவும் இருக்கிறது.
மேலும் இந்த உரிமை தொகை ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் போன்று. 'உன் பணம் பணம். என் பணம் பணம், உன் பணம் என் பணம்' என்ற நிலையில் தான் இருக்கிறது. மேலும் தேர்தல் வருவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகள் சனாதன பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. மக்களிடம் சனாதனம் குறித்து எந்த பாகுபாடும் இல்லை. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அரசியல் கட்சிகள் தான் தங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சனாதன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்.
இப்போது சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இதனால் சனாதனத்தை கையில் எடுக்கிறார்கள். அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை கையில் எடுப்பதை விட்டுவிட்டு, அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பாலன், அழகர்சாமி, கணபதி, முத்துப்பட்டி மணிகண்டன், பாலச்சந்திரன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- சங்கர் என்ற கோவிந்தன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார் தலைமை தாங்கினார். சிவாலயா இளங்கோவன், டாக்டர் கணேஷ், சித்தானந்தம், ராஜேந்திரன், சங்கர் உடையார், செந்தில்முருகன், வெற்றியழகன், புகழ் என்ற ராமலிங்கம், சங்கர் என்ற கோவிந்தன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலோசனைக் கூட்ட த்தில் அ.தி.மு.க. மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் சிறப்புரையாற்றினார். நெல்லித்தோப்பு தொகுதி பலமுறை அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதியாகும். திமுகவை சேர்ந்த ஜானகிராமன் இந்த தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்-அமைச்சராக இருந்தார்.
தி.மு.க. முதல்-அமைச்சரையே எதிர்த்து தொண்டர்கள் தீவிர பணியாற்றிய தொகுதியாகும். இந்த தொகுதியின் தொண்டர்களின் உழைப்பால் சட்டமன்ற உறுப்பினராக பதவி சுகம் கண்டவர் இன்று கட்சிக்கு துரோகம் செய்துள்ளார்.
கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் இருந்து காணாமல் போவா ர்கள். நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக உழைப்பால் பாஜகவை சேர்ந்த ஒரு சிறு பிள்ளை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சட்டமன்ற தொகுதி முழுவதும் சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆளும்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இந்த தொகுதியினுடைய முன்னேற்றத்திற்கு இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாநிலத்தில் பாஜகவும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணியில் இருந்தாலும் மாண்புமிகு முதலமைச்சர் மன நிம்மதியுடன் முதல்-அமைச்சராக செயல்பட முடியவில்லை. முதலமைச்சரின் அனைத்து முடிவுகளிலும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. புதுச்சேரியை ஆளும் அரசு விளம்பர அரசாகவும், அடிக்கல் நாட்டும் அரசாகவும் உள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான அரசாக இல்லை.
இவ்வாறு பேசினார்.
- அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.
- பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மிகத் திறமையாகச் செயல்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியதாகும்.
பா.ஜனதா அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத் துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மாநில அரசின் அனுமதி இன்றி இந்த அமலாக்க துறையை தலைமை செயலகத்துக்குள் ஏவி விட்டு தி.மு.க. அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த பா.ஜனதா அரசு முனைந்தது.
தற்போது மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு உள்ளே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நுழைந்து சோதனை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.
மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.
அப்போது ஏலச்சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் கைது செய்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.
தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம் ஒன்றிய பா.ஜனதா அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது.
அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.
அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
- கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றம் வரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவேன் என்ற கமலின் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் தான் இப்போது அரசியல் களத்தில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
ஆனால் இப்போது சென்னை தண்ணீரில் தத்தளிக்கும் போது அரசை விமர்சிக்கும் நேரமல்ல என்றும் இயற்கை பேரிடரில் மக்கள் தான் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த கருத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இது பற்றி பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-
மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று கட்சி தொடங்கியவர். பாவம் இப்போதும் ஏமாற்றம் வந்துவிட கூடாதே. எப்படியாவது ஒற்றை சீட்டாவது வேண்டுமே என்பதற்காக தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். வேறென்ன சொல்ல? என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம்.
- அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.
வெள்ள நிவாரண பணிகள் ஒருபுறம் நடந்த நிலையில் அரசியலுக்கான வியூகத்தையும் பா.ஜனதா வகுத்தது. 39 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து கமலாலயத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம். அதேபோல் சட்டமன்ற தொகுதிகள் தோறும் ஒரு அலுவலகம்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் திறக்க வேண்டும். இந்த அலுவலகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். வருகிற 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் எவ்வளவு உறுப்பினர்கள் புதிதாக சேர்க்க முடியுமோ அவ்வளவு பேரையும் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தொழில் அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் என்று கட்சி சாராமல் இருக்கும் அனைத்து பிரபலங்களையும் சந்தித்து அவர்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்வது களத்தில் பணியாற்றும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. தெலுங்கானாவில் பூத் கமிட்டிகள் சரியில்லாததால் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது. கூட்டணியைப் பற்றி யோசிக்க வேண்டாம். அதை கட்சி தலைமை முடிவு செய்யும்.
