என் மலர்
நீங்கள் தேடியது "Pongal"
- கரகாட்டம், காவடி, வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது.
- பொங்கல் விழாவை, நொய்யல் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது
திருப்பூர்:
திருப்பூர் மாநகரின் மையப் பகுதியாக நொய்யல் நதி அமைந்துள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் விழாவை ஊர் மக்கள் கூடி நடத்தும் திருவிழாவாக நொய்யல் ஆற்றின் கரையில் நடத்த, திருப்பூர் நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆலோசனை மற்றும் விழாக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. வருகிற ஜனவரி 14, 15-ந் தேதிகளில், இந்த அமைப்பு சார்பில், பொங்கல் விழாவை, நொய்யல் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதில், தமிழர்களின் கலைகளாக உள்ள பறையாட்டம், வள்ளி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், களரி, சிலம்பாட்டம், திருவண்ணாமலை பெரிய மேளர், தேவராட்டம், கரகாட்டம், காவடி, வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது.
- வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்படுகிறது.
- ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் ஒழுகிய வெல்லம் வழங்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்படுகிறது.
பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை கருத்து தெரிவித்து இருந்தது. ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 கார்டுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தது. இதை பூர்த்தி செய்தால் தான் வங்கிக்கணக்கு மூலம் பணம் போட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இதனால்தான் கூட்டுறவு துறை வெளியிட்ட அறிவிப்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனாலும் இன்னும் அந்தப் பணி முழுமையாக முடிவடையவில்லை.
இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இடம் பெற வாய்ப்பில்லை என தெரிகிறது.
ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசின் சார்பில் இன்னும் வெளியாகவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாளை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
- இதனால் அங்கு கடை வைத்திருக்கும் சுமார் 500 கடைகளின் உரிமையாளர்களும் மாற்று கடைகள் அமைக்க இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை:
பாளை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
தற்காலிக கடைகள்
இதனால் அங்கு கடை வைத்திருக்கும் சுமார் 500 கடைகளின் உரிமையாளர்களும் மாற்று கடைகள் அமைக்க இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி அதன் அருகே உள்ள மைதானம் மற்றும் பழைய போலீஸ் நிலையம் குடியிருப்பில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே அந்த கடைகளுக்கு வியாபாரிகள் இடம்பெயர வேண்டும் என்றும், மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கட்டிடத்திற்கான பணிகளை தொடங்க வேண்டி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிவிப்பால் வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து இன்று காலை வியாபாரிகள் அனைவரும் காந்தி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாலமோன், பொதுச்செயலாளர் பெரியபெருமாள் மற்றும் நிர்வாகிகள் இசக்கி, தர்மர் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகைகள் உள்ளது. இந்த நேரத்தில் கடைகளை மூடிவிட்டு வேறு கடைக்கு செல்லவேண்டும் என்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும்.
எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பொங்கல் வரை ஒத்திவைக்க வேண்டும். அதன்பின்னர் நாங்களாகவே கடையை காலி செய்துவிடுவோம் என்று தெரிவித்தனர்.
- தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.
- கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
சென்னை:
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம. நாராயணன் தலைமையில் இன்று அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் புது அரிசியை புது பானையில் பொங்கலிட புதுப்பானையும், அடுப்பும் ரேசன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசித்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.
மண்பாண்ட தொழிற்பயிற்சி கல்லூரி ஒன்றை உருவாக்க வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதில் சங்க நிர்வாகிகள் பாவலர் கணபதி, மகேஷ் கண்ணன், எஸ்.என்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணாநகர், கபிலக்குறிச்சி, பிலிக்கல் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பொன்மலர் பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், அய்யம்பாளை யம், வடகரையாத்தூர், தண்ணீர் பந்தல், சோழசிராமணி, மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆலைகளில் கரும்புகளை இயந்திரம் மூலம் சாரு பிழிந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை என தயாரிக்கின்றனர்.
தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்கள் உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் இதை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட் டங்கள், பல்வேறு மாநிலங்களுக்கும் அனு ப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,150-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,270-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதி களில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வயலியுறுத்தப்பட்டது.
- மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழக அரசு கடந்த வருடம் போல் இந்த வருடமும் கரும்பை கொள்முதல் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட சில பூச்சி கொல்லி மருந்துகளின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விளைந்து வரும் நெற்பயிரை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணப்பட்டுவாடா விவசாயி களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலூர் பெரியாறு ஒரு போக விவசாயிகள் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பொங்கல் மண்பானைகள், அடுப்புகள் ஆகியவை தயாரிக்கும் பணி குறிச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- மலேசியாவிற்கு அனுப்புவதற்காக 3 லிட்டர், 2.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் மண்பானைகள் தயாரித்துள்ளோம்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் மண் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பானைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வது மட்டுமின்றி மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஜி-20 மாநாடு அடுத்து ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பயன்படுத்துவதற்காக 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ்கள் தயாரிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தயாரிக்கும் பணியினை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்த மண்பாண்ட உற்பத்தி நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அங்கு ஹாட்பாக்ஸ்கள் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.
