என் மலர்
நீங்கள் தேடியது "roadblock"
- கோவிலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதாக புகார்
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் வேடப்பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொதுமக்கள் நாள்தோறும் வணங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து வேடப்பாளையத்தம்மன் கோவிலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடிக் கொண்டு கோவிலுக்கு வருபவர்களை ஆபாசமாக பேசுவதாகவும், கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்க மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது சம்பந்தமாக பலமுறை தாசில்தார் அலுவலகத்திலும், காவல் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கோவிலை சொந்தம் கொண்டாடி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வந்தவாசி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
இதனால் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்
- 81 பேர் கைது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் பேரூராட்சி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் மாவட்ட தலைவர் கோபு முன்னிலையில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலின் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு 42 ரூபாயும் எருமை பாலுக்கு 51 ரூபாயும் அறிவிக்க வேண்டும். பால் ஊக்கத்தொகை போனஸ் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். ஆவினில் நடைபெறும் ஊழல் முறைகேடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் பெருமாள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுவாமிநாதன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் வீரபத்திரன் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கறவை மாடுகளுடன் கிருஷ்ணகிரி வாணியம்பாடி செல்லும் சாலையில் கோஷங்கள் எழுப்பி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் 81 பேர் கைது செய்யப்பட்டு பஸ் நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் தங்க வைத்தனர். நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
- வெள்ளரிக்காடு சேத்தகம், மாயம்பாடி, கொடுங்கல், நெய்வாசல், புணவரை ஆகிய கிராமங்களின் வாழ்வாதாரமாக சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் வனத்துறை சாலை உள்ளது.
- இச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலைக்கு செல்லும் சோபனபுரம் முதல் டாப்செங்காட்டுபட்டிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. வனத்துறையினருக்கு சொந்தமான 14 கி.மீ. சாலை, கடந்த 20 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல், மராமத்து பணிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்போது பெய்து வரும் தொடர் கனமழையாலும், மழைநீர் வடிகால் குழாய்களில் ஏற்பட்ட முழு அடைப்புகளாலும் சாலையில் மண் அரிப்பு, பள்ளங்கள் ஏற்பட்டு சாலை, வாகன போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சாலையை புதுப்பிக்க கோரி மலைவாழ் மக்கள், தன்னார்வலர்கள், சாலைப்பயனீட்டாளர்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர்.
பச்சைமலையிலுள்ள திருச்சி மாவட்டம் தென்புறநாடு ஊராட்சியை சேர்ந்த தண்ணீர்பள்ளம், சேம்பூர், கம்பூர், கீழ்க்கரை, பூதக்கால், கருவங்காடு, நச்சிலிப்பட்டி, சோளமாத்தி, பெரும்பரப்பு, பெரிய சித்தூர், டாப்செங்காட்டுப்பட்டி, குண்டக்காடி, லட்சுமணபுரம், புத்தூர், மற்றும் சேலம் மாவட்டம் ஆத்திநாடு ஊராட்சியை சேர்ந்த வெங்கமுடி, சின்ன பக்களம், பெரிய பக்களம், ஓடக்காடு, ஓடக்காடுபுதூர், சின்ன மங்கலம், பெரிய மங்கலம்,
நல்லமாத்தி, சின்ன நாகூர் பெரிய நாகூர், மலங்காடு, மேல்வஞ்சாரை, கால்வஞ்சாரை, நடுவஞ்சாரை, வெள்ளரிக்காடு சேத்தகம், மாயம்பாடி, கொடுங்கல், நெய்வாசல், புணவரை ஆகிய கிராமங்களின் வாழ்வாதாரமாக சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் வனத்துறை சாலை உள்ளது. வணிகம், சுகாதாரம், வருவாய், மின்சாரம், கல்வி, உள்ளடக்கிய அத்யாவசியமான போக்குவரத்து இச்சாலை வழியாக மட்டுமே நடைபெறுகிறது. இச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
பா.ஜ.க. சாலை மறியல்
சாலையை புதுப்பிக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்ததையடுத்து, துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையில் கட்சி பிரமுகர்கள் புறக்கணித்து சாலை மறியலை அறிவித்தனர். அதன் பேரில் நேற்று காலை உப்பிலியபுரம் அண்ணா சிலையருகே பா.ஜ.க. மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில அரசையும் வனத்துறையினரையும் வெகுவாக சாடி, கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஷ்மின் தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 போலீசார் பாதுகாப்பு பணியினில ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முன்அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதால் 61 ஆண்கள் 9 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் உப்பிலியபுரம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதி
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சி செந்தில் நகரில் இரவு முழுவதும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
மேலும் அப்ப குதியை மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். மழைநீரை வெளியேற்ற வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா ததால் 50-க்கும் மேற்பட்ட அரக்கோணம் திருத்தணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஷவரி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து மறியலை கைவிட செய்தனர்.