தனித்து நின்றும் சாதிக்கும் அளவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை வலிமைப்படுத்துங்கள். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் தகுதியானவர்களுக்கு திட்ட பலன்கள் கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள். இந்த அடிப்படை பணிகளே நமது வெற்றிக்கும் அடித்தளம் ஆகும் என்றார்.
- ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.
- எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என பொறுப்புகளை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இதற்கும் எடப்பாடி பழனிசாமி சட்ட நடவடிக்கைகள் மூலமாக முட்டுக்கட்டை போட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தாமலேயே உள்ளார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. இது தொடர்பாக தெளிவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.
எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு தலைமைக்கழகம் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தாமல் தலைமைக்கழகம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமோ, அ.தி.மு.க. கலரோ இல்லாமல் கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் ஜனவரி மாதம் 6-ந்தேதி மண்டல மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநாட்டை குறிப்பிட்ட தேதியில் நடத்தலாமா? இல்லை ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு நடத்தலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இந்த மாத இறுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாகவும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட 300 பேர் பங்கேற்க உள்ளனர்.
இதன் பின்னர் வருகிற 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். கீழ்ப்பாக்கம் தேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.
இதன்பிறகு ஓ.பி.எஸ். சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அ.தி.மு.க.வை விட அதிகமாக பேசி வருகிறோம்.
- மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனக்கு நெருக்கமானவர்களிடம் யதார்த்தமான சில உண்மைகளையும் எடுத்து சொல்லி இருக்கிறார்.
அதாவது தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அதிகமாக பேசினோம். ஆனால் அதன் பலனை பலமான கட்டமைப்பு வைத்துள்ள காங்கிரஸ் அறுவடை செய்துவிட்டது. அதேபோல் தி.மு.க.வின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அ.தி.மு.க.வை விட அதிகமாக பேசி வருகிறோம். இங்கும் தி.மு.க.-வுக்கு கட்டமைப்பு பலமாக உள்ளது. எனவே அ.தி.மு.க. அறுவடை செய்துவிட கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.
- கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றத்துக்கான அறிகுறியா என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- ஒவ்வொரு கட்சியும் தங்கள் எதிர் கருத்துகளை சொல்வார்கள்.
வெள்ள நிவாரண பணிகளுக்கு செலவிட்ட ரூ.4 ஆயிரம் கோடி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வெள்ளை அறிக்கை வெளியிடலாம் என்று கூறி இருப்பது தான் பலரது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றத்துக்கான அறிகுறியா என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தி.மு.க.-வி.சி.க. கூட்டணி எவ்வளவு வலுவாக இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த தி.மு.க.வின் அமைப்பு செயலாளார் ஆர்.எஸ். பாரதி, "வெள்ளை அறிக்கை அவசியம் என்றால் வெளியிடுவதில் தவறில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் தங்கள் எதிர் கருத்துகளை சொல்வார்கள். எல்லோரும் ஒரே கட்சி இல்லையே. அவர்களுக்கென தனி கொள்கை இருக்கிறது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலை வி.சி.க.வுடன் இணைந்தே சந்தித்து உள்ளோம். எங்களின் கூட்டணி வலுவாக இருக்கிறது என்றார்.
- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- இவர் திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 1990 முதலே அரசியலுக்கு வரவேண்டுமென சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல் திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார்.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. கடந்த 2017-ல் 'ஆன்மிக அரசியல்' செய்வேன் என பேசியிருந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை என சொல்லி ரஜினி மக்கள் மன்ற அமைப்பை கலைத்தார்.

இந்நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது கணவர் அரசியலுக்கு வராதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "அவர் அரசியலுக்கு வராதது வருத்தம்தான். ஏனெனில், அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் சிறந்த தலைவர். அதனால் அது வருத்தமே. இருந்தாலும் அதற்கான காரணமும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருந்தது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்" என கூறினார்.
- சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
- மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:- 2024-ம் வருடம் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடம் இல்லாத ஆண்டாக புதிய ஆண்டு இருக்க வேண்டும், கொங்கு மண்டலம் ஆன்மீக பூமி, விவசாயம் நிறைந்த பூமி. புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வழிபட்டு இந்த புத்தாண்டினை தொடங்கி உள்ளோம்.
சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. சென்னிமலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.
அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நான் நல்ல வாக்காளர், நல்ல ஆட்சி அமைய பாடு பட வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். நான் அரசியல்வாதி தான். நல்ல ஆட்சி ஆட்சி அமைய வாக்களிப்பேன்.
இதுவரை எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம். அவர்களுக்குள் என்ன மன கசப்பு என தெரியவில்லை.
விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். தவறு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.