என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rehabilitation"
- இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
- இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.
மாவட்ட ஆட்சியர் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
▪️ தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பணிப் பலன்கள், மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை முறையாக பெற்று வழங்க அரசு நடவடிக்கை.
▪️ மணிமுத்தாறு அருகே அரசு சார்பில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள 240 வீடுகளை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு தயராக உள்ளது. இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.
▪️ ₹11.54 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீட்டுக்கு அரசு ₹8.5 லட்சம் மானியமாக வழங்குகிறது. மீதம் ₹3.04 லட்சத்தை மட்டும் பயனாளிகள் செலுத்த வேண்டும். கூடுதல் மானியம் அளித்து வீடுகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
▪️ 55 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மற்றும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் ஏற்பாடு செய்ய அரசு தயார்.
▪️ இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
▪️ சிறு கால்நடைப் பண்ணை அமைக்க அல்லது கறவை மாடுகள், ஆடுகள் வாங்கிட வட்டியில்லாத கடன் வழங்க நடவடிக்கை.
▪️ குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பிய பள்ளியில் சேர்க்கவும், விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
▪️ தொழிலாளர்களின் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றி வழங்க ஒற்றைச் சாரள முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
▪️ தொழிலாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் 'பர்மா பாம்பே டிரேடிங் கம்பெனி' நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.
- உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.
சென்னை:
காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளான 50 வயது நோயாளி ஒருவர், வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் பெருமூளை ரத்த நாள அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த 43 வயது பெண் ஒருவர் அண்மையில் மூளைச் சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.
அங்கிருந்து 2 மணி நேரத்துக்குள் சென்னைக்கு நுரையீரல் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து வடபழனி வரை போக்குவரத்து தடைகளோ, நெரிசலோ இல்லாமல் உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.
இதன் காரணமாக, விரைந்து கொண்டுவரப்பட்ட நுரையீரல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.
- நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
மிச்சாங் புயல் காரணமாக ஆந்திராவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டை தடா இடையே காலங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சூலூர்பேட்டை சுங்க சாவடி அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே சாலை சேதம் அடைந்தது.
அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.
கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.
நேற்று காலங்கி ஆற்றில் மழை வெள்ளம் குறைந்தது. இதையடுத்து நாயுடு பேட்டை டிஎஸ்பி ராஜகோபால் தலைமையிலான போலீசார் சேதமடைந்த சாலைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.
மேலும் அப்பகுதியில் போலீசார் நிற்கவைக்கப்பட்டு அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலை சேதம் அடைந்த இடத்தில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் சென்னை-நெல்லூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சாலையோரமாக கழிவுநீர் செல்ல பாதை அமைக்கப்பட்டு இருந்தது.
- ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரில், சாலையோரமாக கழிவுநீர் செல்ல பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக அந்த கழிவு நீர் பாதையை அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மீண்டும் கழிவு நீர் செல்வதற்கு பாதை அமைக்க சென்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்ப டுகிறது. இதைய டுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார், வார்டு உறுப்பினர் முத்துக்கு மாரசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்ன ர்பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவு நீர் பாதை மீண்டும் அமைக்க ப்பட்டது. இதையடுத்து கழிவு நீர் முறையாக சென்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பெரியாறு கால்வாய் சீரமைக்கும் பணியால் மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாவில் 22 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
- இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்ட முத்துப்பட்டியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.4.65 கோடியில் பெரியாறு கால்வாய் சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை மேலூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்டமுத்துப்பட்டி யில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் நெடுகை தூரம் 47/100 கி.மீ முதல் நெடுகை தூரம் 58/000 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இந்த பணிகள் நபார்டு நிதியுதவியு டன் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கிழக்கு வட்டத்தில் உள்ள மாங்குளம், சின்ன மாங்குளம், கண்ட முத்துபட்டி மீனாட்சிபுரம், தேத்தம்படி ஆகிய 5 கிராமங்களும், மேலூர் வட்டத்தில் உள்ள கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, ஆ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, எட்டிமங்களம், சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, திருவாதவூர் ஆகிய 10கிராமங்களும் பயன்பெறும்.
இதன் மூலம் மதுரை கிழக்கு வட்டம் மற்றும் மேலூர் வட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 192 கண்மாய்களுக்கும், 22,332 ஏக்கர் பாசன நிலங்களும் முழு பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து அந்த பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வாழ்வாதாரம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சின்னமாங்குளம் பகுதி யில் உள்ள 40குடியிருப்பு களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் மழை காலத்தில் சாலை பாதிப்பு ஏற்படு வதாகவும், இதனைத் தவிர்க்கும் வகையில் புதிதாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் மூர்த்தி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒருவார காலத்திற்குள் பணிகளை தொடங்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மேற்குறிப்பிட்ட 40 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி வழங்கவும், உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
- ஆதரவற்ற மனிதர்களை தேடி சென்று முடி வெட்டி, குளிக்க வைத்து அழகு படுத்தி புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி திரியும் ஆதரவற்றோர் மற்றும் நாகூர் தர்ஹா, நாகப்பட்டினம் புதிய பேரூந்து நிலையம், சாலைகள், இரயில் நிலையங்கள், சுற்றுலாத்தளங்களில் அழுக்கடைந்து, கிழிந்த உடைகளோடு, தாடி, முடி வளர்ந்து கவனிப்பாளர்களற்று அழுக்கடைந்து கிடக்கும் மனிதர்களை நாம் கடந்து சென்று இருப்போம்.
