search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Programs"

    • புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரியை அறக்கட்டளை நிர்வாகமே செலுத்தும்.
    • விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு படிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர் ஒத்துழைக்க வேண்டியும் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் விளத்தூர் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களை கவுரவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.

    பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவிகளில் ஒருவரை குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அவருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த நாணயத்தை 2-ம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ என்ற மாணவி தட்டிச்சென்றார்.

    மேலும், வருகிற (2024-25) கல்வியாண்டில் விளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி கட்டணங்களை ஜோதி அறக்கட்டளை நிர்வாகமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்திவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்வில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன்,

    விளத்தூர் நடுநிலைப்பள்ளி முதல்வர் தையல் நாயகி தலைமையிலான பள்ளி ஆசிரியர்கள், விளத்தூர் ஊராட்சி தலைவர் ஜனனி, களத்தூர் ஊராட்சி தலைவர் பிரபு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா?
    • முன்னதாக எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா ஆறாவது நாள் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர், டிவி புகழ் அகடவிகட நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலே என்ற தலைப்பில் அன்னலெட்சுமி, பிரபாகரன், வர்ணனி ஆகியோரும், ஆன்மீகம் பெரிதும் பெருகியது புறத்திலே என்ற தலைப்பில் டிவி புகழ் பழனி, தமிழாசிரியர் சாகுல் ஹமீது, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார்.

    எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் முனைவர் துரை ராயப்பன், ஆலோசகர் மருத்துவர் பாண்டியன், சர்வாலய உழவாரப்பணி குழுவை சேர்ந்த பாபு என்ற குமரவேல், முருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் ஊழியர் ராஜ்மோகன், நிசாந்த், அண்ணா துரை, மணி, மணிவண்ணன், குருக்கள் ஹரிஹரன், வினோத், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

    வருகிற அக் 24 ஆம் தேதி வரை அணைத்து நிகழ்ச்சிகளையும் சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி விழாக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

    • இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது.
    • 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜன் சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சதய நாளான 25ஆம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கம், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

    சதய விழாவை ஒட்டி பெரிய கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து விழா மேடையும் அமைக்கப்படும்.

    • தனி நபர் கழிப்பிடம் குறித்த கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • கை கழுவாமல் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு.

    மதுக்கூர்:

    மதுக்கூர் பேரூ ராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பேரூராட்சி உதவி இயக்குனர் அறிவுரைப்படி, பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் பேரூராட்சி பெருந்தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையிலும் தென்னக பண்பாட்டு கலை குழு மூலமாக பஸ் நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தனி நபர் கழிப்பிடம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதும க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது பற்றி விழிப்புணர்வு செய்ய ப்பட்டது.

    இதில் எமதர்மன் வேடம் அணிந்தும் , ஆடல் , பாடல் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மேள தாளங்கள் முழங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கை கழுவாமல் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு , குளிக்கும் போது வீணாகும் தண்ணீரை நல்ல முறையில் காய் கனி தோட்டத்திற்கு விடுதல் , பிளாஸ்டிக் பை பயன்படுத்தாமல் மீண்டும் மஞ்சப்பை பயன்படு த்துவது பற்றியும் பல்வேறு வகைகளில் ஆடல் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. முடிவில் மதுக்கூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வை யாளர் ரவி நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • முடிவில் ஆசிரியர் ஜமுனா ராணி நன்றி கூறினார்.

    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா பூதலூர் வட்டார கல்வி அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி பள்ளி செயல் பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தார். பூதலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் அன்பு சுப்பிரமணியன், திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடக்க த்தில் ஆசிரியர் தேசிகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஜமுனா ராணி நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் முதல்கட்ட நிகழ்வு நேற்று தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் அரசு பள்ளிகளின் சிறப்பு அம்சங்களான காற்றோட்டமான வகுப்ப றைகள், தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதி, தமிழ் வழி பிரிவுகளுடன் ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதும் விளக்கப்படும். அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

    இது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படும். எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா, இல்லம் தேடிக் கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவை பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேரணியில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சீதாலெட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் புனித செபஸ்தியார் உதவிபெறும் நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளரும், பங்குதந்தையுமான காேஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.

    இணை பங்குதந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், முத்துமேரி மைக்கேல் ராஜ், பாபநாசம் பெனிபிட் பண்ட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆறுமுகம், பாபநாசம் லயன்ஸ் கிளப் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், ஆசிரியர் பயிற்றுனர் அகிலா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஆபிரகாம் பாபு தொகுத்து வழங்கினார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை கேத்ரின் ஆலிஸ் ராணி நன்றி கூறினார்.

    • நாட்டிய கலைஞர்கள் 500-க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    • ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த அபயா ம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடங்கியது.

    சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 18ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

    இதில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை கோவை சேலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெங்களூரு மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

    முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் மயூர நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    நிகழ்ச்சியில் நிறுவனர் பரணிதரன், ஏ ஆர் சி விஸ்வநாதன், ஏ பி சி செந்தில்வேலன், நிகழ்ச்சி யின் தொகுப்பாளர் அகஸ்டின்விஜய், மற்றும் மயிலாடுதுறை முக்கிய பொறுப்பாளர்கள் அரசியல்வாதிகள் பொது மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
    • ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநக ராட்சிக்குட்பட்ட தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடப்பு ஆண்டில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த மாமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதவாது:-

    கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதே போன்று நடப்பு ஆண்டிலும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாகும்.

    குறிப்பாக தரமான சாலைகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குப்பையில்லாத நகரமாக மாற்றுதல், அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்தல், தரமான மருத்துவசேவை, மாநகராட்சிப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரமான கழிவறை வசதிகள் செய்து தருதல், ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    மேலும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து

    தரப்பு மக்களுக்கும் தேவை யான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிடவும், மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் சேலம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உருவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மண்டலக்குழுத்தலை வர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரிய கோவில் வளாகத்தில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்கியது.
    • பல்வேறு இடங்களின் வழியாக சென்று மீண்டும் பெரிய கோவிலுக்கு வந்தடைந்தது.

    தஞ்சாவூர்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர். காந்திஜி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்று மீண்டும் பெரிய கோவிலுக்கு வந்தடைந்தது. 

    • சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கி நாளை வரை சதய விழா தொடங்கியது.
    • பல்வேறு கலைநடனங்கள், கலை நாட்டியங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் மட்டுமே சதய விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கியது. நாளை வரை சதய விழா நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக பெரியநாயகி அம்மனுக்கு சந்தனம் காப்பு அலங்காரமும், பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

    காலை 9.15 மணிக்கு டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது . தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கம் நடைபெற்றது ‌‌‌ .

    இதையடுத்து மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்த நிகழ்ச்சிக்கு சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழு துணை தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்துகொண்டு பேசினர்.

    இதையடுத்து கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடக்க உரையாற்றினார். தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். திருக்கோவில் தேவார இன்னிசை முழக்கம் என்ற தலைப்பில் திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் சண்முக செல்வகணபதி பேசினார். இதேபோல் ராஜராஜன் பெற்ற வெற்றிகள் என்ற தலைப்பில் தமிழ் வேள் உமாமகேசுவரனார் கல்லூரி பேராசிரியர் இளமுருகன், மாமன்னரின் சமயபொறை என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சிவபெருமான், செம்பியன் மாதேவி குந்தவை நாச்சியார் வளர்ப்பில் அருண்மொழித்தேவன் என்ற தலைப்பில் ந.மு.வே‌. நாட்டார் கல்லூரி குழு உறுப்பினர் விடுதலை வேந்தன், தஞ்சை ராஜராஜேஸ்வரமும் திருவிசை பாவும் என்ற தலைப்பில் சென்னை புலவர் பிரபாகரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இன்று மாலையில் திருமுறை பண்ணிசை, திருமுறையின் திரு நடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், வயலின் இசை நிகழ்ச்சி , கவியரங்கம், நகைச்சுவை சிந்தனை பாட்டு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது.

    இன்று நடந்த முதல் நாள் விழாவில் சதய விழா குழு உறுப்பினர் இறைவன், கோவில் உதவி ஆணையர் கவிதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் , தாசில்தார் சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

    தொடர்ந்து நாளை இரண்டாம் நாள் விழா நடைபெற உள்ளது. நாளை காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் மாலை அணிவிக்கின்றனர். பின்னர் திருமுறை திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும்.

    இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்காக நடத்தப்பட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • அ.தி.முக. பத்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு குறையை சொல்லி இருக்க முடியுமா.
    • திறப்பு விழா திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரத்தில் கோட்டூர் தெற்கு, வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியதாவது, ஆகஸ்ட் 15ம் தேதியை பிரதமர் பழங்குடி தினமாக அறிவித்துள்ளார். இது நமக்கு எவ்வளவு பெரிய பெருமை. நமக்கு இதுதான் சமத்துவம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அ.திமுக., பத்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு குறையை சொல்லி இருக்க முடியுமா. ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் ஆட்சியை சிறப்பாக நடத்தினார். மக்களுடைய தேவைகளை நிறைவேற்றினார். மக்களுடைய தேவையான திட்டங்களை இன்றைக்கு திமுக புறக்கணிக்கிறது. இன்றைக்கு நடைபெற்ம் திறப்பு விழா திட்டங்கள் எல்லாமே அ.திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள். மக்கள் நமக்கு ஆதரவை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பொதுக்கு–ழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடியார் அணிக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிக்க–ப்பட்டது. மாவட்ட செயலாளரை இடைக்கால பொது–ச்செயலாளர் கழகத்தின் அமைப்பு செயலா–ளராக அறிவித்ததற்கு பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் டாக்டர்.கோபால், சிவா.ராஜமாணிக்கம், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், அவைத் தலைவர் சுப்பிரமணியன், கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா சேட், அவைத்தலைவர் கண்ணன், தகவல் தொழில் நுட்ப ஒன்றிய அணி செயலாளர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×