என் மலர்
நீங்கள் தேடியது "record"
- தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சீர்காழி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக இருந்து வந்தது.
தொடர்ந்து இரவு 8 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்த நிலையில் அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் பணியை முடித்து வீடு திரும்பியவர்கள் ஆங்காங்கே மழையினால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த மழையால் சீர்காழி நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர்.சீர்காழி பழைய பேருந்து நிலையம், தேர் வடக்கு வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இந்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இருசாக்கவுண்டர் என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
- 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இருசாக்கவுண்டர் என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசாகவுண்டரின் விவசாய நிலத்தில் கோழி மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். பின்னர் இருதரப்பும் கொடுத்த புகாரின் படி கோமதி, மகாலிங்கம், வசந்த், கவுதம், இருசாகவுண்டர், மாதையன், சுப்புரு ஆகியோர் மீது தாரமங்கலம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அளவிலான ஜூடோ போட்டிகள் திருப்பூர் பாரதி வித்யா பவன் பள்ளியில் நடந்தது.
- இதில் தமிழகம், புதுவை, அந்தமான் நிகோபார், தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அளவிலான ஜூடோ போட்டிகள் திருப்பூர் பாரதி வித்யா பவன் பள்ளியில் நடந்தது.
இதில் தமிழகம், புதுவை, அந்தமான் நிகோபார், தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் 36 கிலோ எடை பிரிவில் புதுவையை சேர்ந்த தி ஸ்டடி பள்ளி மாணவர் ரக்ஷன் திறமையை வெளிப்படுத்தி முதல் பரிசாக தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மாணவரின் சாதனையை தலைமை ஜூடோ பயிற்சியாளர் சென்சாய் ராமமூர்த்தி, பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- கராத்தே இந்திய ஆர்கனைசேஷன் சார்பில் தேசிய இண்டர் சோனல் மற்றும் சப்-ஜூனியர் கராத்தே போட்டி டெல்லியில் நடந்தது.
- இதில், பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை அமைப்பு சார்பில் புதுவை அணியினர் பங்கேற்றனர். இந்த போட்டியில், சாமரன் தங்கப்பதக்கத்தையும், நித்தியபிரதாப் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி:
கராத்தே இந்திய ஆர்கனைசேஷன் சார்பில் தேசிய இண்டர் சோனல் மற்றும் சப்-ஜூனியர் கராத்தே போட்டி டெல்லியில் நடந்தது.
இதில், பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை அமைப்பு சார்பில் புதுவை அணியினர் பங்கேற்றனர். இந்த போட்டியில், சாமரன் தங்கப்பதக்கத்தையும், நித்தியபிரதாப் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
இவர்களுக்கு, பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை சார்பில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மூத்த பயிற்சியாளர் ஜோதிமணி, அமைப்பு தலைவர் அழகப்பன், பொது மேலாளர் பாலமுரளி, பொருளாளர் குமரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.
ஆசிய கராத்தே நடுவர் பழனி வேல், துணை செயலாளர் சங்கர், நிர்வாகிகள் தர்மபிரகாஷ், புருஷோத்தமன் உடனிருந்தனர்.
- சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
- இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவர் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த ஜெகநாதன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்த தி.மு.க பிரமுகரான பாண்டியன் (31) என்பவரை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய செல்வகு மார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி மூணாம் கரடு அடுத்த பொம்மனசெட்டிக்காடு அருகே போலீஸ்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாஸ்கர். இவரை நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கோழி பாஸ்கர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி அவரது தாயார் மகாலட்சுமி (வயது 64), மனைவி உஷா (42), மகள் கவுசல்யா (22) மற்றும் உறவினர்கள் லதா (40), கீதா (40), தாரணேஸ்வரி (21) ஆகியோர், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனைக் கண்ட போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்தி டவுன் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், சேலம் டவுன் போலீசார் பாஸ்கரின் மனைவி உள்பட 6 பெண்கள் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கரூர் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது
- பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுடன் சான்றிதழ்
கரூர்,
கரூர் கிச்சாஸ் சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2 சிலம்பம் ஆடுவது போல் வரையப்பட்ட ஓவியத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர். இதில் தொடர்ந்து 20 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழக தலைவர் புலியூர் வீர திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளியின் முதல்வர் பகலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய திறனறி தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செவ்வாய்ப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தேசிய திறனறி தகுதி தேர்வு எழுதினர். இதில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதே போல் புதுக்கோட்டைவிடுதி, பாப்பாபட்டி, நைன் கொள்ளை, இலைகடிவிடுதி, முதலிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் 18 பேர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவி சிவனேகா மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வட்டார கல்வி அலுவலர், வள மைய மேற்பார்வையாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.
