என் மலர்
நீங்கள் தேடியது "ram navami"
- காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன.
- பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
வட இந்தியாவில் நேற்று ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது.
கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் செவன் பாயிண்ட் பகுதியில் ராம நவமி ஊர்வலம் தாக்கப்பட்டதாக பாஜக எம்பி சுகந்தா மஜும்தார் நேற்று கூறியிருந்தார்.
அவரது எக்ஸ் பதிவில், "காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன. கண்ணாடித் திரைகள் உடைந்தன. குழப்பம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தற்செயலானதல்ல - இது குறிவைக்கப்பட்ட வன்முறை. முதுகெலும்பு இல்லாத காவல்துறை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.
மம்தா பானர்ஜியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே படை அவரது திருப்திப்படுத்தும் அரசியலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அப்பாவி இந்துக்களைப் பாதுகாக்க ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை" என்று கொந்தளித்திருந்தார். இதுதொடராக வீடியோ ஒன்றரையும் அவர் பகிர்ந்தார்.
ஆனால் அந்த பகுதியில் ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை எனவும் அங்கு எந்த ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கொல்கத்தா போலீஸ் தெளிவுபடுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "பார்க் சர்க்கஸில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, எந்தவொரு ஊர்வலத்திற்கும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. அந்தப் பகுதியில் அத்தகைய ஊர்வலம் எதுவும் நடக்கவில்லை.
ஒரு வாகனம் சேதமடைந்ததாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக தலையிட்டு ஒழுங்கை மீட்டெடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.
- ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி நடத்தினர்.
- பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமியைக் கொண்டாடும் போது, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர், காவி கொடிகளை ஏந்தியவாறு மசூதியின் மீது ஏறி அட்டகாசம் செய்தனர்.
ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி சென்ற இந்துத்துவாவினர் அங்குள்ள சையத் சலார் ஹாஜி தர்காவில் கபளீகரம் செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், இந்துத்துவாவினர், சையத் சலார் காஜி தர்காவில் ஏறி காவி கொடிகளை அசைப்பதும், பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக கடந்த மார்ச் 26 அன்று மகாராஷ்டிராவின் ரஹுரி மாவட்டத்தில் இந்துத்துவா கும்பல் ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் நுழைந்து மேலே ஏறி பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றிய காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
- பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்வான ஓலை சப்பரத்தில் கருட சேவை, கோரதம் புறப்பாடு ஆகியவை சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ராமநவமி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்... பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து, தேரானது 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர், உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ராமநவமி மற்றும் தேரோட்டத்தை யொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
- அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி:
நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமி திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ராமா் பிறந்த இடமான அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து காணப்படுகிறது.
அயோத்தியில் சமீபத்திய நாள்களில் சுட்டெரிக்கும் அதிக வெயில் காராணமாக பொது பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ராமா் கோவிலில் இன்று நண்பகல் வரை சிறப்பு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை மீட்க அவர்கள் மீது சரயு நதிநீரை டிரோன்கள் மூலம் தெளித்து வருகிறார்கள்.இன்று இரவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
அயோத்தி நகரில் ஆங்காங்கே நிறுவப்பட் டுள்ள எல்.இ.டி. திரைகள் மூலம் கோவிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.
பக்தா்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் பூா்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக நகருக்கு வெளியே திருப்பி விடப்பட்டுள்ளது.
- ராமரின் அவதார தினத்தை ராம நவமி, ராம ஜெயந்தி என கொண்டாடி வருகிறோம்.
- இன்று மாலையில் ராமேஸ்வரத்தில் இருப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
ராமரின் அவதார தினத்தை ராம நவமி, ராம ஜெயந்தி என கொண்டாடி வருகிறோம். நாடு முழுவதும் ராம நவமி திருநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள்.
பிரபு ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும், நமது அனைத்து முயற்சிகளிலும் நம்மை வழிநடத்தட்டும்.
இன்று மாலையில் ராமேஸ்வரத்தில் இருப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.
- சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார்.

