search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quiz competition"

    • பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ்ச் என்ற பெயரில் வினாடி வினா போட்டி நடத்திவருகிறது.
    • வினாடி வினா போட்டியில் கொல்கத்தா பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம் பெற்றிருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ்ச் என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்திவருகிறது. மிகவும் கடினமான வினாடி வினா போட்டியாகக் கருதப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், இந்த வினாடி வினா போட்டியின் அரையிறுதிச் சுற்று கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு பங்கேற்றது. அந்தக் குழுவில் கொல்கத்தாவை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம்பிடித்தார்.

    போட்டியில் முன்வைக்கப்பட்ட பல கடினமான கேள்விகளுக்கு சவுரஜித் தேப்நாத் திறம்பட பதிலளித்தார். இதன்மூலம் அவரது குழு இறுதிச்சுற்றுக்கு தேர்வானது. லண்டனில் வரும் 8-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    • சி.பி.எஸ். இ., பள்ளியின் உள்ளரங்கத்தில் நடந்த போட்டியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • இந்தாண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி பெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமலோற்ப வம் கல்வி குழுமம் சார் பில், 14-ம் ஆண்டு பள்ளி களுக்கு இடையேயான வினாடி- வினா போட்டி நடந்தது.

    சி.பி.எஸ். இ., பள்ளியின் உள்ளரங்கத்தில் நடந்த போட்டியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்றனர். இளநிலை, முதுநிலை என இரு பிரிவுகளில் போட்டி நடந்தது. இளநிலை பிரிவில் செயின்ட் பேட்ரிக் பள்ளி முதலிடமும், பெத்தி செமினார் பள்ளி2-ம் இடமும், செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்தன.முதுநிலை பிரிவில் பெத்தி செமினார் பள்ளி முதலிடமும், தி ஸ்டெடி பள்ளி 2-ம் இடமும், செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி 3-ம் இடம் பிடித்தன.

    அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்தாண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி பெற்றது.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான 20-வது ஆண்டு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.
    • உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சிவந்தி கோப்பையை வென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயின்றோர் கழகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான 20-வது ஆண்டு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.

    கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ரா தேவி வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.

    பெங்களூரு ஈக்கோ வேர்ல்ட் டெக் சிஸ்டம்ஸ் குளோபல் சர்வீஸ் நிறுவன மூத்த மேலாளர் குமரன் ராமஜெயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கற்றல் ஒரு தொடர்ச்சியான செயல்முறை, மாணவர்கள் தங்களது திறன்கள் மற்றும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் 25 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முதலில் பொது அறிவு, நாட்டு நடப்பு, தொழில்நுட்பம், அடிப்படை அறிவியல் ஆகியவற்றில் இருந்து மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட 6 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சர்வதேச மனிதவள மற்றும் வினாடி-வினா போட்டி நிபுணர் ஜஸ்டின் ஆண்டனி இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை நடத்தினார். இதில் உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது பவாஸ், பொன் காயத்ரி முதலிடம் பிடித்து சிவந்தி கோப்பையை வென்றனர்.

    கன்னியாகுமரி எஸ்.ஆர்.கே.பி.வி. மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் அஸ்வந்த், அகிேலஷ் கோவர்தன் 2-வது இடமும், சாகுபுரம் கமலாவதி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீராம், அப்துல் ஹரீத் 3-வது இடமும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற மாண வர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதிச்சுற்றில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த உடன்குடி சல்மா பள்ளி மாணவர்களுக்கு சிவந்தி சுழல் கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படும்.

    • போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அளவிலான மாபெரும் வினாடி வினா போட்டி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தொடர்ந்து 9-வது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ- மாணவிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.

    கணிதத் துறை உதவி பேராசிரியை கீதா வரவேற்றார். இதில் கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ேபசியதாவது:-

    கிராமப்புற மாணவர்க ளின் முன்னேற்றத்திற்காக கல்லூரி முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை விளக்கி கல்வியின் அடிப்படை நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். போட்டிதேர்வுகளின் போது கொடுக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் எவ்வாறு முழு திறன்களையும் வெளிப் படுத்துவது என்பதற்கு இது போன்ற வினாடி வினா போட்டிகள் உதவும் என விளக்கி பேசினார்.

