என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "result"
- டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
- தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும்.
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் தொண்டர்களி டம் நிதி திரட்டப்படுகிறது. நிதி வசூலில் சில மாநிலங்களில் மந்தமான நிலையே உள்ளது.
காங்கிரசின் வயதை குறிக்கும் ரூ.138, ரூ.338, ரூ.1338 என்ற அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் ரூ.138 மட்டுமே கட்டி இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்கு நிதி திரட்டுவது மற்றும் ராகுல்காந்தி தொடங்கவிருக்கும் ஒற்றுமை யாத்திரை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நிதி செலுத்த வேண்டும்.
அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனு செய்பவர்களும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ஆன்லைனில் செலுத்தி அதற்கான அத்தாட்சி ரசீதையும் இணைத்து மனு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உறுதி செய்தார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் தனியாக கூட்டம் நடந்தது.
நாடு முழுவதும் தொகுதிப் பங்கீடு மற்றும் சுமூகமான முடிவுகளுக்காக கூட்டணி கட்சிகளை அணுகி வருவதாக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும் என்றார்.
- இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.
- தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்
கோவை,
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது.
கோவை மாவட்டத்தில் 526 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 81 மாணவர்கள், 20 ஆயிரத்து 175 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 256 பேர் இந்த தேர்வை எழுதினர்.
இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 40 ஆயிரத்து 256 மாணவ, மாணவிகளில் 18 ஆயிரத்து 221 மாணவர்கள், 19 ஆயிரத்து 416 மாணவியர் என மொத்தம் 37 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.49 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.11 சதவீதம் அதிகம்.
13-வது இடம்
தேர்வு எழுதிய மாண வர்களில் 90.74 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.24 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 9-வது இடம் பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 12,638 பள்ளிகளை சேர்ந்தவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 91.58 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 83.25 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3,718 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.
கோவை மத்திய சிறையில் 45 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 47 பேர் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை எழுதினார்கள். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
- மாநில அளவில் 13வது இடத்திற்கு வந்தது
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 34,392 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். பின்னர் 258 பள்ளிகளைச் சேர்ந்த 14,390 மாணவர்களும், 16,520 மாணவிகளும் என மொத்தம் 30,910 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி–னார்.இதில் 13,520 மாணவர்கள், 16,159 மாணவிகள் என மொத்தம் 29,679 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.02 சதவீதம் ஆகும். 1,231 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் 3,482 பேர் தேர்வு எழுத வரவில்லை.திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 95.93 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு 96.02 சதவீதமாக உயர்ந்துள்ளது. .திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 258 பள்ளிகளில் 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 12 அரசு பள்ளியும், 75 தனி–யார் பள்ளிகளும் அடங் கும். மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் திருச்சி மாவட்டம் 13-வது இடத்தை பிடித்துள்ளது.
- மறுகூட்டலுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர்.
- இன்று பிற்பகலில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மறுகூட்டல் முடிவு வெளியிடப்பட்டது.
சேலம்:
தமிழக பாட திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் தாங்கள் எழுதிய விடைத்தாள் மதிப்பெண்கள் கூட்டலில் பிழை இருப்பதாக கருதுவோருக்கு மறு கூட்டல் செய்ய அரசு தேர்வு துைற வாய்ப்பு வழங்கியது.
