என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "public petition"
- கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 2 டப்பாக்களில் புதிய வகை ஈக்களை பிடித்துக்கொண்டு மனு கொடுக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் சின்னக்காம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையை அகற்றும்படி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது கோழிப்பண்ணையில் இருந்து புதிய வகை ஈக்கள் உற்பத்தியாகி காற்றின் மூலம் பரவி வருகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து உணவுகளில் விழுவதால் உணவை உண்ண முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் தூங்கும்போது காதில் ஈக்கள் புகுந்து விடுகிறது. கடிப்பதால் அரிப்பு ஏற்படுகிறது. காய்கள் மற்றும் கீரைகளை சேதம் செய்கிறது.
கால்நடைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கோழிப்பண்ணையால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கோழி இறகுகள் காற்றில் அதிகமாக வருகிறது.
சின்னக்காம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் மனுக்களை கண்டு கொள்வதில்லை. எனவே இந்த கோழிப்பண்ணையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஈக்களை பரவலை கட்டுப்படுத்த வேண்டும் .
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- குறை கேட்பு கூட்டம் வருகிற 7-ந் தேதி முதல்15-ந் தேதி வரை திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
- மக்கள் தங்கள் குறைகளை மனு வாக அளித்து பயன் பெற லாம்
விழுப்புரம்:
திண்டிவனம் வட்டத்தில் 1432-ம் பசலிக்கான வரு வாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் விழுப்புரம், உதவி ஆணையர் (கலால்) தலை மையில், குறை கேட்பு கூட்டம் வருகிற 7-ந் தேதி முதல்15-ந் தேதி வரை (சனி, ஞாயிறு விடு முறை நாட்கள் நீங்களாக) திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் தினசரி காலை 10மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. திண்டிவனம் வட்டத்திற் குட்பட்ட கிராம பொது மக்கள் இந்த நாட்களில் தங்கள் குறைகளை மனு வாக அளித்து பயன் பெற லாம் என திண்டிவனம் தாசில்தார் அலெக் சாண்டர் தெரிவித்துள்ளார்.
- தமிழக தொல்லியல் துறையால் ஆய்வு செய்ய தோ்வு செய்யப்பட்டுள்ளது.
- நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயக்குமாா் தலைமையில் கவுத்தம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழக தொல்லியல் துறையால் ஆய்வு செய்ய தோ்வு செய்யப்பட்ட 32 இடங்களில் கவுத்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரிக்கல்பாளையமும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மிகவும் பழைமையான குமரிக்கல் உள்ளது. இந்த இடத்தில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் சாா்பில் உயா்மின் கோபுரத்துக்கான துணை மின்நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் துணை மின்நிலையம் அமைத்தால் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆகவே குமரிக்கல்பாளையத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் முயற்சிகளைக் கைவிட்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆண்டிபாளையம் 60-வது வார்டு கண்ணன் காட்டேஜ் பகுதியில் சுமார் 250 வீட்டுக்கு மேல் உள்ளது.
- குப்பை தொட்டி இல்லாமல் மேலும் நோய்களும், கெட்ட துர்நாற்றமும் வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் ஆண்டிபாளையம், கண்ணன் காட்டேஜ் 60-வது வார்டு பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஆண்டிபாளையம் 60-வது வார்டு கண்ணன் காட்டேஜ் பகுதியில் சுமார் 250 வீட்டுக்கு மேல் உள்ளது. நாங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதி இல்லை. சாக்கடை வசதி இல்லை.குடிநீரில் புழுக்கள் கலந்து வருகிறது. தெருவில் கொசுத் தொல்லைகளும் உள்ளது.அவரவர் வீட்டின் முன்பு குழி தோண்டி தண்ணீரை பெருக்க வேண்டிய சூழ்நிலைஉள்ளது. இந்த தண்ணீர் குழியில் பெருகி ரோடுகளில் செல்கிறது.குழந்தைகள் அதில் மிதித்து தான் நடக்க வேண்டியுள்ளது. இதனால் டெங்குகாய்ச்சல் அதிகமாக வருகிறது. சிக்கன்குனியா பெரியவர்களுக்கு வருகிறது.
மேலும் குப்பை தொட்டி இல்லாமல் மேலும் நோய்களும், கெட்ட துர்நாற்றமும் வருகிறது. மாநகராட்சிக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மனுவும் கொடுத்துஉள்ளோம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
- ஊராட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
- நிலத்தை வீட்டு மனையாக பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
அன்னூர்,
அன்னூர் அருகே அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர் ஊராட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு தாசில்தார் தங்கராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விவசாய தொழிலாளர்களான எங்களுக்கு சொந்தமான இடம் மற்றும் வீடு இல்லாததால் ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
அரசு ஒன்றை சென்ட் இடம் வழங்கினால் அதில் வீடு கட்ட முடிவதில்லை. எனவே அனைத்து குடும்பங்களும் தலா 5 சென்ட் நிலம் வழங்க வேண்டும்.