அயோத்தி சக்கரவர்த்தி தசரதனுக்கு மகனாக பிறந்த ராமபிரான், 14 ஆண்டு வனவாசம் மற்றும் ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்கும் போராட்டம் காரணமாக, இந்திய தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி அவர் காலடிபட்ட சில முக்கிய இடங்களை இங்கே பார்க்கலாம்.

அயோத்தி
ராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இந்த இடம் தான், ராமர் பிறந்த ஊர். சிறு பிள்ளையாக அவர் விளையாடியதும், 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு, அவர் அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்ததும் இந்த இடம்தான்.
தமிழில் ராமாயணத்தை எழுதிய கம்பர். வட நாட்டில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த, ராம நாமத்தின் ஊற்றுக்கண் இந்த இடமாகும்.
வாரணாசியில் இருந்து 189 கிலோமீட்டர் தூரத்தி லும், லக்னோவில் இருந்து 128 கிலோமீட்டர் தொலை விலும் இருக்கிறது. அயோத்தி, வாரணாசி யில் இருந்து லக்னோ செல்லும் ரெயில் மார்க்கத் தில் இருக்கிறது அயோத்தி ரெயில் நிலையம்.

பக்ஸர்
விஸ்வாமித்திரர், தன்னுடைய யாகத்திற்கு இடையூறாக இருக்கும் தாடகையை அழிப்பதற்காக ராமரையும், லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் பலை, அதிபலை என்ற முக்கியமான இரண்டு மந்திரங்களை உபதேசித்த இடம் இதுவாகும்.
சித்தாசிரமம்', 'வேத சிரா', 'வேத கர்ப்பா', 'க்ருஷ்' என்று வேறு பெயர்களாலும் இந்த இடம் அழைக்கப்படுகிறது. பாட்னாவில் இருந்து மொகல்சராய் செல்லும் ரெயில் மார்க்கத்தில் முக்கியமான ரெயில்நிலையம், பக்ஸர்.

அகல்யா குண்ட்
பல நூறு ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த அகல்யை, காட்டிற்குள் வனவாசம் வந்த ராமரின் காலடிபட்டு, சாப விமோசனம் பெற்றார். அந்த இடம் 'அகல்யா குண்ட்' என்று வழங்கப்படுகிறது.
சீதாமடி-தர்பங்கா ரெயில் மார்க்கத்தில், கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்கி, மேற்கே 15 மைல் தொலைவு சென்றால் அஹியா என்ற இடம் உள்ளது. இங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அகல்யா குண்ட் உள்ளது.

ஜனக்பூர்
மிதிலை நாட்டை ஆண்ட ஜனகரின், அரசாட்சி நடை பெற்ற இடம் இந்த ஜனக்பூர். இங்கிருந்த பெரிய மைதா னத்தில்தான். சீதையை மணப்பதற்காக சிவ தனுசை ராமர் முறித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சீதாமடி என்ற இடத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் ஜனக்பூர் உள்ளது.

வால்மீகி ஆசிரமம்
பெரும் வழிப்பறி கொள்ளையனாக இருந்து, பின் மனம் மாறி ராமபிரானின் காவியத்தை எழுதிய வால்மீகி முனி வர் வாழ்ந்த இடம் இதுவாகும். பிரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் உள்ளது.
மேலும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடுரில் உள்ள கங்கை கரையிலும், சீதாமடி அருகேயும் வால்மீகி முனிவர் வசித்ததாக சொல்லப்படுகிறது.

சித்திரக்கூடம்
ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது.ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, சீதை மற்றும் லட்சுமணனுடன் இந்த சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் ஆகிய ரிஷி பெருமக்களுடன் ராமரும் தவம் இயற்றியதாக ராமாணயம் சொல்கிறது.
அலகாபாத்தில் இருந்து ஜபல்பூர் செல்லும் ரெயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சித்திரக்கூடம் ரெயில் நிலையத்தில் இறங்கி, இந்த பகுதிக்குச் செல்லலாம்.

