என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pwd"
- அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
- கோவில்கள் பாஜக கொள்ளையடிப்பதற்கான இடங்களாக மாறிவிட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆனால் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்லும் 14 கிலோமீட்டர் நீளம் கொண்ட பிரதான ராம் பாத் சாலையில் பொத்தல்கள் ஏற்பட்டு மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில்தான் தற்போது, யோகி ஆதித்தனாத் அரசு மூன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
இதற்கிடையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாகவும், கோவில்கள் பாஜக கொள்ளையடிப்பதற்கான இடங்களாக மாறிவிட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன.
- மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
- பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளி கள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மூலம் 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளையும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரத்து 200 மதிப்பி லான உபகர ணங்களை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பண்ருட்டி போலீஸ் லைன் தெருவில் வசிப்பவர் தீபா
- எனக்கு பெட்டிக்கடை வைக்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித் வந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் தெருவில் வசிப்பவர் தீபா (வயது 26). 2 கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளியான இவர் தனது காலால் மனு எழுதி கலெக்டரிடம் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
2 கைகளையும் இழந்த நான் பெட்டிக்கடை வைக்க விரும்புகிறேன். அதனால் எனக்கு பண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் பெட்டிக்கடை வைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். இதன் மூலம் நான் யாருடைய உதவியும் இன்றி எனது பெற்றோரை கவனித்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே எனக்கு பெட்டிக்கடை வைக்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. காலினால் மனு எழுதிய மாற்றுத் திறனாளி பெண்ணை, அங்கு வந்த பொதுமக்கள் அச்சரியத்துடன் பார்த்து சென் றனர்.
- போலீசாருடன் தள்ளுமுள்ளு
- பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் நுழைவுவாயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறையில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆயிரக்கணக்கான வவுச்சர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களை தேர்தல் கமிஷன் பணியில் இருந்து நீக்கியது. ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்தவாரத்தில் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் நுழைவுவாயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று அண்ணாசிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி, ஜென்மராக்கினி கோவில் வீதி வழியாக சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் ஆம்பூர் சாலையில் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அங்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஒரு கண் பார்வை பாதித்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவி அவதியடைந்தார்.
- 40 சதவீதத்திற்கு மேல் உடலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்று முடநீக்க வல்லுநர் கூறினார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழராமநதி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. விவசாயி. இவரது மகள் காயத்ரி (வயது 14).
இவர் நீராவி தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலேயே இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. தனக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் காயத்ரிக்கும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக மாணவியின் தந்தை பாரதிராஜா வேதனை தெரிவித்தார்.
மகளின் எதிர்காலம் கருதி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், தலையிட்டு மாற்றுதிறனாளி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்க வல்லுநர் ஜெய்சங்கர் கூறுகையில், காயத்ரிக்கு ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. இதை 30 சதவீத குறைபாடாக கருத முடியும்.
மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற ஒருவருக்கு 40 சதவீதத்திற்கு மேல் உடலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே அரசு விதிகளை பின்பற்றி சான்றிதழ் வழங்கப்படும். எனவே அரசு விதிகளை மீறி காயத்ரிக்க மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்க இயலாது என்றார்.
இந்தியாவின் வணிகத்தலைநகரான மும்பையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் முறையான பராமரிப்புகள் இன்றி சமீபகாலங்களில் அதிக அளவில் விபத்துகள் நிகழ்கின்றன. இந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தியும், விபத்துக்களை தவிர்க்கவும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் மாநில அரசு துரித நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் கண்டித்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த சிலர் நவி மும்பையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை அடித்து உடைத்து துவம்சம் செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #MumbaiPotholeDeaths
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்