மேலும் அந்த ஹாட்பாக்ஸ்சில் மேல்புறத்தில் ஜி-20 2023 இந்தியா என்ற முத்திரையும், அதனை சுற்றியவாறு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் உள்ளிட்ட வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
இந்த பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து பணிகள் முடிந்து மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், அடுத்த மாதம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொங்கல் மண்பானைகள், அடுப்புகள் ஆகியவை தயாரிக்கும் பணி குறிச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆயிரக்கணக்கான பானைகள் தயாரிக்கப்பட்டு அதற்கு வர்ணங்கள் பூசும் பணியும் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள முருகன் கூறியதாவது:-
மலேசியாவில் பொங்கல் பண்டிகைக்கு 10 நாளைக்கு முன்னரே பொங்கல் சந்தை என்ற பெயரில் வியாபாரிகள் கூடுவார்கள். அந்த சந்தையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களும் விற்கப்படும்.
இதற்காக நெல்லையில் ஆர்டர் பெற்று பொங்கல் பானை தயாரிக்கிறோம். மலேசியாவிற்கு அனுப்புவதற்காக 3 லிட்டர், 2.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் மண்பானைகள் தயாரித்துள்ளோம். இந்த பானைக்கு வர்ணம் பூசும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் மதுரையை சேர்ந்த கோவில் கோபுரங்களுக்கு பஞ்சவர்ணம் பூசும் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த சில நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து பானைகள் கப்பலில் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு பானையின் விலை ரூ.150 க்கு வழங்குகிறோம். சமீபத்தில் கோவையில் உலக சாதனைக்காக 75 ஆயிரம் மண் ஹாட்பாக்ஸ்கள் தயாரித்து நெல்லையில் இருந்து 17 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் அடுத்து ஆண்டு நடைபெறும் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டின்போது 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ்கள் அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்காக மத்திய அரசும், மாநில அரசும் உதவுகிறது.
இதேபோல் வழக்கமாக விற்பனை செய்வதற்காக மண் அடுப்புகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 3 அடுப்பு கட்டி செட் ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
பெரிய பொங்கல் பானை, அதற்கான மூடி, மண்பானைகளும் தயார் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையின்போது புதுப்பானையில் பொங்கலிடுவார்கள் என்பதால் பெரிய அளவிலான மண்பானைகளுக்கு வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது.
- அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. பணம் வழங்கப்படவில்லை
அப்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரையுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை தெரிவித்த கருத்து முன் வைக்கப்பட்டது.
ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் இன்னும் சில ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
- சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.
ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.
ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது.
- கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சென்னை:
கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை பதிலாளர்கள், கூடுதல் பதிலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. 33571 நியாய விலைக் கடைகளில் அரசு மூலம் வழங்கப்படும் பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கே: பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது அறிவிக்கப்படும்?
ப: அதுபற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது உண்மை. அதுபற்றிய முடிவை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். இந்த அறிவிப்பு வந்ததும் எங்களது துறை செயல் படுத்தும்.
பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது. அப்போது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
2011-க்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பொருட்கள் வழங்கப்பட்டாலும் இடையில் 1 வருடம் தர வில்லை. அதுமட்டுமல்ல இடையில் 4 ஆண்டுக்கு எதுவும் அவர்கள் வழங்கவில்லை.
இப்போது தி.மு.க. ஆட்சியில் நாங்கள் வழங்குகிறோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் அவர் அறிவித்ததும் அதை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
- அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் ரொக்கப் பணத்தை வழங்குகிறார்கள்.
சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டன.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் 2 கோடியே 19 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்றும் இதற்காக அரசுக்கு சுமார் ரூ.2,356 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொது மக்களுக்கு வழங்குகிறார்கள்.
பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நாளை (26-ந்தேதி) முதல் நடைபெறுகிறது.
ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மூலம் ரேஷன் பொருட்களை பெற முடியும்.
அது போல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்டுடன் கைரேகையும் பதிவு செய்ய வேண்டும்.
ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு இந்த முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும்.
பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே 2-ந்தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்குகிறது.
13-ந்தேதி போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இவை வழங்கப்பட வேண்டும் என பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்கு ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வழக்கம் போல டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது.
தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்ய திட்டமிடப்படுகிறது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில் பெற வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்படும்.
பொங்கல் பரிசு தொகை பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக இதனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். அந்த நாளில் கடைகளில் நெரிசல் இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. வருகிற 27, 28-ந்தேதிகளில் வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொங்கலுக்குள் அரசு அறிவித்துள்ள ரூ.1000 ரொக்கம் குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும். கையெழுத்து போட்டு பெற இயலாது. இதில் எவ்வித தவறுக்கும் இடம் அளிக்காமல் முறையாக பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
வெளியூர் சென்று இருந்தாலோ, வீடு பூட்டி இருந்தாலோ அவர்கள் ரொக்கப் பணம் பெற அவகாசம் கொடுக்கப்படும். குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் பணம், பொருட்களை பெற முடியாது.
ரேஷன் கடை பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் பொங்கலுக்கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
திருச்சி:
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணைத் தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையனன், கும்பக்குறிச்சி பழனிச்சாமி, ஏ.ஆர்.பாட்சா மல்லி செல்வம், மிலிட்டரி நடராஜன், முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், பழனிக்குமார், நாகேந்திரன், பூண்டு பாலு மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.