search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president election"

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
    • குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

    இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சிலை இன்று அகற்றப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த சிலையை வைத்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. 

    • ஜனநாயகக் கட்சியின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
    • இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ-ப்ரீஸ்ட் டிரைவ் அருகே உள்ள கமலா ஹாரிசின் பிரச்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் மீது நள்ளிரவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்.
    • 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கடந்த 10-ம் தேதி இரு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருவரும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை முடிவு செய்ய அவ்வப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

    ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்தார்.

    இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் டிரம்பைவிட 38 புள்ளிகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    ஆசிய அமெரிக்க வாக்காளர்களிடையே டிரம்பை விட கமலா ஹாரிஸ் 38 சதவீத புள்ளிகளால் முன்னிலை வகிக்கிறார்.

    ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர். 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். வேறொரு வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் அல்லது முடிவு செய்யப்படாதவர்கள் 6 சதவீதம்.

    ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட 2024 ஆசிய அமெரிக்க வாக்காளர் கணக்கெடுப்பில், ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 46 சதவீதம் பேர் ஜோ பைடனை ஆதரித்தனர். 31 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர். அதே நேரத்தில் 23 சதவீதம் பேர் வேறு ஒருவருக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளோம் அல்லது முடிவு செய்யவில்லை என கூறினர்.

    அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து வெளியேறி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆன பிறகு நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பு இதுவாகும்.

    • குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
    • அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், 2024-ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028-ல் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவேன் என நினைக்கவில்லை என தெரிவித்தார்.

    • வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
    • இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி முன்னிலை வகிக்கிறது.

    கொழும்பு:

    இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மனிக்கு நிறைவடைந்தது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், கொழும்பு பாடசாலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார். அவர் 60.83 சதவீத வாக்கு பெற்று முன்னிலை வகிக்கிறார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 21.06 சதவீத வாக்கு பெற்றுள்ளார்.

    புதிய அதிபர் யார் என நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

    தேர்தலுக்கு பிந்தைய வன்முறையைத் தடுக்கும் விதமாக இலங்கையில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட இலியாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • முகமது இலியாசுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் அடுத்த மாதம் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார். இதில் 39 பேர் வேட்புமனு தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே, சுயேட்சை வேட்பாளராக புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த இட்ராஸ் முகமது இலியாஸ் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள முகமது இலியாசுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    அவரை உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே இலியாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலியாஸ் 1990-ல் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஜாப்னா தொகுதியில் வென்று எம்.பி.யாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
    • கடந்த 30 ஆண்டில் முதல்முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வென்றது.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

    கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தல் வாக்கெடுப்பில் சிறில் ரமபோசா 283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளைப் பெற்றார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    • அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    ஜகார்த்தா:

    உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று அதிபர் தேர்தல் நடந்தது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

    தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

    கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு மந்திரி பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இவர் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்றவர் ஆவார். துணை அதிபர் பதவிக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று மாலை ஓட்டுப் பதிவு முடிந்ததும் அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன.

    • ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் 2036-ம் ஆண்டு வரை அதிபராகத் தொடர முடியும்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை பாராளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையில் ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின், அவரது முடிவை ராணுவ அதிகாரியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
    • காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை 24-ந்தேதி) முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. போட்டி ஏற்பட்டு ஓட்டுப்பதிவு நடக்கும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்னும் சில தினங்களில் பா.ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதில் அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த பா.ஜனதா தலைவர் நட்டா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி பணியில் அமர்த்தி உள்ளார்.

    அவர்கள் இருவரும் பா.ஜனதாவின் தோழமை கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதுபோல சில எதிர்க்கட்சி தலைவர்களிடமும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். என்றாலும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகன் பொது வேட்பாளராக களம் இறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் சரத் பவாரை சந்தித்து பேசினார். பிறகு மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    சரத்பவார் அனைத்து கட்சிகளுடன் நல்ல அணுகுமுறையில் இருப்பதால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று சோனியா விரும்புகிறார். எனவே ஜனாதிபதி தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்பட்டதும் அவர் முதன் முதலில் சரத் பவாருடன் போனில் பேசினார். அதுபோல இடதுசாரி கட்சி தலைவர்களும் சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சரத்பவாரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவு செய்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்ற எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    குறிப்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

    இதற்காகவே அவர் நாளை (புதன்கிழமை) டெல்லியில் 22 எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது.

    குறிப்பாக சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் பா.ஜனதா தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி விரும்புகிறார். ஆனால் அவரது திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை.