கைனூர் செந்தில் நகரிலிருந்து வெளியேறும் மழைநீர் கால்வாய் முலம் வடமாம்பாக்கம் ஏரிக்கு செல்ல வேண்டும். ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து பலரும் வீடுகள் கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆக்கிர மிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- போலீசார் பேச்சு வார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் காலனி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அப்பணியின் போது தனிப்பட்ட நபர் ஒருவரின் வீட்டின் பக்கத்தில் கால்வாய் போடுவதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். அதனால் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு எதிர்புறமாக கால்வாய் அமைக்க பள்ளம் எடுக்கும் பணி நடந்துள்ளது.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் எங்கள் வீட்டின் பக்கம் பள்ளம் தோண்டி விட்டார்கள் தனிப்பட்ட நபருக்காக எப்படி கால்வாய் அமைக்கும் பணியை மாற்றினீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
திட்ட மதிப்பீடு செய்தது போல் தான் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கூறி ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
கால்வாய் பணியை திட்டம் போட்டது போல் அமைக்க வேண்டும் என்று காண்டிராக்டரிடம் கூறிவிட்டு பொதுமக்களை சமரசம் செய்தனர்.
பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கி ருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆரணி-வேலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
- ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழாண்டமோட்டூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்பாசன கால்வாயில் நகராட்சி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.
அதிக அளவில் கொசுத்தொல்லை யும் உள்ளது. இதனால் அப்ப குதி மக்கள் காய்ச்சலில் அவதிப்படுவதாகவும் இந்த கழிவு நீர் விவசாய நிலங்களுக்குள் செல்வதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கழிவுநீர் செல்ல முறையாக கால்வாய் அமைக் காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கீழாண்ட மோட்டூர் சாலையில் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்த சோளிங்கர் தாசில்தார் ஆனந்தன், சோளிங்கர் பொதுப்பணித்துறை அலுவலர்சேரலா தன், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜகோ பால், கிராம உதவியாளர்கள் சிவா, வேணு மற்றும் போலீசார் சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால் வாயை தூர்வாரி கழிவுநீர் செல்லவழிசெய்வதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பாம்பு நடமாட்டம் உள்ள பகுதிகளில் வேலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்
- போலீசார் பேச்சுவார்த்தை
ஆரணி:
ஆரணியை அடுத்த அரை யாளம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின்படி பணி தள பொறுப்பாளர் சரளா மேற்பார்வையில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி முன் னிலையில் 120 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் நேற்று பெரிய ஏரியின் வழியாக பாசன கால்வாய் செல்லும் பாதையை சீரமைப்புக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தனலட்சுமி (வயது 55) என்பவரை பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது, உடனடியாக அவரை தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவம னைக்கு அழைத்து சென்ற னர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனைவரும் ஒன்று திரண்டு அரையாளம் கிராமத்தில் உள்ள ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
தற்போது மழை பெய்து வரும் காரணத்தினால் ஏரி கால்வாய் பகுதிகளில் அதிகளவில் பாம்பு நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களை வேலை செய்ய உத்தரவிட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தும் ஆரணி தாலுகாபோலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜன், சப்-இன்ஸ் சாலை மறியலில் ஈடுடட்ட பொதுமக்களிடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நந் தினி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி, துணைத்தலைவர் புவனேஸ் வரி பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அக்கிராமத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 100 நாள் வேலை திட்டத் தில் பணி செய்யும் இடத்தில் ஊராட்சி சார்பில் அவசர மருத்துவ கிட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் ஏன் வைத்திருக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
- கீரனூர் அருகே செயல்பட்டு வருகிறது
- கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மாசத்திரம் ஊராட்சி கோப்பிலிக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி, கிரஷர் செயல்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்தக் குவாரியில் கற்களை உடைப்பதற்கு வைக்கப்படும் வெடிகளினால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும், நீர்நிலைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் தூசு படிகிறது. குவாரியைச் சுற்றிலும் 7 கிராமங்களில் விவசாயமும் செய்ய முடியவில்லை. குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிகளினால் மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.
