என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery"

    • கோவில் பூட்டை உடைத்து மாரியம்மன் கழுத்தில் நகைகள்-உண்டியல் கொள்ளையடித்துள்ளனர்.
    • நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிகரம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் இந்திரா நகரில் பிரசித்தி பெற்ற பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈச்சம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பலர் குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக அதே ஊரைச்சேர்ந்த இளையராஜா (வயது 43) என்பவர் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியில் கோவிலில் மின் விளக்கை எரிய விட்டு விட்டு பின்னர் கோவிலை பூட்டிவிட்டு இளையராஜா வீட்டுக்கு சென்றார்.

    இன்று அதிகாலையில் 5.30 மணி அளவில் அந்த வழியாக கோவிந்தராஜ் (46) சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக இதுபற்றி அவர் தர்மகர்த்தா இளையராஜாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    தர்மகர்த்தா இளையராஜா வந்து பார்த்தபோது கோவிலின் கிரில் கேட்ைட மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்ததை அறிந்தார். மேலும் மரக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சாமி சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தாலி, பொட்டு, செயின் உள்ளிட்ட 2 பவுன் நகைகள் மற்றும் கோவிலுக்கு வெளியே உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து இளையராஜா பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 

    • தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுத்து கொண்டு தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துள்ளார்.
    • மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து பணத்தை எடுத்து சென்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தொண்டங்குறிச்சி கிராமத்தை‌ சேர்ந்தவர் இளவரசன் (வயது 55). இவர் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுத்து கொண்டு தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து கொண்டு அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிக்கு சென்றார். அவர் வங்கிக்குள் சென்ற பிறகு அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து பணத்தை எடுத்து செல்கிறார்.

    இளவரசன் அருகில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளின் வீட்டிற்கு சென்று பெட்டி யை திறந்து பார்த்தார். ஆனால் அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து இளவரசன் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி, காவ்யா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், எஸ்ஐ கலியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டனர். பின்னர் இளையராஜாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மோட்டார் சை்ககிள் பெட்டியின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்ச்சியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து வேப்பூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.
    • கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர்- வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் என்கிற பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    நேற்று நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில், கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளன. லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகுகிறது.

    • கொள்ளையன் அதே பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
    • கைது செய்த கொள்ளையனை சேலையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு தாம்பரம் அருகே சேலையூர்- வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் என்கிற பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    நேற்று நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டனர்.

    இதில், கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளன. லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்தனர்.

    இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கொள்ளையன் அதே பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    கைது செய்த கொள்ளையனை சேலையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை கொள்ளை அடிக்க பதுங்கியிருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை

    மதுரை செல்லூரில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்க ளுடன் மர்ம கும்பல் வலம் வருவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்க ப்பட்டது. கண்மாய்க்கரை, கணேசபுரம்ரெயில் தண்டவாள பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர்.

    அங்கு 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியி ருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.

    5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் தத்தனேரி, பாரதிநகர் சசிகுமார் (30), முனியாண்டி கோவில் தெரு முட்டக்கண் மகாராஜன் (23), அகிம்சாபுரம் மதன்கு மார்(27), ஓடக்கரை, முத்துராமலிங்கம் தெரு கஞ்சிமுட்டி ஜெயபாண்டி ( 33), தத்தனேரி, சிவகாமி நகர் கிடாரி கார்த்திக்(22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அண்ணாநகர் போலீசார் பாண்டி கோவில் ரிங்ரோடு, அம்மா திடல் அருகே ரோந்து சென்றனர். அங்கு அரிவாளுடன் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த யாகப்பா நகர், சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இட்லி கார்த்திக் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    எஸ்.எஸ்.காலனி, கருமா ரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் தீனா முருகேசன் (24). இவர் நேற்று எல்லீஸ் நகர், 70 அடி ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற எல்லீஸ்நகர், காந்திஜி காலனி, சம்சுதீன் மகன் முபாரக் அலி (22) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

    • பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை 98 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
    • திருட்டை மர்ம நபர்கள் பின்பக்க கதவு வழியாக இல்லாமல் சமையலறையில் உள்ள எக்ஸாஸ் பேன் இருக்கும் சிறிய துளை வழியாக மர்ம நபர்கள் உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் கீழ்பெரும்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45) விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே எலக்ட்ரிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமா இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ரமேஷ் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவு தூங்கச் சென்றார்.

    இன்று அதிகாலை ரமேஷ் மனைவி எழுந்து சமையலறைக்கு சென்றார். அப்போது அருகில் இருந்த பீரோ திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை 98 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இந்த திருட்டை மர்ம நபர்கள் பின்பக்க கதவு வழியாக இல்லாமல் சமையலறையில் உள்ள எக்ஸாஸ் பேன் இருக்கும் சிறிய துளை வழியாக மர்ம நபர்கள் உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்திருக்கும் வீட்டை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் சிறிய அளவிலான எக்ஸ்சாட் விசிறிவழியாக எப்படி இந்த திருட்டை நடத்தியுள்ளனர். இந்த திருட்டில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா அல்லது சிறுவர்கள் தான் திருடி சென்றனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் சாலா மேடு எம்.ஜி.ஓ சண்முகா நகரை சேர்ந்தவர் பாத்திமா (45) இவர் 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து சண்முக நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாத்திமா வீட்டுக்குள் சென்று பீரோவை பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் நகை திருடு போயிருப்பது கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஒரே நாளில் 2 வீடுகளில் நூதன முறையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுகாகுணமங்கலம் கிராமத்தில் ஆதம்மாளிக். இவரது வீட்டில் இரவு வீட்டின் கதவு பூட்டாமல் திறந்துவைத்துவிட்டு தூங்கும்போது 1.30 மணிக்கு மேல் பீரோவில் இருந்த நகை பணம் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார் .

    • ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.1லட்சம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 3 ஆண்ட்ராய்டு செல்போன்களையும் பறித்து சென்றனர்

    திருச்சி:

    திருவெறும்பூரில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்து கத்தி முனையில் ரூ.1லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி திருவெறும்பூர் இஸ்மாயில் நகர் பகுதியில் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் மேலாளராக குரு பிரசாத், புதுக்கோட்டை கீரனூர் மேலமாடத் தெரு பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது36) உள்ளிட்ட 3 ஊழியர்கள் பணியில் இருந்தனர். பின்னர் அவர்கள் மதிய உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

    ரூ.1லட்சம் கொள்ளை

    இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் அந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அதில் ஒருவன் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தான். மற்ற மூன்று பேரும் முகமூடி அணிந்திருந்தனர். பின்னர் அவர்கள் மேலாளர் குரு பிரசாத் விஜய் உள்ளிட்ட ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் மேஜை ட்ராவை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணம் மற்றும் 3 ஆண்ட்ராய்டு செல்போன்களை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது குறித்து விஜய் திருவரம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் பஸ் நிலையப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த வாலிபர், அவரை மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், அவரை மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தை பறித்து சென்றது சேலத்தை சேர்ந்த கொள்ளையன் பூபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பூபாலகிருஷ்ணனை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • சுக்தேவ் வியாழக்கிழமை தோறும் கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்கு நகைகளை சப்ளை செய்வது வழக்கம்.
    • நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாகோல், சினேகாபுரியில் ராஜஸ்தான் மாநிலம் பாலிய சேர்ந்த கல்யாண் சவுத்ரி என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். செகந்திராபாத்தை சேர்ந்தவர் சுக் தேவ். நகை மொத்த வியாபாரியான இவர் நகைக்கடைகளுக்கு நகை சப்ளை செய்து வருகிறார்.

    சுக்தேவ் வியாழக்கிழமை தோறும் கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்கு நகைகளை சப்ளை செய்வது வழக்கம். இவர் நகை சப்ளை செய்வதை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சுக் தேவ் நேற்று இரவு வழக்கம்போல் நகைகளை கல்யாண் சவுத்ரி கடைக்கு கொண்டு வந்தார். நகைகளை சவுத்ரி சரி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது 3 வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர்.

    இரவு 10 மணி அளவில் 2 பைக்கில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கடைக்கு சிறிது தூரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு 2 பேர் அங்கேயே நின்று கொண்டனர். 2 வாலிபர்கள் மட்டும் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு திடீரென கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்குள் புகுந்தனர். அவர்கள் இரண்டு பேரும் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து மிரட்டி கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு கடையின் ஷட்டரை மூடினர்.

    பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை பணத்தை கல்யாண் சவுத்ரியிடம் கேட்டனர். இதனைக் கண்ட கடையில் இருந்த ஊழியர்கள் அங்கு இருந்த அறைகளுக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். கல்யாண் சவுத்ரி மற்றும் சுக் தேவ் ஆகியோர் நகை பணத்தை தர மறுத்ததால் அவர்கள் மீது வாலிபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதில் கல்யாணி சவுத்ரி மார்பில் 3 துப்பாக்கி குண்டுகளும், சுக் தேவ் மூக்கின் மீது ஒரு துப்பாக்கி குண்டும் பாய்ந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர்.

    துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் வெளியே நின்று கொண்டு இருந்த வாடிக்கையாளர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர்.

    அப்போது வாலிபர்கள் நகை பணத்துடன் வெளியே வருவதை கண்ட அவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். தங்களை பிடிக்க முயற்சி செய்தால் துப்பாக்கியில் சுட்டு விடுவதாக வாலிபர்கள் மிரட்டுதால் யாரும் அவர்களை நெருங்க வில்லை.

    இதையடுத்து நகை பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் தயார் நிலையில் இருந்தவர்களுடன் தப்பி சென்றனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரச்ச கொண்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் சுதிர் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க ஐதராபாத் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 15 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    • ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
    • அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை மெயின்ரோட்டில் அரசு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதை நோட்டமிட்ட மர்மநபர் தலைகவசம் அணிந்தபடி ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த கற்களை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை திறக்க முயன்றார்.

    இதனால் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த நபர் ஏ.டி.எம்.எந்திரத்தில் கற்களால் உடைக்க முயன்றார். அப்போது திடீரென அதிக சத்தத்துடன் அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேறி மோட்டார் சைக்களில் தப்பினார்.

    அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையம் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் இருவரும் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்துள்ளனர்.
    • வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் பணிக்கம்பட்டியை அடுத்த சின்னிய கவுண்டன்புதூரை சேர்ந்த சாமிநாதன் என்பவரது மனைவி பாப்பம்மாள் (வயது 70). இவர் அவரது வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 3 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்துள்ளனர். இதனை பார்த்த பாப்பம்மாள் சத்தம் போடவே அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து பல்லடம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு முயற்சி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதுபோல் பணிக்கம்பட்டியை அடுத்த ரங்கசமுத்திரத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி காளியம்மாள் (வயது 65). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் மதியம் சுமார் ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்தரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×