    இப்போட்டியை பிரபல குவிஸ் மாஸ்டர் டாக்டர் சுமந்த்.சி.ராமன் தொகுத்து வழங்கினார்.

    தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாண வர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றில் நடப்பு நிகழ்வுகள், தற்கால அரசியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், கல்லூரியின் சீனியர் டீன்.எம்.ஏ. நீலகண்டன் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் பரிசு வழங்கினர். மதுரை விகாஷா ஹெரிட்டேஜ் காம்பசின் மாண வர்கள் முத்து சிவகாதிர் மற்றும் அஸ்வின் சிவா முதல்பரிசு ரூ.25 ஆயிரத்தை யும், நெல்லை புஷ்பலதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். நஷீஹா பாத்திமா மற்றும் வீ.பி.ஹரினி 2-ம் பரிசு ரூ.15 ஆயிரத்தையும், தென்காசி பாரத் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பொன்செல்வ ஜெயந்த் மற்றும் ஜாய்சன் ராஜா ஆகியோர் 3-ம் பரிசு ரூ.10 ஆயிரத்தையும் தட்டி சென்றனர்.

    மேலும் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குநர், முதல்வர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, வினாடிவினா போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், எஸ்.சித்திரைக்குமார், எஸ். எஸ்.பாஷித்தா பர்வீன், எம்.அரவிந்த், எஸ்.என்.ஐ.சதீஷ் பாலகுமாரன், எஸ்.சிவபாலன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கணித விழா-2023 நடைபெற்றது.
    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி இளங்கலை கணிதவியல் துறை மாணவிகள் வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

    வள்ளியூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கணித விழா-2023 நடைபெற்றது. இதில் பங்கேற்ற தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி இளங்கலை கணிதவியல் துறை மாணவிகள் வெங்கடேஷ்வரி, தில்லை அருந்ததி, அபிநயா ஆகியோர் வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன், கல்லூரி முதல்வர் ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் காமராஜ், ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை செல்வகுமார், துறைத்தலைவர் சபீனாரோஸ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

    • பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதத்தின் கடைசி வானொலியில் உரை நிகழ்த்துவார்.
    • 'மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பதில் அளித்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி வாழ்த்துக்கள்' கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதத்தின் கடைசி வானொலியில் உரை நிகழ்த்துவார்.

    அதன் தமிழாக்கமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம். இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து 'நமோ ஆப்' மூலமாக ஆன்லைனில் வினாடி வினா நடத்தப்படும்.

    அதில் சிறப்பாக பதில் தெரிவித்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை பூரணாங்கு ப்பத்தைச் சேர்ந்த வரும், அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி பொதுச் செயலாளருமான கிருஷ்ணகுமார் என்ற வாலிபருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் 'மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பதில் அளித்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி வாழ்த்துக்கள்' கூறியுள்ளார்.

    இந்த கடிதத்தினை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் காண்பித்து கிருஷ்ணகுமார் வாழ்த்து பெற்றார். மேலும் பிரதமர் நிகழ்த்திய மனதின் குரல் நிகழ்ச்சி 50 பாகங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகம் ஒன்றை பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து அனுப்பியதை சபாநாயகர் வெளியிட்டார்.

    • அறிவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • கண்காட்சியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் ரோபோ எக்ஸ்போ 2023 என்ற நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை கண்காட்சியில் விளக்கி கூறினர். இதைத்தொடர்ந்து வினாடி-வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முஜீப் முகம்மது முஸ்தபா, பேராசிரியை பிச்சம்மாள் மற்றும் கல்லூரி பிறதுறை தலைவர்களான சுப்புலட்சுமி, அனுலா பியூட்டி, அக்பர் உசேன், பிரின்ஸ், பர்வதவர்த்தினி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

    திருச்செந்தூர்:

    நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்–வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்கள் பா.செல்வம் மற்றும் ச.ஞான அபினாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முதல் பரிசையும், சுழற்கோப்பையையும் தட்டிச் சென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலர் ச.ஜெயக்குமார், பொருளியல் துறை தலைவர் ரமேஷ், வினாடி- வினா போட்டியின் அமைப்பாளர் முத்துக்குமார், வகுப்பு ஆலோசகர் கணேசன் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

    மேலும் கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • வாணியம்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
    • வருகிற 25-ந் தேதி பரிசு வழங்கப்பட உள்ளது.

