என் மலர்
நீங்கள் தேடியது "Rejection"
- அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டவை.
- மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல உப்பிலிக்குண்டு, கூடக்கோவில், டி.கொக் குளம், தும்பக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
நூறுநாள் வேலை திட்டம் கிராம மக்களுக்கு முக்கியமான திட்டமாகும். மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு நிதியை குறைத்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப் படுவார்கள். கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.முக.-பா.ஜ.க. கூட்டணி கட்டாயத்திற்கான கூட்டணி ஆகும். இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. தரம் தாழ்ந்த அரசியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார். ராகுல் காந்தி பதவி நீக்கம் தொடர்பான வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும், நியாயம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளக்காதலன் குடும்பத்தினரும் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர்
- ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயது இளம் பெண். இவருக்கு திருமண மாகி 9 ஆண்டுகள் ஆகிறது. கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்தநிலையில் இளம் பெண் கடந்த 9 மாதங்களாக கோவை அய்யம்பாளையத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே மில்லில் வேலை பார்த்து வரும் ஆனைமலை அருகே உள்ள தாத்தூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவரு டன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் வாலிபருடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்ட இளம்பெண் கணவர் மற்றும் மகனை தவிக்க விட்டு தனது கள்ளக்கா தலனை தேடி தாத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் வாலிபரின் பெற்றோர் இளம் பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர்.
இதனையடுத்து இளம்பெண் தனது காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஆனைமலை போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீ சார் இளம்பெண்ணின் கணவரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் தனது மனைவி தனக்கு வேண்டாம் என கூறி விட்டு சென்று விட்டார். வாலிபரின் பெற்றோரும் கணவரை பிரிந்து மகனை தேடி வந்த இளம்பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
- ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.
காசா:
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் பாலஸ்தீனம் தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் காசாவுக்குள் செல்லும் எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி உள்ளது. எனவே வெளிநாட்டு நிவாரண பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையே இந்த போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
அதன்படி காசா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.
இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசாவின் ரபா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு நிராகரித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது படைகளை பின்வாங்கினால் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். எனவே அவர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.
மேலும் ரபா பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ரபா நகருக்குள் ராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அங்கு பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.
- பாஜக வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- வேட்புமனு நிராகரிப்பால் எனது மனம் உடைந்திருக்கலாம் அனால் எனது தைரியம் உடையாது. வாரணாசியில் இன்று என்னடையதையும்ம சேர்த்து 32 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் மொத்தமாக எண்ணப்பட உள்ளது. பாஜக வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முந்தினம் (மே 14) பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் பிரபல நகைச்சுவைக் கலைஞர் சியாம் ரங்கீலா நேற்று (மே 15) வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமானவர் இவர்.
ஆரம்ப காலங்களில் 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு தீவிர ஆதரவாளராக இருந்த சியாம் ரங்கீலா அதன்பின்னர் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து தனது நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இவரது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் வாரணாசியில் எதிர் வேட்பாளர் இல்லாமல் மோடி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று தான் அவரை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உறுதிமொழி படிவத்தை நிரப்பவில்லை எனக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வேட்புமனு நிராகரிப்பால் எனது மனம் உடைந்திருக்கலாம் அனால் எனது தைரியம் உடையாது. வாரணாசியில் இன்று என்னடையதையும் சேர்த்து 32 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணயத்தைப் பார்த்து சிரிப்பதா?அழுவதா? என்று தெரியவில்லை. மோடி நடிக்கவும் அழுகவும் செய்யலாம், ஆனால் நான் அழப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
- திடீரென்று உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தது.
- பட வாய்ப்பை நிராகரித்த தகவல் வலைத்தளத்தில் வைரலாகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. பாகுபலி படத்துக்கு பிறகு பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்தார்.
அனுஷ்காவுக்கு திடீரென்று உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தது. எடையை குறைக்க கடும் உடற்பயிற்சிகள் செய்தார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'மிஸ் செட்டி மிஸ்டர் போலி செட்டி' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஒரு தெலுங்கு படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் வித்தியாசமான கதையம்சத்தில் தயாராகிறதாம்.

