search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை வேண்டி மக்கள் நூதன வழிபாடு
    X

      மழை வேண்டி பொங்கல் வைத்த போது எடுத்த படம்.

    மழை வேண்டி மக்கள் நூதன வழிபாடு

    • போதிய மழை இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.
    • மழை வேண்டி ஒப்பாரி பாட்டு பாடி, கும்மியடித்து அனைத்து பழைய பொருட்களையும் ஊர் எல்லையில் கொண்டு சென்று வீசினர்

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் போதிய மழை இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் மழை வேண்டி வருண பகவானை கும்பிட்டு மழை சோறு எடுக்க முடிவு செய்தனர். இதன்படிகிராம மக்கள் வீடு, வீடாக சோறு யாசகம் பெற்று, ஊர் கோவில் முன்பு வைத்து பெண்கள் பொங்கல் வைத்துஅம்மனுக்கு படையலிட்டனர்.

    பின்னர் அம்மனுக்கு படையலிடப்பட்ட பழைய சோறை ஊர்மக்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பழைய பொருட்கள்,பழைய அம்மிக்கல்,உரல் ஆகியவற்றை கோவில் முன்பு வைத்து மழை வேண்டி ஒப்பாரி பாட்டு பாடி, கும்மியடித்து அனைத்து பழைய பொருட்களையும் ஊர் எல்லையில் கொண்டு சென்று வீசினர்.

    கிராம மக்களின் இந்த நூதன வழிபாட்டை இன்றைய இளைய தலைமுறையினர் ஆச்சரியத்துடன் அதிசயமாக பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×