    வாணியம்பாடி:

    தேசிய வாக்காளர் தின விழாவினை முன்னிட்டு மாநில தலைமை தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்ட இணைய வழியிலான வினாடி வினா போட்டியில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் முதல் பரி சை வென்றுள்ளது.

    இதில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவர் சாரதி மாநிலத்திலேயே முதல் இடமும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காவியா தர்ஷினி இரண்டாவது இடமும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கோகன் ஸ்ரீபிரசாந்த் மூன்றாவது இடமும் பெற்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதி அன்று சென்னையில் நடைபெறும் நிகழ்சியில் பாராட்டி பரிசு வழங்கப்பட உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப்-கலெக்டர் வில்சன் ராஜசேகர் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் மாணவர்களை தலைமையாசிரியர் எஸ். தமிழரசி, உதவி தலைமையாசிரியர் எஸ்.குமரேசன், பொறுப்பாசிரியர் கே.சதிஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.

    • ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறந்த 2 அணிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் முதல்நிலை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
    • இதில் வெற்றி பெறும் 3 சிறந்த அணிகளுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்படும்.

    தென்காசி:

    13- வது தேசிய வாக்காளர் தினம் தொடர்பான (வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல்) செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, வருங்கால வாக்காளர்களின் தேர்தல் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தியத் தேர்தல்கள் மற்றும் பொது அறிவு குறித்து மாநில அளவிலான வினாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் 2 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறந்த 2 அணிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் முதல்நிலை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறாக மொத்தம் 76 அணிகள் முதல்நிலை போட்டியில் பங்கேற்கும். முதல்நிலை, அரையிறுதி மற்றும் இறுதி நிலைப் போட்டிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக காணொலிக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் 3 சிறந்த அணிகளுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவே இறுதியானது.

    • தேசிய வினாடி வினா போட்டியில் வென்ற புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவன் பூவராகவனை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.
    • இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை இலவசமாக நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தேசிய வினாடி வினா போட்டியில் வென்ற புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவன் பூவராகவனை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.

    பிட் இந்தியா இயக்கம், விவோ புரோ கபடி லீக் இணைந்து தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டியை கடந்த 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தியது.

    இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை இலவசமாக நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்ற இந்த வினாடி வினா போட்டியில் புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவன் பூவராகவன் வெற்றியாளராக ேதர்வாகி கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை குஜராத், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரேதச வெற்றி வீரர்களோடு சேர்ந்து கண்டுகளித்தார்.

    மாணவர் உடன் பள்ளி ஆசிரியர் ராகுலும் போட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பு பெற்றார். தேசிய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் பூவராகவனை அமலோற்பவம் பள்ளியின் முதுநிலை முதல்வா லூர்துசாமி வாழ்த்தி பாராட்டினார்.

    • தேசிய அளவில் 2-வது முறையாக வினாடி-வினா போட்டி மாணவ, மாணவிகள் வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
    • கடைசி தேதி 20.11.2022 ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தேசிய அளவில் 2- வது முறையாக Fit India Quiz Competition நடக்கிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகள் மத்திய அரசின் வலைதளமான https://fitindia.nta.ac.in-ல் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.

    இந்த வினாடி-வினா போட்டியில் ஒரு பள்ளியில் 2 மாணவா்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மாணவா்கள் பதிவு செய்தால் ஒரு மாணவருக்கு ரூ.50 வீதம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதற்கான கடைசி தேதி 20.11.2022 ஆகும்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு, சிவகங்கை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சோ்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×