search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Procurement"

    • அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
    • வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், திருக்கருகாவூர், இடையிருப்பு ஊராட்சியில் இடையிருப்பு ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதுப்பிக்கும் பணி, ஜல்ஜுவன் திட்டப்பணிகள், சிறு பாலம் கட்டுமானப்பணி மற்றும் சாலைப்பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை யிட்டு பணிகள் தரமாக செய்யப்படுகிறது என தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது இடையி ருப்பு அரசு நெல் கொள்முதல்நி லையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தரவும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த ஆய்வின் போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்,அமானுல்லா இடையிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா கார்த்திகேயன், மற்றும் ஊராட்சி செயலாளர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203 ஆக அறிவித்துள்ளது.
    • விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 2023-24 காரீப் சந்தை பருவத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையை யொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2023-24-ம் காரீப் சந்தை பருவத்துக்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டு ள்ளது.

    சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 183 என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி ஊக்கத் தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டா லுக்கு ரூ.107, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 82 அறிவித்துள்ளது.

    இதன் மூலம், மொத்தம் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 310, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 265 கொள்முதல் தொகையாக (ஊக்கத்தொகை உட்பட) வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரி வித்துள்ளார். 

    • இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • அறுவடை பணிகள் நடைபெறும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், சேமங்கலம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    பின்னர் செய்தியாள ர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஏற்கனவே 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வந்தன. மேலும் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

    அதில், மயிலாடுதுறை வட்டத்திற்கு இளந்தோப்பு, திருவாளபுத்தூர், கிழாய், கொற்கை, கோடங்குடி, திருச்சிற்றம்பலம், ஆத்துக்குடி, முருகமங்களம், தாழஞ்சேரி, திருவிழந்தூர், சித்தமல்லி, 24 வில்லியநல்லூர், குத்தாலம் வட்டத்திற்கு பழையகூடலூர், மேலையூர், குத்தாலம், நச்சினார்குடி, கங்காதாரபுரம், கொக்கூர்.

    வழுவூர், எழுமகலூர், ஆலங்குடி, 52 வில்லியநல்லூர், பேராவூர், சீர்காழி வட்டத்திற்கு கொண்டத்தூர், அரசூர், பனங்காட்டாங்குடி, உள்ளிட்ட கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.59 இலட்சத்து 79 ஆயிரத்து 420 பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 57 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், மாவட்டத்தில்; எங்கெல்லாம் அறுவடைக்கு தயாராகி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறதோ அந்த இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    அவினாசி:

    அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறுமுகை, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பட்டு சேலை வியாபாரிகள் ஆர்டர் வழங்குவர்.தங்கள் தேவையின் அளவு பொருத்து, பாவு நூல் வழங்கி சேலையை நெய்து வாங்கிக் கொள்வர். அதற்கான கூலியை, நெசவாளர்களுக்கு வழங்குவர். சமீப காலமாக ஆர்டர் இல்லாததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்பமே நெசவு தொழிலில் ஈடுபட்டால் தான் ஒன்றரை நாளில் ஒரு சேலையை நெய்து முடிக்க முடியும். வாரத்துக்கு 3,4 சேலைகள் ஆர்டர் கிடைக்கும். ஒரு சேலைக்கு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. தற்போது வாரத்துக்கு ஒரு சேலை மட்டுமே ஆர்டர் கிடைக்கிறது. வருமான பற்றாக்குறையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். ஆர்டர் வழங்கும் வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் இல்லை என்ற காரணத்தை கூறுகின்றனர்.எனவே அரசின் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை அங்காடிகளுக்கு தேவையான சேலையை, எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

    தத்தனூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:-

    சாவக்கட்டுப்பாளையத்தில் நெசவாளர்களை உள்ளடக்கி 4 கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. நிர்வாக குளறுபடியால் அவை செயல்படாமல் போயின. தற்போது நெசவாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 100 நெசவாளர்களை உள்ளடக்கி புதிதாக கூட்டுறவு சங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிர்வாக அனுமதிக்காக காத்துள்ளோம். கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேலை நெய்வதற்குரிய பாவு, நூல் உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.
    • ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏராளமான தென்னை சாகு படி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிருக்கு மாற்றாக கரும்பு தோட்டங்கள் உள்ள இடங்களில் தென்னை மரங் கள் நடவு செய்யப்பட்டுள் ளது.