- திருச்சியில் உலக சாதனைக்காக நடத்தப்பட்டது
- 390 மாணவிகள் சுழற்சி முறையில் சிலம்பம் சுற்றினர்
திருச்சி,
திருச்சி அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் முப்பெரும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவை கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கி சாதனை நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.முதலாவதாக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 390 மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் 23 மணி நேரம் 23 நிமிடம் 23 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். இரண்டாவதாகஅரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூட மாணவர்கள் 9 பேர் தொடர்ந்து 7 மணி நேரம் 7 நிமிடம் 7 வினாடிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். 3-வதாக ஆசான் உமா குணசேகரன் 23 நிமிடங்களில் 23 விதமான சிலம்ப ஆயுதங்களை பயன்படுத்தி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தார்.அதைத் தொடர்ந்து சிறப்பாக சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகளுக்கு நவல்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளியின் ஓய்வு பெற்ற கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திருச்சி கோவிந்தசாமி பரிசுகள் வழங்கினார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி மாயன் பில்டர்ஸ் டி.டி.ரமேஷ், ஓய்வு பெற்ற திருச்சி ரோட்டரி சங்க தலைவர் வளர்மதி குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேற்கண்ட 3 சாதனை நிகழ்வுகளையும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஜெட்லி நேரில் பார்வையிட்டு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தார். மேலும் இச்சாதனை ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்துக்கு பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூட ஆசான்கள் முத்துராமலிங்கம், கீதா , சுதாகர் மற்றும் அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
- திருச்சியில் பாரத மண்ணே நீ வாழ்க பாடலுக்கு நடனம் ஆடினர்
- ஆன்லைனிலும் இணைந்த பரத கலைஞர்கள்
திருச்சி,
இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் 6 நிமிடங்கள் 6 வினாடிகள் பாரத மண்ணே நீ வாழ்க என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்சியில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் 12,345 மாணவர்கள், பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடினர்.இந்த சாதனை நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோவை ஆல் இந்தியா என்டர்டைன்மென்ட் பவுண்டேஷன் மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏ.ஐ.எப். பைன் ஆர்ட்ஸ் குழுக்கள், 555 டான்ஸ் அகாடமிகள் இணைந்து நடத்தின.மேற்கண்ட பரதநாட்டிய நிகழ்ச்சிகள் திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், சென்னை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, ராணிப்பேட்டை, தருமபுரி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ஈரோடு, தூத்துக்குடி, ஓசூர் பல்வேறு மாவட்டங்களிலும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா, புதுடெல்லி, கொல்கத்தா ஆகிய வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா , மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் நடந்தது. ஆன்லைன் வாயிலாக நடந்த நேரலை நிகழ்ச்சிகளை ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இயக்குனர் டிராகன் ஜெட்லி உலக சாதனையாக பதிவு செய்தார்.
- தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
- சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து கருவலூரை சேர்ந்தவர்கள் விக்னேஷ் -ரோகினி. இவர்களது மகள் இனியா (வயது 5).
இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார் .இந்த நிலையில் சீர்காழியில் நடந்த ஜாக்கி புக் ஆப் வோல்டு ரெக்கார்ட நிறுவனம் நடத்தும் 10நிமிட சவால் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 135 திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதனைப் பாராட்டி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.
- ராமச்சந்திரன் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார்.
- சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32) டிரைவர். இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள கார், வேன் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ராஜா (27), பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (27), மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்வராயன் மகன் ருத்திரன் (25) உள்ளிட்ட மற்றும் சிலர் அங்கு வந்து ஏற்கனவே மதியம் எங்களிடம் ஏன் பிரச்சனை செய்தாய் எனக் கூறி ராமச்சந்திரனை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதே போல் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரில் நானும் எனது நண்பர் ராஜாவும் தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்துவிட்டு தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் உள்ள காலி மனையில் உணவு அருந்திய போது அங்கே வந்த வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (47), அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (43) மற்றும் மடம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (40) உள்ளிட்ட சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இரு தரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ராஜா, தமிழ்ச்செல்வன், ருத்திரன் மற்றும் சுதாகர், சக்திவேல், ரஞ்சித் குமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.