search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prices fall"

    • வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக குறைந்துள்ளது.
    • ஒருகிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பழனி:

    பழனியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளையும் தக்காளிகளை பழனி தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினசரி டன் கணக்கில் தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதம் வரத்து குறைவால் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனையானது. கடந்த வாரம் சற்று விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விலை கடுமையாக சரிந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை கேட்கப்படுகிறது.

    மொத்த விற்பனையில் ஒருகிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரையே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பறிப்பு செலவுக்குகூட பணம் கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    விலை கிடைக்காத விரக்தியில் தக்காளிகளை குப்பையில் வீசி செல்கின்றனர். அந்த தக்காளிகள் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இரையாகி வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பழனியை சுற்றியுள்ள நெய்க்காரப்பட்டி, அய்யம்பா ளையம், வாடிப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தக்காளி விளைச்சல் உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து விலை கடுமையாக குறைந்துள்ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றனர். 

    • வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.
    • இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 200- க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் கறிக்கோழி தேவை குறைந்து வருவதால் அதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.

    10 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114 ரூபாயாக இருந்த நிலையில் படிப்படியாக சரிந்து 5 நாட்களுக்கு முன்பு 106 ரூபாயாக குறைந்தது.

    இந்த நிலையில் பல்லடத்தில் இன்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையை மேலும் கிலோவுக்கு 9 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 97 ரூபாயாக குறைந்தது.

    இனிவரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையானது.
    • தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது.

    சேலம்:

    சேலம் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வரை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்க ளுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையா னது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளி வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்க ளில் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் தக்காளியை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.
    • மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

    கோத்தகிரி சுற்றியுள்ள கூக்கல்தெரை, கக்குச்சி ,கூக்கல், கட்டப்பெட்டு, பில்லிக்கம்பை , தீனட்டி, மானியடா, நெடுகுளா போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது பண்படுத்தி மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர், முள்ளங்கி, நூல் கோல், பீன்ஸ், பூண்டு, பட்டாணி, அவரை போன்ற மலை காய்கறிகளை விளைவித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

    மேலும் ஒரு சில விவசாயிகள் வெளிநாட்டு காய்கறிகளை சாகுபடி செய்து வருமானம் பெற்று வருகின்றனர். தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பீட்ரூட் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். பீட்ரூட் விளைந்து அறுவடைக்கு தயாரானதை அடுத்து விவசாயிகள் அதனை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் பீட்ரூட்டுக்கான ெகாள்முதல் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பீட்ரூட் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.இதனால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சிறுகிழங்கு பயிரிட்டு இருந்தனர்.
    • பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தினமும் அதிக அளவில் சிறு கிழங்கு வரத்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சிறுகிழங்கு பயிரிட்டு இருந்தனர். தற்போது பொங்கல் பண்டிகை தொடங்கியதில் இருந்து சிறு கிழங்கு அறுவடை பணிகளை தொடங்கி இருந்தனர்.

    பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தினமும் அதிக அளவில் சிறு கிழங்கு வரத்து காணப்படுகிறது.

    சாதாரண கிழங்குகள் ரூ. 10 முதல் 12 வரையிலும் தரத்தில் இருக்கும் கிழங்குகள் கிலோ ஒன்றிற்கு ரூ. 20 முதல் 23 வரையிலுமே விற்பனை யானதால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 மடங்காக அதிகரித்து உள்ளது, அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது பருவநிலை மாற்றம் வெண்டைக்காய் விளைச்சலுக்கு சாதகமாக இருப்பதால் வெண்டைக்காய் விளைச்சல் 2 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதங்களில் வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய், தற்போது கிலோ ரூ.7 ஆக குறைந்து உள்ளது. விலை சரிவால் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பாத்தி கூறுகையில், கடந்த பல வருடங்களாக எங்களது விவசாய தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறோம். ஒரு கிலோ வெண்டைக்காய் விதை ரூ.7 ஆயிரத்திற்கு வாங்குகிறோம்.

    50 சென்ட் இடத்திற்கு இந்த விதை போதுமானது. 4 மாதத்தில் காய் காய்க்கும். 4 மாதம் மட்டுமே இதை அறுவடை செய்ய முடியும். பிறகு செடி வாடி விடும்.

    ஒரு கிலோ விதை வாங்கி சாகுபடி செய்ய மற்றும் மருந்து, உரம் என ரூ.30,000 வரை செலவாகிறது. ஆனால் இந்த வருடம் போட்ட முதலீடு எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தினசரி காய் பறிக்க ஒரு ஆளுக்கு ரூ.300 வரை கூலி கொடுக்க வேண்டி உள்ளது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். ஆனால் வியாபாரிகள் வாங்கி கிலோ ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். வெண்டைகாய் பயிரிட்ட விவசாயிகளை காக்க அரசு நல்ல தீர்வு காண வேண்டும் என கூறினர்.

    ×