என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
- தனி நபர் கழிப்பிடம் குறித்த கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- கை கழுவாமல் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு.
மதுக்கூர்:
மதுக்கூர் பேரூ ராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பேரூராட்சி உதவி இயக்குனர் அறிவுரைப்படி, பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் பேரூராட்சி பெருந்தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையிலும் தென்னக பண்பாட்டு கலை குழு மூலமாக பஸ் நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தனி நபர் கழிப்பிடம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதும க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.
மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது பற்றி விழிப்புணர்வு செய்ய ப்பட்டது.
இதில் எமதர்மன் வேடம் அணிந்தும் , ஆடல் , பாடல் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மேள தாளங்கள் முழங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கை கழுவாமல் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு , குளிக்கும் போது வீணாகும் தண்ணீரை நல்ல முறையில் காய் கனி தோட்டத்திற்கு விடுதல் , பிளாஸ்டிக் பை பயன்படுத்தாமல் மீண்டும் மஞ்சப்பை பயன்படு த்துவது பற்றியும் பல்வேறு வகைகளில் ஆடல் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. முடிவில் மதுக்கூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வை யாளர் ரவி நன்றி கூறினார்.