மேலும் இப்பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது. அந்த நிலத்தை வீட்டு மனையாக பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் ராஜிடமும மனு அளித்தனர்.
இதுகுறித்து நமது நிலம் நமதே அமைப்பின் தலைவர் குமார வேல் பேசுகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த நிலமும், வீடும் இல்லாமல் தவிக்கின்றனர் அவர்களுக்கு தலா 5 சென்ட் இடம் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்த இருக்கிறோம். என்றார்.
- நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
- சித்த மருத்துவ கல்லூரி அருகே உள்ள நேருஜி கலையரங்கத்தில் எதிர்புறத்தில் இருந்து வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
பாளை பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், சித்த மருத்துவ கல்லூரி அருகே உள்ள நேருஜி கலையரங்கத்தில் எதிர்புறத்தில் இருந்து வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது.
இந்த பணிக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாங்கள் எங்களது நிலத்தை வழங்கி விட்டோம். ஆனால் இதுவரை அந்த சாலை பணி நடக்கவில்லை. எனவே அந்த சாலையை விரைந்து அமைத்து மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தச்சநல்லூர் 13 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் தகனமேடை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் நாங்கள் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடைக்கு இறுதிச்சடங்கிற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள தகன மேடையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
- நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர் பாஸ்கரன், வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 53 மற்றும் 54-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் 53-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தலைமையில் இன்று மாநகராட்சி குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் காலனி, மகிழ்ச்சி நகரில் உள்ள தரைதள நீர் தேக்க தொட்டிக்கு சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பம்பிங் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் அடிக்கடி உடைப்பு, அதே போன்று தரை தள நீரேற்று தொட்டியில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குழாய்களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.
இது தொடர்பாக மண்டல அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், போனை எடுப்பதில்லை. எனவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், வருகிற 18-ந் தேதி வ.உ.சி குருபூஜை விழா நடைபெற உள்ளது. எனவே மணி மண்டபத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது.
- பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 2 சேடபாளையம் நியாய விலை கடை அருகிலும், வார்டு எண் - 3 டி. இ.எல். சி பள்ளி வளாகத்திலும், வார்டு எண் - 5 ல் குலாலர் அங்காளம்மன் கோயில் மண்டபத்திலும், வார்டு -13 ல் செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் விநாயகம், முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், அலுவலக மேலாளர் சண்முகராஜா, தலைமை எழுத்தர் சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டங்களில், அந்தந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, தார் சாலை, உள்ளிட்டவற்றை தீர்க்கக்கோரி கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் தரப்பில் கொடுத்த கோரிக்கை மனுக்கள் விபரம் வருமாறு:-
வார்டு எண்3ல் நாரணாபுரம் பகுதிக்கு புதிய ரேசன் கடை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்தல், பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும். வார்டு எண்.2ல் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகளை கொட்ட அனுமதிக்கூடாது. சேடபாளையம்,தண்ணீர்பந்தல் முதல் அருள்புரம் வரை செல்லும் நெடுஞ்சாலை துறைக்கான தார் சாலையை அகலப்படுத்திட வேண்டும். சேடபாளையம் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். சேடபாளையம் பகுதியில் தெருநாய் தொல்லை இல்லாமல் செய்ய வேண்டும்.வார்டு எண்.5ல் டி.எம்.டி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் பெயர் பலகை அமைத்தல், மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். தெரு நாய் தொல்லையை அகற்ற வேண்டும்.
அரசு கல்லூரி எதிரே பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். அம்மாபாளையம் பிரிவில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். மங்கலம் சாலையிலிருந்து ராயர்பாளையம் பகுதி வரை பி.ஏ.பி. வாய்க்கால் மண்பாதையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். வார்டு எண் 13ல் செட்டிபாளையம் சாலை பாலாஜி நகர் பகுதியில் ரேசன் கடை புதியதாக அமைக்க வேண்டும். அருள்ஜோதி நகர்,ராஜ கணபதி நகர் பகுதியில் தெருநாய் தொல்லைக்கு நிவர்த்தி செய்ய வேண்டும். கோவை -செட்டிபாளையம் சாலை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
- விளாத்திகுளம் அருகே உள்ள வீரபட்டி கிராமத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நடைபயிற்சி மேற்கொண்டார்
- சாலையில் சீம கருவேல மரங்களை உடனடியாக அகற்றி விட்டு மரக்கன்றுகளை நடவும் 1,500 பனை விதைகளை பொது இடங்களில் நடவும் ஆலோசனை வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வீரபட்டி கிராமத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டு அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
இதனையெடுத்து விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில்பாலம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.மழைக்காலத்திற்குள் வாறுகால் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்கவீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா ராணியிடம் அறிவுறுத்தினார்.
