என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் நேற்று மாலை முதல் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. காலை வேளையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று மாலை முதல் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. காலை வேளையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    • மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், காந்திநகா், மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது. மழையின் காரணமாக பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், பணிமுடிந்து சென்ற தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.மேலும் திருப்பூரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.  

    • ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டிமீட்டர் மழை பதிவானது.
    • இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான். இதனால் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் வருணபகவான் கருணை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    கடலாடி- 14.60, வாலிநோக்கம்-29.40 கமுதி- 76.20 பள்ளமோர்க்குளம் - 22 முதுகுளத்தூர்-25 பரமக்குடி -57.80 ஆர்.எஸ்.மங்கலம்-106.80 மண்டபம் -27.70 ராமநாதபுரம்-25.20 பாம்பன்-32.40 ராமேசுவரம்-40.20 தங்கச்சிமடம்-25.40 தீர்த்தாண்டத்தனம் -35 திருவாடானை -29.80 தொண்டி-53.70 வட்டாணம் -38 மாவட்டம் முழுவதும் 639.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தொண்டி பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியது. நள்ளிரவு 11 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்தபடி இருந்தது.

    இன்று காலை வரை தொண்டியில் 53.7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவாடானை பகுதியிலும் நீண்ட நேரம் மழை பெய்தது. இந்த மழை தற்போதைய விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்–பட்டிருந்த ரப்பர் படகு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
    • பேரிடர் காலங்களில் பேரூராட்சியில் இருக்க வேண்டிய தளவாட பொருட்–களான மண்–மூட்டைகள், மரக்கம்புகள், மரமறுக்கும் எந்திரம், ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பேரூ–ராட்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் கூடுதல் கலெக்டர்ர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் பேரூராட்சி பகுதியில் குறைந்த அளவு பாதிப்படையக்கூடிய பகுதிகள் மற்றும் மழைக்–காலங்களில் அப்பகுதியில் உள்ளவர்களை பாது–காப்பான இடங்களில் தங்க வைப்பது தொடர்பாக, பேரிடர் காலங்களில் பேரூராட்சியில் இருக்க வேண்டிய தளவாட பொருட்–களான மண்–மூட்டைகள், மரக்கம்புகள், மரமறுக்கும் எந்திரம், ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் பேரூராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்–பட்டிருந்த ரப்பர் படகு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    இதில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், செயல் அலுவலர் ராஜதுரை, தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத்தலைவர் கலைவாணி சப்பாணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உசிலம்பட்டியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் உடைந்தது.
    • இதனால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேக்கிழார்பட்டி தெற்கு ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சில்லாம்பட்டி ரோட்டில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. மேக்கிழார்பட்டி-பசும்பொன் நகர் பகுதியில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஊராட்சி பணியாளர்கள் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாசில்தார் கருப்பையா தலைமையில் அடைப்புகளை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    • திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சென்னை, கேரளா செல்லக்கூடிய ரெயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரமான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, கேரளா செல்லக்கூடிய ெரயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மங்களூர் சென்ட்ரலில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய வெஸ்ட் கோஸ்ட் ரெயில் தினமும் காலை 8.08 மணிக்கு திருப்பூருக்கு வந்து 8.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இந்த ெரயில் இன்று 5 மணி நேரம் 30 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.அதன்படி இந்த ெரயில் திருப்பூருக்கு மதியம் 1:30 மணிக்கு வந்து 1:32க்கு புறப்படும்.

    அதேபோன்று திப்ருகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய சிறப்பு ரெயில் 6 மணி நேரம் 14 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது.அதன்படி திருப்பூருக்கு பிற்பகல் 3.57 மணிக்கு வந்து 3.59 மணிக்கு புறப்படும். கோர்பாவில் இருந்து கொச்சுவேலி வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.43 மணிக்கு வந்து 5.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 10 மணி நேரம் 23 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    அதன்படி இந்த ரெயில் மாலை 4.07 மணிக்கு திருப்பூருக்கு வந்து 4.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இதேபோன்று பல்வேறு ரெயில்கள் இன்று ஒரு மணி நேரம் ,2 மணி நேரம் தாமதமாகவே திருப்பூருக்கு வந்தது. காலை திருப்பதி மற்றும் சென்னை செல்லக்கூடிய இன்டர்சிட்டி ரெயில் 50 நிமிடங்கள் தாமதமாக திருப்பூருக்கு வந்தது. இதேபோன்று திருவனந்தபுரம் செல்லக்கூடிய கேரளா எக்ஸ்பிரஸ், சில்சர் - கோவை எக்ஸ்பிரஸ், தன்பா செல்லக்கூடிய ரெயில்களும் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    • வாடிப்பட்டியில் விடிய, விடிய பெய்த மழையால் தி.மு.க. கவுன்சிலரின் வீடு இடிந்து விழுந்தது.
    • எதிர்பாராத விதமாக மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் பேரூராட்சி கவுன் சிலர் வீடு இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன் கோட்டை 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நல்லம்மாள் (வயது 62). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5 மணிக்கு பக்கத்து வீட்டில் உள்ள மகனை பார்ப்பதற்காக எழுந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக விடிய, விடிய பெய்த மழையால் மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், வீட்டு உபயோக பொருட்கள் இடுபாடுகளுக்குள் சிக்கின.

