என் மலர்
நீங்கள் தேடியது "Railway Minister"
- ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளி போர்வைகள் வழங்கப்படும்.
- போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டும்தான் துவைக்கப்படுமா என காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பினார்.
ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா, "ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்கப்படும் படுக்கை, கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுமா?" என மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்கப்படும். பெட்களில் ஷீட்களின் தரத்தை உறுதி செய்ய கூடுதல் கம்பளியும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்று ரெயில்வே துறைக்கு ஆங்கில நாளிதழ் ஒன்று ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டிருந்தது.
அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .
- ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன.
- அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தபோது, சிலவற்றை சரிசெய்ய தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று முடிவடைந்தன.
இந்தநிலையில், நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தில் இருந்து டிராலி மூலம் வந்த அவர், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபடி மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் மூலமாக மேலே சென்று தூக்கு பாலத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் ஆய்வுக்காக தூக்குப்பாலம் ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் தூக்குப்பாலம் இறக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கீழே ஒன்றுசேரும் இடத்தையும் ரெயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பிறகு கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா கூறியதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன. தற்போது புதிய ரெயில் பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரெயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.
சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.
அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரெயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
- கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
- மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லி ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.
ஏற்கனவே கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
கும்பமேளாவில் 30, 40 கோடி பேர் குளித்தார்கள் என்று சாதனையாக கூறுகிற பா.ஜ.க. அரசு எத்தனை பேர் கும்பமேளாவில் இறந்தார்கள் என்ற முழு விவரத்தை இன்று வரை வெளியிடத் தயாராக இல்லை.
இன்னும் பலர் காணாமல் போன விவரமும் தெரியாத நிலை உள்ளது. இதற்கெல்லாம் உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்.
குறிப்பாக கும்பமேளாவில் நீராட சென்றவர்கள் பலியானதற்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் ரெயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமான இவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா?
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரீகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும், பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி அனை வரையும் மன வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய அவலநிலைக்கு நரேந்திர மோடி என்ன தீர்வு காணப் போகிறார் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டிக்கெட் கிடைக்காதவர்கள் முதலில் ஹோல்டிங் ஏரியாவுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வடக்கு ரெயில்வே போர் அறையில் இந்த ஆய்வு நடக்கிறது.
டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
புதுடெல்லி ரெயில் நிலையத்தில் அணுகல் கட்டுப்பாடு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பயணிகள் முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தால், அவர்கள் நேரடியாக நிலையத்திற்குள் செல்வார்கள். டிக்கெட் கிடைக்காதவர்கள் முதலில் ஹோல்டிங் ஏரியாவுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கான கவுன்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே ஸ்டேஷனுக்குள் நுழையும் வகையில் ஹோல்டிங் ஏரியாவில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு ரெயில்வே போர் அறையில் இந்த ஆய்வு நடக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மயிலாடுதுறையை சுற்றி முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.
- மத்திய மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று ரெயில்வே மந்திரி நடவடிக்கை
பயணிகள் வசதிக்காக மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு இணை மந்திரி முருகன் ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில்,மயிலாடுதுறையை சுற்றி கும்பகோணம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. குறிப்பாக மாயுராணந்த சுவாமி கோவில், ஸ்ரீ வாதனேஷ்வர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம், சூரியனார் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், ஆலங்குடி போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள், பயணிகள் நாள்தோறும் ரெயில்கள் மூலம் மயிலாடுதுறை வழியாக இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பலர் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் இரண்டு அமைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் மந்திரி முருகன் வலியுறுத்தியிருந்தார்.
அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ண்வ், தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர் எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
47 ரெயில் நிலையங்களுக்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்த நிலையில், 32 ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.
200 ரெயில் நிலையங்களை சீரமைக்க அரசு பெரிய திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், காத்திருப்பு ஓய்வறைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும். அவற்றில் 100 ரெயில்கள் மராத்வாடாவின் லத்தூரில் உள்ள பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.
பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நெடுஞ்சாலைகள் அல்லது ரெயில்வே மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. மராத்வாடாவின் சில பகுதிகளும் இணைக்கப்படும் என தெரிவித்தார்.
- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
- அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்து.
முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. பீகாரில் இருந்து தெலுங்கானா வரை ரெயில்வே சொத்துக்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
அப்போது அவர், "அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்தானதால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனி வரவு பராமரிக்கப்படவில்லை.
இருப்பினும் 14.6.2022 முதல் 30.6.2022 வரையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது 2000 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவும், ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாலும் ரெயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. தோராயமாக மொத்தம் 102.96 கோடி ரூபாய் பயணிகளுக்கு திரும்பி அளிக்கப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரெயில் சேவைகளும் மீட்டெக்கப்பட்டுள்ளன " என்றார்.
- நாட்டின் வலிமை மிக்க பொறியாளர்களின் முயற்சியால் புல்லட் ரெயில் என்ற கனவு நனவாகும்
- புல்லட் ரெயில் திட்டமிட்ட நேரத்தில் முழு வேகத்தில் இயக்கப்படும்
சூரத்:
அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்காக குஜராத் மாநிலத்தில் 98 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தும் பணியும், தாதர் நகர் ஹவேலியில் 100 சதவீதமும், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 508 கி.மீ தூரத்திற்கு புல்லட் ரயில் பாதைக்கு 71 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிவடைந்துள்ளது.
இதில், குஜராத்தின் 8 மாவட்டங்கள் வழியாக செல்லும் 352 கி.மீ., நடைபாதையில் உள்ள ஸ்டேஷன்களுக்கு பல்வேறு பகுதிகளில் பைல்ஸ், அஸ்திவாரம், தூண்கள், பையர் கேப்கள், கர்டர்கள் வார்ப்பு மற்றும் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
இந்த திட்டத்தி; புல்லட் ரெயில், மெட்ரோ, பிஆர்டி மற்றும் சபர்மதியில் உள்ள இரண்டு இந்திய ரெயில் நிலையங்களை ஒருங்கிணைக்கும் பயணிகள் முனையம் ஆகியவை ஆகஸ்ட் 2022 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்-நவ்சாரி இடையே நடைபெறும் புல்லட் ரெயில் திட்டப் பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
புல்லட் ரெயில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 60 கி.மீ தூரம் தூண் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஒரே நேரத்தில் 150 கி.மீ.க்கு பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பாலங்கள் மற்றும் ரெயில் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பிரிவு 2026 ஆம் ஆண்டு என்ற இலக்குடன் சூரத்தில் இருந்து பிலிமோரா வரை பணிகள் மிக வேகமாக நடைபெறுகின்றன. புல்லட் ரெயில் திட்டமிட்ட நேரத்தில் முழு வேகத்தில் இயக்கப்படும்
அகமதாபாத்-மும்பை புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் பிரதமரின் கருத்துப்படி, எந்தவொரு பெரிய வேலையையும் செய்ய அனைவரின் முயற்சியும் தேவை. உங்களின் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிராக அரசை கேட்டுக் கொள்கிறேன். அகமதாபாத்தைப் போல மும்பைக்கும் புல்லட் ரெயில் தேவை. இந்தத் திட்டத்தில் அரசியல் இருக்கக் கூடாது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அனைத்து வகையான வேலைகளையும் செய்யும் நபர்களும் இதில் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் மழை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருட்களுக்கான சரக்கு கட்டணத்திற்கு விலக்கு அளித்ததுபோல், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர்களுக்கு நன்கொடையாளர்கள் அனுப்பும் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #RailwayMinister