search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசு பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு
    X

    மத்திய அரசு பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

    • மத்திய அரசு பணிக்கான தேர்வில் சேலம், நாமக்கல் பட்டதாரிகள் தேர்ச்சி.
    • பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    பட்டதாரிகளுக்கான கணினி அடிப்படையிலான இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெற்றது.

    4 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 536 பேர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசித்து வரும் பட்டதாரிகள், முதுநிைல பட்டதாரிகள் என ஏராளமானோர் எழுதினர்.

    இந்த நிலையில் பேஸ்-9 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் தகுதியான தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ெமாத்தம் 14 ஆயிரத்து 345 பேர் அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக பட்டியலி னத்தவர் -2306 பேர், பழங்குடியினர் -1140 , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3165 , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -1014, பொதுப்பிரிவு- 6424, இ.எஸ்.எம்.-174, ஓ.எச்-68, எச்.எச்-19, வி.எச்-29, இதர மாற்றுத்திறனாளிகள் -6 என 14 ஆயிரத்து 345 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து துணை ஆவணங்களின் நகலை கையோப்பம் போட்டு சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, அனுபவம், வகை, வயது, வயது தளர்வு, முதலியவற்றை ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த பிராந்திய அலுவலகங்களுக்கு வருகிற 22-ந்தேதி விரைவு தபால் வழியாக மட்டுேம அனுப்ப வேண்டும்.

    உறையின் மேல் பகுதியில் "பட்டதாரி மற்றும் அதற்கு மேல் நிலை" மற்றும் வகை எண் எழுத வேண்டும். ஒரு விண்ணப்பதார் 3 வகை பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×