சில தினங்களுக்கு முன்பு முன்னணி தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ரூ.5 கோடி சம்பளம் தருவதாகவும் பேசி உள்ளனர்.
ஆனால் அதில் நடிக்க அனுஷ்கா மறுத்து விட்டார். அந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் நடிக்க மறுப்பு சொன்னாராம், ரூ.5 கோடி பட வாய்ப்பை அனுஷ்கா நிராகரித்த தகவல் வலைத்தளத்தில் வைரலாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது
- பாஜக அரசின் PM CARES திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது
உலகத்தை உலுக்கிய கொரோனா தொற்று இந்தியாவுக்கும் மறக்க முடியாத இழப்புகளை விட்டுச்சென்றது. மக்கள் கொத்துக்கொத்தாக இறந்த நிலையில் அனைவரையும் மொத்தமாக குழிதோண்டிப் புதைத்த அவலங்களும் நிகழ்ந்தது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை யாரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மக்கள் சாரை சாரையாக வரிசையில் காத்துக்கிடந்தனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து நின்றன. இறப்புகளை தடுக்க முடியாமல் அரசாங்கங்கள் திணறியது. ஒருவாறாக தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பிய நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நிலையோ இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. உலகின் வெவ்வேறு அரசாங்கங்கள், சமூக அமைப்புகள் அவர்களுக்கான முன்னெடுப்புகளை செய்து வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கொரோனாவில் பெற்றோர்களை இழந்து அனாதைகளான குழந்தைகளுக்கான PM CARES திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51 சதவீத விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அரசு நன்கொடையும் வசூலித்தது. கல்வி உதவித் தொகை, 23 வயதை எட்டும் போது ரூ.10 லட்சம் நிதி, சுகாதார காப்பீடு மூலம் ஆகியவை இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகும். பி.எம். கேர்ஸ் திட்டம் மார்ச் 11, 2020 முதல் மே 05, 2023 வரை கொரோனா தோற்றால் பெற்றோர் அல்லது கார்டியனை இழந்தோர் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டிடத்தின் கீழ் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது மீதமுள்ள 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
18 விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளன. நிராகரிப்புக்கு எந் காரணமும் அரசு தரப்பில் தெரிவைக்கப்படவில்லை. முன்னதாகபாஜக அரசின் PM CARES திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதுகுறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஏ.தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ஆர்.சுமதி, ‘தீபிகாவின் தந்தை வாங்கிய கடனுக்கு தவணையை முறையாக செலுத்தவில்லை. வழக்குதாரர் கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் நர்சிங் படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த நர்சிங் படிப்பு, கல்விக்கடன் வாங்கும் திட்டத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு கல்விக் கடன் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜேந்திரன், ‘வழக்குதாரர் தந்தை தவணை செலுத்தவில்லை என்ற காரணத்துக்கு கல்விக்கடனை வழங்க மறுப்பது சரியானது இல்லை. வாங்கிய கடனுக்கு தவணையை வழக்குதாரர் தான் செலுத்த போகிறாரே தவிர, அவரது தந்தை இல்லை’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், பல பெரும் புள்ளிகளுக்கு பெரும் தொகையை வங்கிகள் கடன் வழங்குகின்றன. அவ்வாறு கடன் வாங்குபவர்கள், கடனை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடுகின்றனர். இதனால், கடன் வழங்க கையெழுத்திட்ட வங்கி ஊழியர்கள் தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, இவ்வாறு கடன் வழங்குவதால், பொதுமக்களின் பணம் முறைகேடு செய்யப்படுகிறது.
கடன் தொகை சிறியதோ, பெரியதோ பிரச்சினை இல்லை. கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப வசூலிக்க வேண்டும். இதற்காக கடன் கொடுத்து விட்டு அதை வசூலிக்க, கடன் வாங்கியவர்களின் பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதைவிட, கடன் வழங்காமல் இருப்பதே நல்லது.
எனவே, வழக்குதாரரின் தந்தை தவணை தொகையை திருப்பிச் செலுத்தாததால், இவருக்கு கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் சரியாக முடிவு எடுத்துள்ளது. நர்சிங் படிப்பு, கல்விக்கடன் திட்டத்தில் இடம்பெறாததால், வழக்குதாரர் கல்விக்கடன் பெறமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.