ஆனால் கலைவாணனோ அப்படிப்பட்ட மனிதர்களை தேடி சென்று அவர்களுக்கு தானே முடி வெட்டி, தாடி, மீசை எடுத்து, குளிக்க வைத்து அழகு படுத்தி அவர்களுக்கு புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.
மேலும் உறவுகளால் கைவிடப்பட்ட வர்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களையும் அரவணைத்து அவர்க ளுக்கு மறுவாழ்வுஅளித்து பராமரித்து வருகிறார்.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இது போன்றவர்க ளுக்கு மறு வாழ்வு அளித்துள்ள கலைவாணன் எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார்.
உறவுகளால் கைவிடப்பட்டவர்களை மீட்டு அவர்களின் உறவுகளிடம் சேர்ப்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து தொடர்ந்து அவர்களை பராமறித்து தினம் தோறும் உணவளித்து வருகிறார்.
இதுகுறித்து கலைவாணன் கூறும் போது இது போன்று சாலைகளில் உள்ள மனிதர்கள் ஒருக்காலத்தில் நன்றாக வாழ்ந்து இருக்க கூடியவர்கள்தான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படி இருக்கும் அவர்களைம் சக மனிதர்களாக நினைத்து அரவணைக்க வேண்டும் என்றார்.
ஆதவறவற்ற மனிதர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் கலைவாணன் செயல் பலராலும் பாராட்டு வருகிறது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில், தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
- நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ரூ.25,000 மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில், தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், பணக்கொடை உள்ளிட்டவை முறையாகவும் தரமாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். முகாம் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், மின்சார வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து முகாமில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஒவ்வொரு வீடாக சென்று வீடுகளின் தற்போதைய நிலை, கட்டமைப்பு, அவர்களின் உடனடி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 106 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 316 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து இலங்கை தமிழர்கள் முகாம்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் நகர்புற கட்டமைப்புடன் புதிய வீடுகள் கட்டித்தரபடும் என தெரிவித்தார். மேலும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மேல்நிலை வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் வேளாண் பட்டப்படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட உள்ளது. மகளிரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ் பாபு,மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, வட்டாட்சியர்கள் ,வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ரூ.25,000 மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது .
- சிவகங்கை மாவட்டத்தில் 13 முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவகங்கை
தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகக் சிறு கூட்ட ரங்கில் நடந்து. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:-
பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவா ழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்க ளின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி, அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் பொது மன்னிப்பில் விடுதலையான 13 முன்னாள் சிறை வாசி களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையை பெறும் பயனா ளிகள், இதன்மூலம் சிறு தொழில்கள் தொடங்கி, நல்லமுறையில் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சுந்தரராஜ், சிறை மீண்டோர் உதவி சங்கத்தின் செயலாளர் பகீரத நாச்சியப்பன், சிவகங்கை மண்டல நன்னடத்தை அலுவலர் சேதுராமன், நன்னடத்தை அலுவலர்கள் பிரியதர்ஷினி, பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
குடிமங்கலம் :
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை, 2011, 2012 ல், இருந்து போதிய அளவு பெய்யவில்லை. அதிகரித்த வறட்சி காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.போதிய தண்ணீர் இல்லாமல் உடுமலை சுற்றுப்பகுதியில், மட்டும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகின. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகியுள்ளன.
மேலும் பருவமழை காலத்திலும் பலத்த காற்றுக்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்வது தொடர்கதையாகியுள்ளது. கருகிய மரங்கள் தவிர்த்து, பல்வேறு நோய்த்தாக்குதலால் காய்ப்புத்திறன் இல்லாமல் பல மரங்கள் வெறுமையாக காட்சியளிக்கின்றன. இத்தகைய தென்னை மரங்களை அப்புறப்படுத்த கூட வழியில்லாமல் விவசாயிகள் திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் முன்பு தென்னந்தோப்பு சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மரத்துக்கு 1,700 ரூபாய் வரை விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பராமரிப்பு ஆகியவற்றுக்கும் தென்னை வளர்ச்சி வாரியம், சீரமைப்பு நிதி ஒதுக்கப்பட்டது.தென்னை விவசாயிகள் பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சீரமைப்பு நிதியை தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக பெற்றுத்தர வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்