    அதேபோல் நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில் கருவறை வரை 3 அடி உயரத்திற்கு மழைநீர் சூழ்ந்து தெப்பக்குளமாக காட்சியளித்தது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்து பின்னர் வடிந்தது.

    வாடிப்பட்டி பகுதியில் வயல்வெளிகள், தென்னந் தோப்புகளில் மழைநீர் தேங்கி வடிந்து செல்ல முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கி நிற்கிறது.

    • கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • கலெக்டரின் பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில், இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.

    இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

    • கனமழையின் காரணமாக 25 கால்நடை இறப்புகள் பதிவாகி உள்ளது.
    • 140 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் 2 மனித உயிரிழப்புகளும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பும் என மொத்தம் 3 மனித உயிரிழப்புகள் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகி உள்ள நிலையில், இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 25 கால்நடை இறப்புகள் பதிவாகி உள்ளது. 140 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கடந்த 4-ந் தேதி (நேற்று முன்தினம்) முடிய பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 64 மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 நீர் இறைக்கும் மோட்டார்கள் தயாராக உள்ளன. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் 250 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    வருகிற 9-ந் தேதி இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை ஆயிரத்து 149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

    செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி மொத்த கொள்ளளவு 24 அடியில் 21.03 அடி தண்ணீர் இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 539 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதே போல, புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடியில் 18.80 அடி தண்ணீர் இருப்பு இருக்கிறது. தற்போது புழல் ஏரிக்கு 373 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது.
    • ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா்.

    காங்கயம்:

    காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலா்த்தும் உலா்களங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்துப் பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெறும்.

    இந்நிலையில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது. இதனால், தேங்காய் உடைத்து உலா்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா். இதனால் தேங்காய் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    • மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • தளவாட பொருட்கள் போதிய அளவில் கையிருப்பு வைத்திட அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை யொட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அதிக மழைப் பொழிவு மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாப்பான முறையில் பணியாளர்கள் பணிபுரியவும், மின் பகிர்ந்தளித்தல் மற்றும் மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை பற்றியும் ஆலோசித்தார்.

    பேரிடர் காலத்தில் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து மின்தடை ஏற்பட காரணமாக இருக்கும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தளவாட பொருட்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வுக் கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, சந்திப்பு உபகோட உதவி செயற் பொறியாளர் தங்க முருகன், பெருமாள்புரம் பிரிவு உதவி செயற்பொறியாளர் சின்னசாமி, பழையபேட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு ) சங்கர், உதவி மின் பொறியாளர்கள் உப மின் நிலையம் ஜெயந்தி, அபிராமிநாதன், ரத்தினவேணி, கார்த்திகுமார், வெங்கடேஷ், இளநிலை மின் பொறியாளர் செய்யதுஅலி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.
    • மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. கொடி மற்றும் செடி முறையில், ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது.

    வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், இதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.

    மழையில் பறிக்கும் தக்காளி சந்தைக்கு வருவதற்குள் அதிக அளவு அழுகி விடுகிறது. இதனால் அதன் மகசூல் பெருமளவு பாதித்துள்ளது. இதையடுத்து சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.செடிகளிலிருந்து பறிக்கும் தக்காளிகளை உடுமலை பகுதிகளிலுள்ள ரோட்டோரங்களிலும் சந்தை வளாகத்திலும் வீசிச்செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு கொண்டு சென்று ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.மகசூல் சரிந்து, விற்பனைக்கு வரும் தக்காளி வரத்து பெருமளவு குறைந்தாலும் அது விலை சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் 14 கிலோ கொண்ட பெட்டி 700 ரூபாய் வரை விற்றது. தற்போது கொடி தக்காளி ஒரு பெட்டி 160 ரூபாய் வரையும், செடி தக்காளி 100 முதல், 120 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

    ×