என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rail service"
- 10 ரெயில்கள் அரக்கோணம்- செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
- அந்தியோதயா விரைவு ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து.
தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை, 27 விரைவு ரெயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
அதன்படி, திருச்சி- பகத் கி கோத்தி, காரைக்கால்- லோக்மான்ய திலக், ராமேஸ்வரம்- அயோத்தியா, ராமேஸ்வரம் பனாரஸ் உள்ளிட்ட 10 ரெயில்கள தாம்பரம் வழியாக இயக்கப்பட மாட்டாது.
10 ரெயில்களும், மாறாக அரக்கோணம்- செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்லவன் விரைவு ரெயில், வைகை எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகியவை செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
- சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி ரெயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மழை நீர் சூழந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரெயில் நிலையம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய தொடங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது. அப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயணிகள் கூறும்போது, தாங்கள் 5 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் மூலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
- பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
- கொரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்டன
- பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஆம்பூர்:
ஆம்பூரில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சா லைகள், காலணி தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளது.
அதனால் ஆம்பூரிலி ருந்தும் சென்னைக்கு ரெயில் மூலம் பணியாளர்கள் சென்று வருகின்றனர். அதே போல வியாபார நிமிர்த்தமாக ஆம்பூரிலிருந்து, வெளியூர்க ளுக்கும், வெளியூரிலிருந்து ஆம்பூருக்கும் வரும் வியாபாரிகள் ரெயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேலும், ஆம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பல்வேறு ஊர்களில் உள்ள கல்லூரிகளுக்கு ரெயில் மூலம் சென்று வருகின்றனர்.
கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது ரெயில், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
ஆம்பூர் ரெயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட திருப்பதி-மைசூர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
அதன்படி திருப்பதி -மைசூர் செல்லும் ரெயில் நேற்று இரவு முதல் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதனால் பயணிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சேலம் மற்றும் சேலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு திருப்பூர் தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்து கொண்டுள்ளனர்.
- காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும் எந்த ஒரு வண்டியும் இயக்கப்படாததால் மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம்:
சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி பாராளுமன்றத்தில் பேசியதாவது:-
ரெயில் சேைவ
சேலம் மற்றும் சேலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு திருப்பூர் தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்து கொண்டுள்ளனர்.
இதில் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர், தனியார் துறை பணியாளர்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு செல்வோர், குறிப்பாக தினக்கூலி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என அனைவரும் உள்ளனர்
இந்நிலையில், சேலத்திலிருந்துஅதிகாலை 5.22 மணிக்கு வண்டி எண் 13351 ஆலப்புழா எக்ஸ்பிரசிற்கு பிறகு 9.45 மணிக்கு வண்டி எண் 12626 கேரளா எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி 30 நிமிடங்களுக்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை.கோவையிலிருந்து மாலை 4.25 மணிக்கு 17229 சபரி எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 8 மணிக்கு 16382 புனே எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப் படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி நேரத்திற்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை.
பாதிப்பு
இதனால், காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும் எந்த ஒரு வண்டியும் இயக்கப்படாததால் மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலையில் அவர்களின் வருமானத்தில் பெரும் பகுதி பேருந்து பயணச்செலவிற்கே செலவிட வேண்டி இருப்பதால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஆகவே, ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06801-யை சேலத்தில் இருந்து காலை சுமார் 7 மணி அளவில் புறப்படுமாறும், மறுமார்கமாக, கோவையி லிருந்து மாலை 6.10 மணிக்கு ஈரோட்டிற்கு புறப்படும் வண்டி எண் 06800-யை சேலம் வரை நீட்டித்து இயக்க பரிந்துரைத்து, அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மயிலாடுதுறை-கோவை ஜன்சதாப்தி ரெயில் நாளை மயிலாடுதுறை-திருச்சிக்கு இடையே 50 நிமிடம் தாமதமாக செல்லும்.
- இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
பாலக்காடு-திருச்சி ரெயில் நாளை (சனிக்கிழமை) திருச்சி கோட்டை முதல் திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருச்சி கோட்டையில் இருந்து இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு ரெயில் நாளை திருச்சியில் இருந்து திருச்சி கோட்டை வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் திருச்சி கோட்டை முதல் பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும். மயிலாடுதுறை-கோவை ஜன்சதாப்தி ரெயில் நாளை மயிலாடுதுறை-திருச்சிக்கு இடையே 50 நிமிடம் தாமதமாக செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
- மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.
