என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pray"
- போதிய மழை இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.
- மழை வேண்டி ஒப்பாரி பாட்டு பாடி, கும்மியடித்து அனைத்து பழைய பொருட்களையும் ஊர் எல்லையில் கொண்டு சென்று வீசினர்
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் போதிய மழை இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் மழை வேண்டி வருண பகவானை கும்பிட்டு மழை சோறு எடுக்க முடிவு செய்தனர். இதன்படிகிராம மக்கள் வீடு, வீடாக சோறு யாசகம் பெற்று, ஊர் கோவில் முன்பு வைத்து பெண்கள் பொங்கல் வைத்துஅம்மனுக்கு படையலிட்டனர்.
பின்னர் அம்மனுக்கு படையலிடப்பட்ட பழைய சோறை ஊர்மக்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பழைய பொருட்கள்,பழைய அம்மிக்கல்,உரல் ஆகியவற்றை கோவில் முன்பு வைத்து மழை வேண்டி ஒப்பாரி பாட்டு பாடி, கும்மியடித்து அனைத்து பழைய பொருட்களையும் ஊர் எல்லையில் கொண்டு சென்று வீசினர்.
கிராம மக்களின் இந்த நூதன வழிபாட்டை இன்றைய இளைய தலைமுறையினர் ஆச்சரியத்துடன் அதிசயமாக பார்த்து ரசித்தனர்.
- நிலவில் தரையிறங்க உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
- ஏற்பாடு–களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கள் செய்திருந்தனர்.
உசிலம்பட்டி
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் அனுப்பப்பட்டது. இதன் அடுத்தடுத்த நகர்வு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு பெரும் புகழை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது உலகமே உற்றுநோக்கி காத் திருக்கும் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண் டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.
இந்த திட்டத்தின் வெற்றியை இந்தியாவின் அனைத்து மக்களும் பெருமையாக கருதும் நிலையில் இந்த திட்டம் வெற்றியடைய அனைவரும் பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம் பட்டி தனியார் தொடக்கப் பள்ளியில் அப்துல் கலாம் கண்ட கன–வான சந்திரயான் திட்டம் இன்று வெற்றியடைய உள் ளதை நினைவு கூறும் விதமாக அப்துல் கலாம் வேடமணிந்த மாணவன் பேசினான்.
அப்போது அவன், என் னுடைய கனவு திட்டம் இன்று நிறைவேற உள்ளது, மாணவர்களும் கனவு காணுங்கள், எனது சந்திராயன் திட்டம் வெற்றியடைய நானும் பிராத்திக்கிறேன், மாணவ-மாணவிகளான நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொள்ள பள்ளியில் பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கள் செய்தி–ருந்தனர்.
- மணிப்பூரில், அமைதி நிலவ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
- கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி அமைதி பேரணி நடைபெற்றது. பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்ற பேரணியானது புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் மணிப்பூரில் பொது அமைதி நிலவிட வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மற்றும் திருப்பலி நடை பெற்றது.
பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைகளில் மெழுகு வர்திரி ஏந்தி அமைதியாக பேரணியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை எழுந்தருளி தேர்பவனி.
- பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
கும்பகோணம்,:
திருப்பனந்தாள் ஒன்றியம், மானம்பாடியில் உள்ள புனித லூர்து அன்னை திருத்தலத்தில் ஆண்டுதோறும், தேர்பவனி, கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா கடந்த 9-ந்தேதி மறைமாவட்ட உதவி பங்கு தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து அருட்தந்தையர்களால் ஜெபமாலை, நவநாள் ஜெபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னதாக திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியான் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.
இனைததொடர்ந்து நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை எழுந்தருளி தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.
தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த நிகழ்வில் ஏராளமானோர் கிறிஸ்த வர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமை ஆரோக்கியசாமி யாக்கோப் தலைவர் இஸ்ரேல் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- குடிமனை பட்டா வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
- 300 பேர் வீட்டு மனை பட்டா வேண்டி ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு டவுன் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிமனை பட்டா வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் கட்சியினர் மற்றும் ஏற்காடு முருகன் நகர், ஜெரினக்காடு, பட்டிபாடி, கீரைக்காடு, கொட்டச்சேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300 பேர் வீட்டு மனை பட்டா வேண்டி ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு டவுன் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கிராம மக்கள் குடிமனை பட்டா வேண்டி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார், பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்