    பா.ஜனதாவில் இருந்து வந்த ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று காங்கிரஸ், இடதுசாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டன. எனவே நாளை மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் தி.மு.க., ஆம்ஆத்மி, போன்ற கட்சிகளும் பங்கேற்காது என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தயக்கத்தை வெளியிட்டுள்ளார். நேற்று அவர் தனது கட்சி மூத்த தலைவர்களுடன் பேசுகையில், 'பொது வேட்பாளராக போட்டியிட எனக்கு விருப்பமில்லை' என்று கூறியுள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் நான் இல்லை என்றும் அவர் தெளிவுபட கூறி உள்ளார். 81 வயதாகும் சரத் பவார் தனக்கு பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தச்செயலாம் என்று கூறி வருகிறார்.

    குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சரத்பவார் விரும்புகிறார். தனது விருப்பத்தை அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றி ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று உறுதியாக தெரிகிறது.

    காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா உள்பட பல கட்சிகள் சரத்பவாரையே ஆதரிக்கின்றன. எனவே அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்படுவாரா என்பது நாளை தெரிந்து விடும்.

    சரத் பவாருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மம்தா பானர்ஜி, சந்திர சேகர ராவ், நவீன் பட்நாயக் போன்ற தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பவாரை முன் நிறுத்தினால் மட்டுமே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓர் அணியில் ஒன்று திரட்ட முடியும் என்று சோனியா கருதுகிறார். எனவே நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
    • காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    பா.ஜனதா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் விவரம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முதலில் இதற்கான முயற்சியை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    அவர் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்து உருவாக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ராகுல்காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்.

    இதனால் காங்கிரஸ் அல்லாத ஒருவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். 22 கட்சிகளுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். முதலில் அவரது முயற்சிக்கு காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஆனால் மம்தா மேற்கொண்ட திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் இன்று பிற்பகல் டெல்லியில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள பொது வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை களம் இறக்க முதலில் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டார். அவரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சமரசம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே மம்தா பானர்ஜி புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். பா.ஜ.க.வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். ஆனால் அதை காங்கிரஸ், இடது சாரிகட்சிகளின் தலைவர்கள் திட்டவட்டமாக ஏற்க மறுத்து விட்டனர்.

    இதற்கிடையே மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். அவர் யோசித்து பதில் சொல்வதாக கூறி உள்ளார்.

    இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார்.

    ஆனால் பரூக் அப்துல்லாவும் பொது வேட்பாளராக களம் இறங்க தயங்குகிறார். இதுபற்றி எல்லாம் எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோரில் 2 பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. 2-ம் நிலை தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனா சார்பில் சுபாஸ்தேசாய், ராஷ்டீரிய லோக்தளம் சார்பில் ஜெயம்சவுத்ரி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகாபூபா ஆகியோர் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல்-மந்திரியுமான ஹேமந்த்சோரனும் கலந்து கொள்ள உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நிலைப்பாடு தெரியவில்லை.

    ஆனால் மம்தா ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. அதுபோல ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா கூட்டத்தை புறக்கணித்துள்ளது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரும், பொது வேட்பாளருக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி உள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கு இறுதி வடிவம் கிடைக்காத நிலை இப்போதே உருவாகி உள்ளது.

    பா.ஜ.க. நிறுத்தும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை பிஜு ஜனதா தளம் அல்லது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி ஆதரித்தால் கூட போதும், பா.ஜ.க. வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் சரத் பவாரை ஆதரித்தன.
    • கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டிஆர்எஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

    புதுடெல்லி:

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினார். பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். இக்கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

    இக்கூட்டத்தில் பொது வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்தலாம் என மம்தா தெரிவித்தார். ஆனால் அவரது யோசனையை சரத் பவார் ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

    அதன்பின்னர் மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா ஆகியோரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் சரத் பவாரை ஆதரித்தன. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட தயங்குகிறார். "சரத் பவார் ஒப்புக்கொண்டால், அனைவரும் அவருக்கு ஆதரவளிப்பார்கள். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை, இது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்" என மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

    இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான வரைவுத் தீர்மானத்தை மம்தா பானர்ஜி சமர்ப்பித்ததாகவும், ஆனால் இதற்கு மற்ற கட்சிகள் உடன்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விவாதிக்க கூட்டம் கூட்டப்பட்டதாக பலர் கூறியுள்ளனர்.

    ×