அம்பத்தூர்:
அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை விரைவு மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயிலில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த விரைவு மின்சார ரெயில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நிற்காது.
இந்த நிலையில் காலை 8:15 மணியளவில் கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் வந்தபோது ஒரு பெட்டியில் பயணம் செய்த கல்லூரி மாணவர் திடீரென அவசர கால அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
அபாய சங்கிலியை பிடித்து இழுத்த கல்லூரி மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.
- அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது.
- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.
போடி:
மதுரை-போடி வழித்தடத்தை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ந்தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றுமுதல் போடி வரை இந்த ரெயில் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக ஓ.எம்.எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் நேற்று சோதனை நடைபெற்றது. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மீண்டும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது.
இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.
மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் தற்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னைக்கு கல்வி கற்க செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுசெல்லும் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர்.
- பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் 4-வது ரெயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை கோட்ட உயர் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்று பறக்கும் ரெயில் சேவையை பாதிக்காத வகையில் 4-வது ரெயில் பாதை அமைக்கப்படும்.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு 4-வது ரெயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
4-வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையொட்டி சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை 7 மாதங்கள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பயணிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை நிறுத்தும் திட்டம் கைவிடப்படுகிறது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் 4-வது ரெயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு 4-வது ரெயில் பாதை அமைக்கப்படுவதையொட்டி சென்னை கடற்கரை- சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை 7 மாதங்கள் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே இதுபற்றி முடிவு எடுக்க அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை நிறுத்தி வைக்கும் திட்டத்தை கைவிட தெற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து செயலாளருடன் கலந்தாலோசித்து புதிய திட்டத்தை இறுதி செய்து வருகிறோம். இந்த வார இறுதிக்குள் புதிய திட்டம் தயாராகிவிடும்.
சென்னை கோட்ட உயர் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்று பறக்கும் ரெயில் சேவையை பாதிக்காத வகையில் 4-வது ரெயில் பாதை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சென்டிரல் மற்றும் மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் சேவையில் தினமும் ஏற்படும் காலதாமதத்தால் பல்வேறு சிரமங்கள் வருகின்றன.
வட மாநிலங்களில் இருந்து வரும் ஒருசில ரெயில்களை மூர்மார்கெட்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சரியான நேரத்தில் இயக்க முடிவதில்லை. இதற்கு காரணம் கூடுதல் ரெயில் பாதை இல்லாததே ஆகும்.
நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் இடையே உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
அதே போல சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையேயும் 4-வது வழித்தடம் நிறுவப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
கூடுதல் வழித்தடங்கள் அமைக்கப்படுவதன் மூலம் வெளியில் இருந்து வரும் ரெயில்கள் கொருக்குப்பேட்டை வழியாக வந்து எழும்பூர் மற்றும் கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு செல்ல உதவும். மேலும் பேசின்பிரிட்ஜ் வழியாக ரெயில்களை நெரிசல் ஏற்படாமல் இயக்கவும் உதவும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை-அத்திப்பட்டு- கும்மிடிப்பூண்டி- கூடூர் மார்க்கம் அதிக ரெயில் சேவை கொண்டதாகும். தெற்கு ரெயில்வேயில் மிகவும் பிசியான வழித்தடமாக இது அமைந்துள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் ஆகியவை நாள் முழுவதும் இதில் இயக்கப்படுகின்றன.
அதிக பயன்பாடு உள்ள வழித் தடமாக இது இருப்பதால் கூடுதலாக ரெயில் பாதை அமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கு ரெயில்வேயில் முக்கிய வழித்தடமாக கருதப்படும் இந்த மார்க்கத்தில் சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையே 3-வது மற்றும் 4-வது வழித்தடம் ரூ.150 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இதற்கிடையில் கொருக்குப்பேட்டை- அத்திப்பட்டு இடையே 3-வது பாதை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அத்திப்பட்டு - எண்ணூர்- திருவொற்றியூர் வரை 4-வது பாதை அமைக்கும் பணி 2016-ல் தொடங்கப்பட்டது.
தற்போது பணிகள் நடைப்பெற்று வரும் கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் 4-வது வழித்தடம் இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4-வது வழித்தடம் தயாராகி விட்டதால் இனி கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்தை தாமதமின்றி கையாள முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து ரெயில்களும் வந்து செல்ல இது உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்