அதன்படி மறுகூட்டலுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு இன்று பிற்பகலில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மறுகூட்டல் முடிவு வெளியிடப்பட்டது. மறுகூட்டல் முடிவு பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம் இல்லை என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
- உள்ளாட்சி அமைப்புகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கரூர் :
கரூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனிடையே 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வீரியபாளையம் 7-வது வார்டு வாக்கு எண்ணிக்கை கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புன்னம் 3-வது வார்டு வாக்கு எணணிக்கை க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
வீரியபாளையம் 7-வது வார்டில் ெமாத்தம் பதிவான 186 வாக்குகளில் 97 வாக்குகள் பெற்று ஜெயபால் வெற்றி பெற்றார். புன்னம் ஊராட்சி 3-வது வார்டில் மொத்தம் பதிவான 317 வாக்குகளில் 190 வாக்குகள் பெற்று ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
- உள்ளாட்சி அமைப்புகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
- போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட த்தில் தேர்தல் நடைபெற்ற 7 உள்ளாட்சிப் பதவிகளுக்கு புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் வாக்குகள் எண்ண ப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு 7-வது வார்டில் தி.மு.க.வைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வசம் இருந்த இடத்தை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுகாடு (பொது) ஊராட்சி மன்ற தலைவராக ஆரோக்கியசாமி வெற்றி பெற்றார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மேலப்பட்டு (பொது) ஊராட்சி மன்ற தலைவராக அயூப்கான் வெற்றி பெற்றார். அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுங்குடி(பொது) ஊராட்சி மன்ற தலைவராக வெள்ளைச்சாமி வெற்றி பெற்றார். குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தென்னங்குடி(பொது) ஊராட்சி மன்ற தலைவராக செல்லமணி வெற்றி பெற்றார். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டமான் ஊரணி (பொது) ஊராட்சி மன்ற தலைவராக தாமரைச்செல்வி வெற்றி பெற்றார். கல்லூர் கிராம ஊராட்சி வார்டு எண் 6க்கு பூமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கீரை கிராம ஊராட்சியில் வார்டு எண் 5க்கு சாத்தையா வெற்றி பெற்றார். மிரட்டுநிலை கிராம ஊராட்சிக்கு வார்டு எண் 1க்கு பாண்டிசெல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வன்னியம்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண் 1க்கு சின்னப்பொண்ணு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
- மத்திய அரசு பணிக்கான தேர்வில் சேலம், நாமக்கல் பட்டதாரிகள் தேர்ச்சி.
- பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.
சேலம்:
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.
பட்டதாரிகளுக்கான கணினி அடிப்படையிலான இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெற்றது.
4 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 536 பேர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசித்து வரும் பட்டதாரிகள், முதுநிைல பட்டதாரிகள் என ஏராளமானோர் எழுதினர்.
இந்த நிலையில் பேஸ்-9 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் தகுதியான தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ெமாத்தம் 14 ஆயிரத்து 345 பேர் அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
குறிப்பாக பட்டியலி னத்தவர் -2306 பேர், பழங்குடியினர் -1140 , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3165 , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -1014, பொதுப்பிரிவு- 6424, இ.எஸ்.எம்.-174, ஓ.எச்-68, எச்.எச்-19, வி.எச்-29, இதர மாற்றுத்திறனாளிகள் -6 என 14 ஆயிரத்து 345 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து துணை ஆவணங்களின் நகலை கையோப்பம் போட்டு சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, அனுபவம், வகை, வயது, வயது தளர்வு, முதலியவற்றை ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த பிராந்திய அலுவலகங்களுக்கு வருகிற 22-ந்தேதி விரைவு தபால் வழியாக மட்டுேம அனுப்ப வேண்டும்.
உறையின் மேல் பகுதியில் "பட்டதாரி மற்றும் அதற்கு மேல் நிலை" மற்றும் வகை எண் எழுத வேண்டும். ஒரு விண்ணப்பதார் 3 வகை பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1(டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1)-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு(2017) பிப்ரவரி 19-ந் தேதி நடந்தது. அதற்கான தேர்வு முடிவு 21.7.2017 அன்று வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 13.10.2017, 14.10.2017 மற்றும் 15.10.2017 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால் தேர்வர்கள் இதுகுறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNPSC
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா-டென்மார்க் இடையிலான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எது? என்பதை ஜபியகா என்ற ஆடு மூலம் கணிக்கப்பட்டது. ரஷியாவின் சமராவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் இந்த ஆடு, இந்த போட்டி டிராவில் முடியும் என்று கணித்துள்ளது.
அதாவது இரு நாட்டு தேசிய கொடியின் அருகில் தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவை உட்கொள்ளாமல், ‘டிரா’ என்று அட்டையில் எழுதி வைக்கப்பட்டிருந்த அருகில் உள்ள உணவை சாப்பிட்டது. முன்னதாக இரு நாட்டு அணிக்குரிய அருகில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை இரண்டு முறை முகர்ந்து பார்த்ததால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆகும் என்றும் ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த ஆட்டின் கணிப்பு மெய்யாகுமா அல்லது பொய்யாகுமா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.
பெல்ஜியம் அணி இந்த உலக கோப்பையில் மகுடம் சூடும் என்று இந்த ஆடு ஏற்கனவே கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #WorldCup2018 #Goat #AustraliaDenmark
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.
மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 91.3 சதவீதம். மாணவிகள் 94.6 சதவீதமும், மாணவர்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனனர். #TNHSCResult #PlusOneResult2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்