எனவே, இந்த கல்குவாாயை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அரசு அலுவலர்களிடம் மனு அளித்து வருகின்றனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் ஊழல் ஒழிப்பு பாசறையின் மாவட்டச் செயலாளர் தலைமையில் அம்மாசத்திரம் விலக்கில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் கீரனூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 2 நாட்களுக்கு தனியார் குவாரி செயல்படாது. அதற்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் குவாரி ஆய்வு செய்யப்படும். அதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மாண்டஸ் புயலில் சேதமடைந்தது
- அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
அரக்கோணம்:
மாண்டஸ் புயலால் அரக் கோணம் சுற்றியுள்ள பகுதி களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதில் பல பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து விழும் -நிலையிலும், மின் வயர்கள் அறுந்து தரையில் விழுந்து இருப்பதாகவும் கூறப்படு கிறது.
இந்த நிலையில் அரக்கோணம் அடுத்த காவனூர் நர சிங்கபுரத்தை சேர்ந்த முனியம்மாள், கஸ்தூரி, பொன்னாம்மாள் மற்றும் ஜானகி ஆகியோரின் 5 பசு மாடுகள் நேற்று முன்தினம் செம்மந்தாங்கல் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் வயர்களை மிதித்ததில் 5 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதுகுறித்து மின் வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு மின் நிறுத்தம் செய்து 24 மணி நேரமாகியும் அறுந்த மின் வயர்களையும் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களையும் சீரமைக்க வில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார், வருவாய் துறை மற்றும் மின்வாரிய அதி காரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சரி செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் 5 பசுமாடுகள் பலியான சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடுகளை அகற்ற எதிர்ப்பு
- போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் வீடுகளை அகற்ற வந்ததால் நக ராட்சிதூய்மை பணியா ளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
திருப்பத்தூர் நகராட்சி டி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்த மான இடத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 150 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகி றார்கள்.
இந்தப் பகுதியில் திருப்பத்தூர் நகராட்சி சார் பில் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த மாதம் இந்த பகுதியில் உள்ளவர்களை காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி காலி செய்வதாக எழு திக் கொடுத்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று நக ராட்சிநகர ஆய்வாளர்பொக் லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்தபொதுமக்கள் திருப் ரோட்டில் அமர்ந்து சாலைம் றியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருப் பத்தூர் டவுன் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்ற னர். இந்த மறியல் காரண மாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மதுபான கடை அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி செல்லும் சாலையில் அரசு புதிய மதுபானக் கடை அமைக்க இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில் இந்த சாலையை பயன்படுத்தும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் கல்லுப்பட்டி மடம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.க. ஒன்றிய தலைவர் சித்திரவேல் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- குடிநீர் விநியோகம் சரிவர இல்லை என புகார்
- போக்குவரத்து பாதிப்பு
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சி ஆணையாளராக குமரி மன்னன் உள்ளார். தற்போது ஆணையாளர் விடுப்பில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களாக வார்டுகளில் முறையாக குடிநீர் வருவதில்லை எனவும் குப்பைகளை சரியாக வாருவதில்லை எனவும் நகர பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
மறியல்
இந்த நிலையில் 19வது வார்டு பகுதியில் சுமார் 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வாலாஜா எதிரே எம்.பி.டி. சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், நகர செயலாளர் தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் இர்பான், ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் பாலாற்றில் உள்ள பம்பு ஹவுஸ்ல் காயில் பழுதடைந்துள்ளது இதனை சரிசெய்து 2 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகரமன்ற தலைவர் ஹரிணி உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.