மேலும் தோள்மலைபட்டி செல்லும் சாலையில் சீம கருவேல மரங்களை உடனடியாக அகற்றி விட்டு மரக்கன்றுகளை நடவும் 1,500 பனை விதைகளை பொது இடங்களில் நடவும் ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலார் மும்மூர்த்தி, கவுன்சிலர் பரமேஸ்வரி மாரியப்பன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஆதித்தமிழர் வடக்கு மாவட்ட பேரவை துணை தலைவர் வீரப்பட்டி சின்னராஜ், கனியமுதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- மக்களுக்கு தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும்.
அன்னூர்,
அன்னூர் ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தனித்தனியாக பட்டா இல்லாத காரணத்தினால் ஒரு வீட்டில் மூன்று முதல் நான்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதனால் கடந்த மாதம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி குடியிருப்பு அருகே மோதியதில் ஒருவர் பலியாகினார். இந்த விபத்துக்களை தவிர்க்க தனித்தனியாக பட்டா வழங்கக்கோரி ஏற்கனவே கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அவர்களின் பரிந்துரையின் படி நேற்று அன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
- தமிழகத்திலேயே நாங்குநேரி தாலுகா தான் அதிக பரப்பளவு கொண்டதாக உள்ளது.
- புதிதாக வீடு கட்ட, நிலத்தை அளக்க சுமார் 4 மாதம் காலதாமதம் செய்யப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கினர்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவி குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொது மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதன்மூலம் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும் எங்களது பொது பயன்பாட்டிற்காக 39 சென்ட் நிலத்தையும் அரசு வழங்கியது.
நாங்கள் அந்த பகுதியில் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறோம். அங்கு மின் இணைப்பு வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ராமையன்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுக்காலனி, சிவாஜி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் இணைப்புகள் வழங்க பாளை வட்டார வளர்ச்சி அலுவலகம் அனுமதி கொடுத்த போதிலும், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்க காலதாமதம் செய்து வருகிறார்கள்.
எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் தெரு விளக்குகள் வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அம்பை ஒன்றியம் தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 1988-ம் ஆண்டு அம்பை தாலுகா அலுவலகம் சார்பில் புறம்போக்கு நிலத்தில் 109 ஏழை பெண்கள் மரம் வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் பயன்பெற்ற சிலர் மரங்களை அழித்துவிட்டு ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நாம் தமிழர் கட்சி வணிகர் பாசறை சார்பில் நாங்குநேரி தாலுகா இடையன்குளத்தை சேர்ந்த செல்வின் தலைமையில் பொது மக்கள் கொடுத்த மனுவில், தமிழகத்திலேயே நாங்குநேரி தாலுகா தான் அதிக பரப்பளவு கொண்டதாக உள்ளது.
இங்கு அதிகமான மக்கள் வசித்து வருவதால் தாலுகா அலுவலகத்தில் எந்த ஒரு பணிக்கும் காலதாமதம் ஏற்படுகிறது. புதிதாக வீடு கட்ட, நிலத்தை அளக்க சுமார் 4 மாதம் காலதாமதம் செய்யப்படுகிறது.
இந்த தாமதத்தால் 15 சதவீதம் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துவிடுகிறது. இதன்மூலம் 10 லட்ச ரூபாய்க்கு கட்ட வேண்டிய பணிகள் 12 லட்சம் ரூபாய் செலவாகிறது.
எனவே 17 ஊராட்சிகள் கொண்ட களக்காடு ஒன்றியம், 27 வார்டுகள் கொண்ட களக்காடு நகராட்சி, 15 வார்டுகள் கொண்ட திருக்குறுங்குடி பேரூராட்சி இவற்றினை உள்ளடக்கி களக்காட்டை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மேற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் சாலை, குடிநீர் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
- பெயர்மாற்றம், வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி யின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது.
திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மேயர் இந்திராணி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன், மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சி லர்கள் இந்திரா காந்தி, விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் பகுதியில் பஸ்நிலையத்தை மீண்டும் செயல்படுத்தவும், மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருநகர் விஸ்தரிப்பு பகுதியான 94-வது வார்டு பகுதியில் எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் சாலைவசதி மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்து அந்தப்பகுதி பொதுமக்கள் மேயர் இந்திராணியிடம் மனு கொடுத்தனர். திருநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். ஆக்கிரமி ப்புகளை அகற்றக்கோரியும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல பெய ர்மாற்றம், வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களின் கோரி க்கைகளை நிறைவேற்று வதாக அதிகாரிகள் பொது மக்களு க்கு வாக்குறுதி அளித்து அனுப்பி வை த்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்