பஞ்சவடி
அயோத்தியில் இருந்து தெற்கு நோக்கி பயணித்தராமபிரான், சில முனிவர்களின் வேண்டுகோள்படி ஓரிடத்தில் தங்க சம்மதிக்கிறார். அது ஐந்து ஆலமரக்கூட்டம் இருக்கும் இடம். எனவே அது பஞ்சவடி என்று அழைக்கப்பட்டது.
இங்கிருந்துதான் சீதையை, ராவணன் கடத்திச் சென்றான் என்று ராமாயணம் சொல்கிறது. மும்பையில் இருந்து புசாவல் செல்லும் = ரெயில் தடத்தில், நாசிக் ரோட் என்ற பெரிய ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சவடி இருக்கிறது.

கிஷ்கிந்தா
வாலியும், அவன் இறந்த பிறகு சுக்ரீவனும் அரசாட்சி செய்த வானர நகரம் இதுவாகும். கர்நாடகத்தில் இருந்து ஹூப்ளி - கதக் - பெல்லாரி ரெயில் வழித்தடத்தில் அமைந்த முக்கியமான ரெயில் நிலையம், ஹான்ஸ்பேட். இந்த இடத்தின் அருகேதான். கிஷ்கிந்தா ராஜ்யம் அமைந்திருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம்
ராமபிரான் இங்கிருந்துதான், இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்தார். பின்னர் வெற்றிக்கொடி நாட்டி திரும் பியதும், இங்குள்ள மணலில் சிவலிங்கம் ஒன்றை செய்து வழிபட்டார். அந்த மணல் லிங்கம்தான் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் கோவிலின் மூலவராக இன்றளவும் உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது.
- ஏப்ரல் 6-ந்தேதி ராம நவமி பேரணி நடத்தப்படும்.
- ஒரு கோடி மக்கள் பேரணியில் கலந்து கொள்வார்கள்.
மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இந்துக்கள் பங்கேற்கும 2 ஆயிரம் ராம நவமி பேரணிகள் ஏப்ரல் 6-ந்தேதி நடத்தப்படும் என அம்மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடி இந்துக்கள் 2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்வார்கள்.
இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை. இந்த வருட இறுதிக்கும் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிகாரி போன்ற பாஜக தலைவர்களின் எந்த வார்த்தை ஜாலங்களாலும் மாநில மக்கள் மயங்க மாட்டார்கள். மத சடங்குகளை கடைபிடிக்கவும், பண்டிகைகளை அவர்கள் விரும்பும் வழியில் கொண்டாடவும் அனைவருக்கும் உரிமை உண்டு என மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
- ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.
- மோதலின் போது சிலர் வாகனங்களுக்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலின் போது சிலர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். மேலும் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்க போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராம நவமி பேரணியில் மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
- ராம நவமிக்கு மேற்கு வங்காள அரசு பொது விடுமுறை அறிவிப்பது முதல் முறை ஆகும்.
கொல்கத்தா:
ராம நவமி பண்டிகை அடுத்த மாதம் 17-ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்காள ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராம நவமியான ஏப்ரல் 17-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ராமநாவமியின் போது ஹவுரா மற்றும் ஹுக்ளி மாவட்டங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
மேற்கு வங்காள அரசு ராம நவமிக்கு பொது விடுமுறை அறிவிப்பது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- ராம நவமியால் ஐபிஎல் தொடரின் 2 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்கள் முறையே கொல்கத்தா, சென்னை, குஜாராத் ஆகிய அணிகள் உள்ளன.
இந்த நிலையில் ராம நவமியால் ஐபிஎல் தொடரின் 2 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 17-ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா- ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 16-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ஏப்ரல் 16-ந் தேதியன்று நடைபெறவிருந்த குஜராத்- டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
- இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.
கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்...
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையொட்டி ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகிய சாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஸ்ரீராமன், சீதா உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உற்சவத்தில் சிகர நிகழ்ச்சியான இன்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது. இந்த வீதிஉலா ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.