என் மலர்
நீங்கள் தேடியது "praise"
- அரகண்டநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 157 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
- முதல்வர் பரணி மற்றும் நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் பள்ளியின் சக ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 157 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு பயின்ற விஷ்வா 600-க்கு 575 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அஸ்வினி, நிஷாந்தி, கீர்த்தனா ஆகிய 3 பேரும் 600-க்கு 562 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். விநாயகமூர்த்தி 552 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். மாணவர்கள் விஷ்வா, நிஷாந்தி, லோகேஸ்வரி ஆகியோர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், அஸ்வினி இயற்பியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், பரமேஸ்வரி கணிதம், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் எடுத்துள்ள னர்.
மேலும், இங்கு பயின்ற 38 மாணவர்கள் 500 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்துள்ளனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் ராஜகோபாலன், செயலாளர் ராஜாசுப்பிரமணியம், முதல்வர் பரணி மற்றும் நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் பள்ளியின் சக ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த ஆட்டோ டிரைவரின் மகளுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
- மாணவி இலக்கியா 593 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.
மானாமதுரை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநிலஅளவில் 2-வது இடத்தை பெற்றது. இது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவடட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் ஆகியோர் கூறியதாவது:-
தமிழக அளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 278 பள்ளிகளில் 17 ஆயிரத்து 732 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 294 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.53 சதவீத தேர்ச்சி ஆகும்.
2017-2018-ம் ஆண்டு 98.50 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றது. 138 அரசுப் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 58 பள்ளிகளில் 21 பள்ளிகளும், மெட்ரிக் சுயநிதி பள்ளிகளில் 82 பள்ளிகளில் 57பள்ளிகளும், 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மொத்தமுள்ள 278 பள்ளிகளில் 146 பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் ஆட்டோ தொழிலாளி விஜயகுமார்-ஜெகதா தம்பதியரின் மகளான மானாமதுரை அரசு மகளிர் பள்ளி மாணவி இலக்கியா 593 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.
இந்த பள்ளியில் 277 மாணவிகளில் 272 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.53 சதவீத தேர்ச்சி ஆகும். இந்த பள்ளியின் முதல் மாணவி இலக்கியா 8-ம் வகுப்பில் மத்திய அரசின் டேலன்ட் எக்ஸாம் தேர்ச்சி பெற்று மாதம் தோறும் ரூ.1000-ம் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார். மாணவி இலக்கி யாவை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பாராட்டி னார்.
- ஆரோக்கியராஜ் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
- பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.
கடலூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்.இவர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாகவேலை செய்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீ ட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற ராஜாராம் பழைய வழக்குகளை துப்புத் துலக்கி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லாதலைமையில்காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்ட ர்பிரேம்குமார்,பண்ருட்டிடி.எஸ்.பி. தனி படை சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர் இதனை தொடர்ந்து பண்ருட்டி அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்த நடராஜன் மகன் ராஜகுமாரனை (23) அதிரடியாக கைது செய்து அவனிடம் இருந்த நகை பணம் ஆகியவற்றை மீட்டனர். ராஜகுமாரன் பண்ருட்டி நெல்லிக்குப்பம் பகுதியில்பல இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு செல்பவர்கள்வீட்டு சாவியை எங்கு வைத்து விட்டு செல்கிறார்கள் என்பதை நோட்டமிட்டு அந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை- பணம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி மீண்டும் சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு செல்வது தெரியவந்தது. நீண்ட நாட்களாக துப்பு துலங்காமல் இருந்து வந்த கொள்ளை வழக்கில் துப்புத் துலக்கிய பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்
- இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம்.
- பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சீர்காழி:
சீர்காழியில் நடைபெற்ற மரபு சார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் இக்கல்வியாண்டில் மேல்நிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் சீர்காழி தாலுக்காவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம் பெற்றமைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பியை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் ஜே.சேகர், சீர்காழி நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன் , என்.துளசிரங்கன் , ஏ.வரதராஜன் கலந்து கொண்டனர்.
- கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.
- டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. மறைந்தவிஜயகுமார். திரு உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்ட ஒழுங்கு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி , அவர் கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ,விழுப்புரம் டி.ஜி.பி. ஜியாஉல்ஹக், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. பகலவன். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்க் சாய், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் ,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண்உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த டி.ஐ. ஜி விஜயகுமாருக்குஅஞ்சலி செலுத்தினார்கள். விழுப்புரம் சரகம் மற்றும் காஞ்சிபுரம் சரக போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
- மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற சிவகங்கை பெண்கள் அணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
- விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
சிவகங்கை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை மாவட்ட ஹாக்கி பெண்கள் அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பரிசு வென்றது. இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள பள்ளியில் இந்த அணியின் 18 மாணவிகளுக்கும் மற்றும் முரளி, கருணாகரன், மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் சங்கரன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர் தியாக பூமி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், கேப்டன் சரவணன், பகீரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா, நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் அழகுமீனாள் தேவதாஸ், சின்னையா அம்பலம், சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவஹர் கிருஷ்ணன், செயலாளர் ராமச்சந்திரன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சுந்தர மாணிக்கம், செயலாளர் யுவராஜா, சிவகங்கைச் சீமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கலைக்கண்ணன், சிவகங்கை அரிமா சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை சுப்ரீம் அரிமா சங்க முன்னாள் தலைவர் முருகன், வெங்கடேஸ்வரா ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
- புத்தக அரங்கு 101, 102-ல் ஈரோடு போலீசார் அத்துமீறி நுழைந்து புத்தகங்களை விற்ககூடாது என்று மிரட்டி உள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன் எழுதிய "இந்துத்துவப் பாசிசம் வேர்களும்-விழுதுகளும்" என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருக்கிறது. புத்தக அரங்கு 101, 102-ல் ஈரோடு போலீசார் அத்துமீறி நுழைந்து புத்தகங்களை விற்ககூடாது என்று மிரட்டி உள்ளனர்.
இந்தத் தகவல் தமிழக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்துத்துவ சனாதன சக்திகள் மீது நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதல்-அமைச்சருக்கு, திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- இதனை தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வரவேற்ற–னர்.
திருமங்கலம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணைமேயர், தலைவர், துணைத்தலைவர், கவுன்சி–லர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு திரு–மங்கலம் நகராட்சி கூட்டத் தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர் ரம்யா முத்துக் குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப் புகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சி–லர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவிப்ப–தாக தெரிவித்தார். இதனை தி.மு.க. உள் ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வரவேற்ற–னர். திருமங்கலம் நகராட்சி–யில் ரூ.204 லட்சம் மதிப்பீட் டில் 2.902 கி.மீ. நீளமுள்ள 25 மண்சாலையை தார் சாலையாக மாற்றுவது, நகராட்சியின் 27 வார்டுக–ளிலும் உள்ள 2076 தெரு–விளக்குகளை எல்இடி தெருவிளக்குகளாக மாற்றி அமைப்பது, குடிநீர் பிரச்சி–னைக்கு மினி போர்வெல் களை சரிசெய்வது உள் ளிட்ட பல்வேறு தீர்மா–னங் கள் நிறைவேற்றப்பட்டன.
- ஓம் பயம் போக்குபவரே போற்றி ஓம் குதிரை வாகனரே போற்றி
- ஓம் யோகினி தேவதையே போற்றி ஓம் கல்லாபினி தேவியே போற்றி
ஓம் அன்பு வடிவே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இனியதைச் செய்வாய் போற்றி
ஓம் பயம் போக்குபவரே போற்றி
ஓம் குதிரை வாகனரே போற்றி
ஓம் பொன்கோட்டை வசிப்போய் போற்றி
ஓம் மீன்கொடி மன்னவா போற்றி
ஓம் பெரும் செல்வ மகனே போற்றி
ஓம் மகர ஆலயத் தெய்வமே போற்றி
ஓம் பாக்யேஸ்வரி பதியே போற்றி
ஓம் ஆனந்தவல்லி மாக்பரே போற்றி
ஓம் உல்லாசினி யே போற்றி
ஓம் நிராகுலியே போற்றி
ஓம் யோகினி தேவதையே போற்றி
ஓம் கல்லாபினி தேவியே போற்றி
ஓம் இதேஸ்வரி தேவியே போற்றி
ஓம் விநோதினி சக்தியே போற்றி
ஓம் சட்குல தேவியரே போற்றி
ஓம் அட்ட பைரவரே போற்றி
ஓம் அசிதாங்க பைரவரே போற்றி
ஓம் குரு பைரவரே போற்றி
ஓம் சண்ட பைரவரே போற்றி
ஓம் குரோத பைரவரே போற்றி
ஓம் உன் மத்த பைரவரே போற்றி
ஓம் கபால பைரவரே போற்றி
ஓம் பீஷண பைரவரே போற்றி
ஓம் சம்மார பைரவரே போற்றி
ஓம் அதிஷ்டம் தரும் பைரவரே போற்றி
ஓம் சௌபாக்ய பைரவரே போற்றி
ஓம் ஐஸ்வர்யம் தரும் பைரவரே போற்றி
ஓம் பொன்மணி தனம் அருள்வாய் போற்றி
ஓம் யோகங்களைக் கொடுக்கும் யோக
பைரவ தேவனே போற்றி! போற்றி!