    இந்நிலையில் தேங்காய் விலை படு பாதாளத்தை நோக்கி சென்றுவிட்ட நிலை யில் தென்னை விவசாயிகள் மாற்று வழி தெரியாத நிலை யில் கவலையில் உள்ளனர். தேங்காய்க்கு விலை நிர்ண யம் செய்ய இயலாத நிலை யில் தமிழக அரசு அறிவித் துள்ள கொப்பரை தேங்காய் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 108.60 வீதம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தென்னை விவசாயிகளி டம் ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய் யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப் பட்டு வருகிறது. இது வெளி மார்க்கெட் ரேட்டை விட மிகவும் அதிகமாகும். என வே ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை விவசாயி கள் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்க மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக அரசு ராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 300 மெட்ரிக் டன் கொள்முதல் என்று இருந்த தை தற்போது 200 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித் துள்ளது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 மெட்ரிக் டன் வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இருக் கும் நிலையில் 200 ஆக குறைத்து இருப்பது தென்னை விவசாயம் இடை யே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு பரிசீலனை செய்து ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் தென்னை விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • மோட்டார் பம்புசெட் உள்ள பகுதிகளில் இந்த சாகுபடி நடைபெற்றது.
    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேலும் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. மோட்டார் பம்புசெட் உள்ள பகுதிகளில் இந்த சாகுபடி நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கோடை நெல் சாகுபடி 70 ஆயிரம் ஏக்கர் வரை நடைபெற்றது. இதில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக தஞ்சை, ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது அறுவடை பணிகள் எந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

    மேலும் தஞ்சாவூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

    இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

    இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

    இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

    மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும்.
    • அரிசி, கோதுமை போன்றவற்றிற்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசத்தில் வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.

    சங்க செயலாளார் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசி வணிகர் சங்க பொதுக்குழு தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    கூட்டத்தில், சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும், அத்தியாவசிய பொருள்களான அரிசி, கோதுமை, ரவா, தயிர் போன்றவற்றிற்கு விதிக்கப்ப டும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.

    பாபநாசம் ரெயில் நிலைய த்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விரைவு ரெயில்களையும் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் செயற்குழு உறுப்பினர் அசோகன் நன்றி கூறினார்.

    • 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
    • 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 15,900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் விளைவித்த அரவை கொப்பரை, பந்து கொப்பரை ஆகியவற்றை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்பட உள்ளன. இந்த மையங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு அரவை கொப்பரை ரூ.108.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.117.50 வீதம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை விற்பனைக்குழு அலுவலகத்தை 0421 2213304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 10 கிலோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்று கொள்முதல் செய்தது.
    • வாகன செலவு, ஏற்று இறக்கு கூலிகள், நேர விரயம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுவதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் வெல்லம் கொள்முதல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதன்படி பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தாட்சாயணி தலைமையிலும், வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன் முன்னிலையிலும் மாகாளிபுரம் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று 7.5 குவின்டால் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.28,750 ஆகும்.

    இதில் 10 கிலோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்று கொள்முதல் செய்தது.

    விவசாயிகளின் இடத்துக்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டு பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதால் வாகனச் செலவு ஏற்று இறக்கு கூலிகள் நேர விரயம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுவதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது.

    திருவாரூர்:

    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது அவர் கூறியதாவது,

    சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, விமான நிலையத்திலிருந்து அங்குள்ள பேருந்தில் எளிமையான முறையில் பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமியை, ஒருவர் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்புகிறார்.

    கோஷம் போடுகிறார்.

    இதனால், எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது.

    உடனடியாக இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது.

    நெல் மூட்டைகள் மட்டுமல்ல அரசின் அனைத்து திட்டமும் தேங்கி கிடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவராஜாமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற அணி நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், பாலாஜி, கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வம், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தென்னை சாகுபடி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்யலாம்.
    • மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவைக் கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 860 என்ற குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விலை ஆதார திட்டத்தின் கீழ் வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு உத்தர விட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுப்பு செய்தமைக்கான அசல் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நக லுடன் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இப்பொதே பதிவு செய்யலாம்.

    பதிவு செய்த விவசாயி களிடம் இருந்து மட்டுமே அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ள அரவைக் கொப்ப ரையில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு குறைவா கவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதத்திற்கு குறைவாகவும் சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சில்லுகள் 10 சதவீ தத்திற்கு குறைவாகவும், ஈரப்பதமானது 6 சதவீ தத்திற்கு குறைவா கவும்இருக்க வேண்டும்.

    ஆய்வகத் தரப்பரி சோதனை செய்து மேற்கண்ட நியாயமான சராசரி தரத்தின்படி உள்ள அரவைக் கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட அரவைக் கொப்பரைக்கான தொகை விவசாயியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கொள்முதல் பணியை செய்ய அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளதால், வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதி விவசாயிகள் விரைவாக செயல்பட்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட பொருள் தொடர்பாக வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் 87789 81501 என்ற எண்ணிலும், மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விவசாயிகள் தங்களது வட்டார விற்ப னைத்துறை உதவி வேளாண் அலுவலர்களிடமும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவ லத்திலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×