என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "refuge"
- காதல் விவகாரம் பற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மணப்பெண் மகாலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் மனோகரன் மகள் மகாலட்சுமி (வயது 19). இளங்கலை படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் தமிழ்வாணன் (24) என்பவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேறொரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதனால் மனமுடைந்த மகாலட்சுமி நேற்று தமிழ்வாணனுடன் வீட்டை விட்டு வெளியேறி, திருவந்திபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணக்கோலத்தில் இருவரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். மணப்பெண் மகாலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில் உள்ளதாவது, எனக்கும், தமிழ்வாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எனக்கும், தமிழ்வாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணக்கோலத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெரம்பலூரில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்
- பெற்றோர்களை போலீசார் அழைத்த போது வராததால் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்
பெரம்பலூர்,
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுகா, மங்களுர்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் நமச்சிவாயம்(வயது 24). கோவில் சிலை செய்யும் ஸ்பதியான இவரும், அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து மகள்அனிதா (வயது 23) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நமச்சிவாயமும், அனிதாவும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி, அவரது நண்பர்கள் முன்னிலையில், பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரடி முனியப்பன் கோவிலில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து நமச்சிவாயம் - அனிதா ஆகியோர் உரிய பாதுகாப்பு கோரி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ்ஸ்டேசனில் தஞ்சமடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தம்பதியின் பெற்றோர்களை விசாரணை அழைத்தார். ஆனால் பெற்றோர்கள் வரவில்லை. இதனை தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரிடம் பேசி அனுப்பி வைத்தனர்.
- மணக்கோலத்தில் காவல் நிலையத்தல் காதல் ஜோடி தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது
- இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் அவர்களின் பெற்றோ ர்களை அழைத்த போலீசார் சமரசம் செய்தனர்
புதுக்கோட்டை,
ஆலங்குடியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தலைமறைவான காதல் ஜோ டி,மணக்கோ லத்தில் வந்து காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த நிலை யில் போலீசார் அவர்களின் பெற்றோர்க ளிடம் சமரசம் செய்து மண மக்களை அனுப்பி வை த்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த தேவகி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படித்த பட்டதாரிகள் என்ற போதிலும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகினர்.இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான காதல் ஜோடிகளை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் பெங்க ளூரில் தலைம றைவாக இருந்த காதல் ஜோடி திடீரென மண க்கோலத்தில் நேற்று ஆலங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்தனர்.இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் அவர்களின் பெற்றோ ர்களை அழைத்த போலீசார் சமரசம் செய்தனர். இதனை தொடர்ந்து பெ ற்றோர்களால் இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட க்கூடாது என்று எழுத்து ப்பூர்வமாக உத்தரவாதத்தை வாங்கிக் கொண்டு மணம க்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
- திருச்சி சிறுகனூர் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்துள்ளது
- சிறுகனூர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தில் கீழத்தெருவை சேர்ந்த குமரேசன் (24). திருச்சி சிந்தாமணி புதுத்தெருவை சேர்ந்த ஹர்ஷவர்த்தினி(23). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்து சிறுகனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சிறுகனூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோரை, சிறுகனூர் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேச்சுவார்த்தை தீர்வு கிடைக்காததால் போலீசாரிடம் ஹர்ஷவர்த்தினி கணவருடன் தான் இருபேன் என்று தெரிவித்தார். மேலும் இரு தரப்பினரிடம் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு சிறுகனூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
- நஸ்ரின் பாத்திமா கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி பொள்ளாச்சிக்கு வந்தார்.
- போலீசார், இருதரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
கோவை,
தென்காசி அருகே உள்ள வி.கே.புதூரை சேர்ந்தவர் நஸ்ரின் பாத்திமா (வயது 19). இவர் பொள்ளாச்சி கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் கருப்பசாமி (21) என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு வலுத்தது.எனவே நஸ்ரின் பாத்திமா கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி பொள்ளாச்சிக்கு வந்தார். அங்கு அவருக்கு காதலர் கருப்பசாமி உடன் 26-ந்தேதி திருமணம் நடந்தது.இதனை தொடர்ந்து காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இருதரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பது என்று முடிவு செய்து உள்ளனர்.
- காதல் விவகாரம் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- 2 பேரும் துடியலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் அணை அருகே உள்ள இடது கரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21).
இவர் திருப்பூரில் உள்ள பிரிண் டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணிகண்டனுக்கு திருச்சூர் மாவட்டம் மளுக்கு பாறையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியதர்ஷினி (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார்.
எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் துடியலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.
திருமணம் முடிந்த கையோடு பிரியதர்ஷினியை, மணிகண்டன் தனது சொந்த ஊரான வால்பாறைக்கு அழைத்து சென்றார்.
மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் பாதுகாப்பு கேட்டு ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியாக அனுப்பி வைத்தனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமம் காளியம்மன் கோயில் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் கபிலன் (வயது 23). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் தினக்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகள் ஆனந்தி (19) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறியது.
ஆனந்தி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திடீரென்று கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர். மேலும் கபிலனின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆனந்தி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கபிலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். நீண்ட நேரமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சேர்த்து வைக்க முயற்சித்தனர்.இருப்பினும் பேச்சுவார்த்தையில் கபிலனின் பெற்றோர் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உதவியுடன் வந்திருந்தவர்களிடம் அறிவுரை கூறி இருவரும் சேர்ந்து வாழ அறுவுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட கபிலன், ஆனந்தி இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காளியம்மன் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்துடன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.பின்னர் அவர்கள் இருவருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி அறிவுரை கூறி ஆனந்தியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களை இடையூறு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது போலீசார் தெரிவித்தனர்.
- திருமணஞ்சேரி கோவிலில் திருமணம் செய்து கொண்ட பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சம்
- இருதரப்பு வீட்டாரிடமும் போலீசார் சமரசம்
ஆலங்குடி.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நல்லண்டார் கொல்லையை சேர்ந்த அழகர் மகன் வீரமணி (வயது 27)) இவரும், கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக் கோட்டை சேர்ந்த பழனிவேல் மகள் சினேகாவும் (வயது 19) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் கறம்பக்குடி அருகே உள்ள திரும ணஞ்சேரி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி தங்களுக்கு ப ாதுகாப்பு வழங்குமாறு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இருதரப்பு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காதல் ஜோடியை வீரமணியின் பெற்றோர் அழைத்து சென்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவிழி (வயது 21).நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட்.2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25). டெய்லர். என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் குறித்து அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை கூறி காதல் ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்