- நரிக்குடியில் ஆசிரியை ரோட்டில் தவற விட்ட 2½ பவுன் நகையை மீட்டுக்கொடுத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- தமிழாசிரியை சசிகலா, தலைமையாசிரியர் சோனை முத்து ஆகியோர் பாராட்டினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் கமுதி அருகேயுள்ள மறைக் குளம் கிராமத்தை சேர்ந்த வர். இந்த நிலையில் நேற்று காலை சசிகலா பள்ளிக்கு செல்வதற்காக நரிக்குடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது தனது கைப்பையில் உள்ள அவரது நகைகளை சரிபார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் உலக்குடி பேருந்து வரவே அவசர அவசரமாக சசிகலா பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டார். அங்கு சென்று தனது கைப்பயை பார்த்தபோது அதில் இருந்த 2½ பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக நரிக்குடி பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் தனது செயின் கிடைக்காததால் நகை காணாமல் போனது குறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த நிலையில் நரிக்குடி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப் பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் நேற்று காலை பள்ளிக்கு செல்ல நரிக்குடி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கீழே கிடந்த 2½ பவுன் தங்கச் செயினை எடுத்து அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை யாசிரியர் சோணை முத்துவிடம் விவரத்தை கூறி நகைையை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அவர் நரிக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ேபாலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியபோது ஆசிரியை சசிகலா பஸ் நிலையத்தில் தவற விட்ட 2½ பவுன் நகையை மாணவிகள் மீட்டு கொடுத்தது தெரியவந்தது.
நகை கிடைத்தது குறித்து ஆசிரியை சசிகலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் தகுந்த அடையாளங்களை கூறி நகையை பெற்றுக் கொண்டார்.
தொலைந்து போன தங்கசெயின் கிடைக்க காரணமாக இருந்த இளம்வயது மாணவிகளின் நேர்மையான செயலை கண்டு நரிக்குடி காவல் துறையினர் மற்றும் தமிழாசிரியை சசிகலா, தலைமையாசிரியர் சோனை முத்து ஆகியோர் பாராட்டி னர்.
- கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.
- 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மானம்புச்சாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகள் செய்து வரும் 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் முதல் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக இயங்கி வரும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் வழியாக கண்காணி க்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்களுக்கு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றிய விவரங்கள் மீண்டும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இந்த தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகளை பாராட்டினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) திலகம், துணை இயக்குநர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர். மாநகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாய்சேய் நல கண்காணிப்பு மைய செயல்பாடுகளை விளக்கி கூறினார்.
முன்னதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, கல்லுக்கு ளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
- பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து க்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் வரவேற்றார். நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலா ளரும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் இஸ்ரோ திட்ட இயக்கு னராக செயலாற்றி இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டி ற்கும் பெருமை சேர்த்த நமது விழுப்புரம் மாவட்டம் வீரமுத்து வேலுக்கு பாராட்டு களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தும், உலக செஸ் விளையாட்டு போட்டியில் 2-வது இடத்தில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் வயது வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து க்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செந்தமி ழ்ச்செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், மாநில தீர்மானகுழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, மணிமாறன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செஞ்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.